Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
குடும்ப கட்டுப்பாடு முடியுமா? 

குடும்ப கட்டுப்பாடு முடியுமா?

  • 6

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நேற்று மருத்துபீட மாணவரொருவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது குடும்பக் கட்டுப்பாடு பற்றிய இஸ்லாத்தின் பார்வையை வினவினார். எனது புரிதல் இவ்வாறிருந்தது:

குடும்பக் கட்டுப்பாட்டை இரு வகையாக நோக்கலாம். அதில் முதலாவது தற்காலிக கட்டுப்பாடு. அதனை “குடும்ப திட்டமிடல்” எனவும் கூறலாம். இது கட்டாயம் செய்யப்பட வேண்டும்.

முதல் குழந்தை கிடைத்து சில நாட்களில் மீண்டும் கர்ப்பம் ஆகுதல் அக்குழந்தை மீது செய்ய வேண்டிய கடமைகளில் பலதை இல்லாமல் செய்து விடும். தாயும் உடல் ரீதியாக பலவீனப்பட்டிருப்பாள். மானசீக ரீதியாகவும் அவள் தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும். இரு குழந்தைகளுக்கு மத்தியான இடைவெளி பாலூட்டும் காலமான இரண்டு வருடங்களாவது இருப்பது சிறந்தது.

குடும்ப கட்டுப்பாட்டுக்கு பயன்படுத்தும் மருந்து அல்லது சாதனம் தாய்க்கு அல்லது அடுத்து கிடைக்க இருக்கும் குழந்தைக்கு தீங்காக அமையாது என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டும். தீங்காக அமையுமாயின் அவ்ற்றை தவிர்ந்து கொள்வது அவசியம். இது கணவனும் மனைவியும் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் எடுக்கும் தனிப்பட்ட தீர்மானம்.

ஒட்டுமொத்த சமூகமாக சேர்ந்து குறிப்பிட்ட எண்ணிக்கை பிள்ளைகளை தீர்மானித்தல் இரண்டாம் வகை. நாம் இருவர் நமக்கிருவர் என்ற கோட்பாடு இன்று உலகில் இருக்கிறது. பிள்ளைகள் பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக செல்லப்பிராணிகளை எடுத்து வளர்க்கும் போக்கு உருவாகி வளர்ந்து வருகிறது. முஸ்லிம் சமூகத்தினுள் இவ்வகையான குடும்ப கட்டமைப்பு இன்னும் ஊடுருவவில்லை.

முஸ்லிம்கள் இன்று பல பிரச்சினைகளுடன் வாழ்வதாகவும் அவர்களது எதிர்கால சந்ததி பற்றி மிகையான அச்சம் இருப்பதாகவும் கருத முடிகிறது. குடும்ப அங்கத்தவத்களை குறைத்துக் கொள்ளும் போக்கும் தோற்றம்பெற வாய்ப்பிருக்கிறது.

சமூகமாக சேர்ந்து எண்ணிக்கையை வரையறுக்க முடியாது. கணவன்- மனைவி பரஸ்பர புரிந்துணர்வு அடிப்படையில் பிள்ளைகளின் எண்ணிக்கையை அவர்கள் தீர்மானித்துக் கொள்வார்கள். ஆனால் ஆரோக்கியமான, நல்லதொரு பரம்பரை உருவாக்கப்பட வேண்டும்.

இஸ்லாத்தின் தூதை சுமந்து செல்லக்கூடியதொரு பரம்பரை. இஸ்லாம் முன்வைக்கும் பண்பாட்டு விழுமியங்களை நாட்டில் அறிமுகப்படுத்தி பண்பாட்டுப் புரட்சியொன்றை ஏற்படுத்தக் கூடிய பரம்பரை ஒன்று தேவைப்படுகிறது. ரஹ்மதன் லில் ஆலமீன் தூதை அர்பணிப்புடன் சுமக்கும் பரம்பரை.

அல்லாஹ்வுடைய ரிஸ்க் ஒருபோதும் குறைந்து விடுவதில்லை. நாம் சூரையாடுவதுதான் பிரச்சினை. ஒட்டு மொத்த சமூகத்தின் சொத்தும் ஒரு சிறு தொகையினரிடத்தில் குவிந்து கிடக்கிறது. அவர்கள் நான்கைந்து பரம்பரைகளுக்காக சேமித்து வைத்திருக்கின்றனர். அநீதி தலைவிரித்தாடுகிறது. பெண்கள் எப்போதும் ஒதுக்கப்பட்டே வருகின்றனர். விளிம்புநிலை மக்கள் மென்மேலும் ஓரம்கட்டப்படுகின்றனர். அன்பு, நீதி, சமத்துவம் போன்ற விழுமியங்களுக்காக வாழும் பரம்பரையொன்றை உருவாக்க வேண்டியுள்ளது.

ஜப்பான் சமூகத்திடமிருந்து பெற முடியுமான படிப்பினைகள் இருக்கின்றன. ஹிரோஷிமா அழிக்கப்பட்டு அது மீண்டும் எவ்வாறு எழுந்து வந்தது? அங்கு பெண்கள் சமூக விவகாரங்களில் ஈடுபடுகிறார்கள். நேர்த்தி, அர்ப்பணிப்பு, கடமை உணர்வு, தொழில் பற்று போன்ற பண்பு கொண்ட புதிய பரம்பரையொன்று உருவாக்கப்படுகிறது. பாடசாலைகளும் கல்வித் திட்டங்களும் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. அமெரிக்காவுடனும் ஐரோப்பாவுடனும் போட்டிபோடும் நாடாக உருவாக்கப்படுகிறது.

அங்கும் பிழைகளிருக்கின்றன. அதனை மறுப்பதிற்கில்லை. பெண்களை வியாபாரப் பொருட்களாக பயன்படுத்தும் நிலையை மருக்கிறோம். அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறான பிழைகளை நாம் தத்தெடுத்துக் கொள்ளக் கூடாது.

அல்லாஹ்வுடனான உறவை வலுப்படுத்தக் கூடிய மஸ்ஜிதுக்குக் கூட நாம் பெண்களை அனுமதிக்க தயாரில்லை. சமூகத்தின் அரைப்பாதியை நாம் பித்னா என்று கூறி உலகம் தெறியாத, கல்வியறிவு இல்லாதவர்களாகவே உருவாக்க விரும்புகிறோம். அவர்கள் எப்படி உலகை மாற்றக் கூடிய, பண்பாட்டுப் புரட்சியை ஏற்படுத்தக் கூடிய புதிய பரம்பரையொன்றை பெற்றெடுத்து வளர்க்கப்போகிறார்கள்!!!

Rishard Najimudeen Naleemi
வியூகம் வெளியீட்டு மையம்

நேற்று மருத்துபீட மாணவரொருவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது குடும்பக் கட்டுப்பாடு பற்றிய இஸ்லாத்தின் பார்வையை வினவினார். எனது புரிதல் இவ்வாறிருந்தது: குடும்பக் கட்டுப்பாட்டை இரு வகையாக நோக்கலாம். அதில் முதலாவது தற்காலிக கட்டுப்பாடு. அதனை…

நேற்று மருத்துபீட மாணவரொருவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது குடும்பக் கட்டுப்பாடு பற்றிய இஸ்லாத்தின் பார்வையை வினவினார். எனது புரிதல் இவ்வாறிருந்தது: குடும்பக் கட்டுப்பாட்டை இரு வகையாக நோக்கலாம். அதில் முதலாவது தற்காலிக கட்டுப்பாடு. அதனை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *