எழுந்து வா சிகரம் தொட

  • 45

நீ முன்னேறும் போது உனக்கு முன்னால்
கை தட்டி மகிழும் இந்த உலகம்
உனக்கு பின்னால் கை நீட்டி
எதிர்க்க காத்துக் கொண்டிருக்கிறது

உன் வளர்ச்சியை தகுந்த காரணமின்றி
விமர்சிக்கும் போது அறிந்து கொள்
நீ ஜெயித்து கொண்டிருக்கிறாய்

காய்க்கின்ற மரத்துக்கே
கல்லடிகள் சொந்தமாகும்
ஜெயிப்பவனுக்கே
சொல்லடிகளும் வந்து சேரும்

நீ நம்பிக்கை இழந்து
நான்கு சுவற்றுக்குள்
முடங்கி விடாதே

எத்தனையோ தடைகளை கடந்து விட்டாய்
இதையும் உடைத்தெறிந்து விடு

உனக்காக குரல் கொடுக்க நீ அறியாத
எத்தனையோ உறவுகள் காத்திருக்கின்றனர்
நீ கேட்கும் இறை நேச சொந்தங்கள் அவர்கள்

நீ உன்னை முன்னேற்றி விட்டாய்
இன்னும் முன்னேறி
தடம் பதிக்க உள்ளாய்

உடைந்து போகாதே பெண்ணே
உடைத்து விடு – தடைகளை

உடைத்தால் உடைந்து போகும்
உனக்கான விமர்சனங்களும்

Noor Shahidha.
SEUSL.
Badulla.

நீ முன்னேறும் போது உனக்கு முன்னால் கை தட்டி மகிழும் இந்த உலகம் உனக்கு பின்னால் கை நீட்டி எதிர்க்க காத்துக் கொண்டிருக்கிறது உன் வளர்ச்சியை தகுந்த காரணமின்றி விமர்சிக்கும் போது அறிந்து கொள்…

நீ முன்னேறும் போது உனக்கு முன்னால் கை தட்டி மகிழும் இந்த உலகம் உனக்கு பின்னால் கை நீட்டி எதிர்க்க காத்துக் கொண்டிருக்கிறது உன் வளர்ச்சியை தகுந்த காரணமின்றி விமர்சிக்கும் போது அறிந்து கொள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *