Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஒரு கைப்பேசியா வாங்கிட முடியுமா? 

ஒரு கைப்பேசியா வாங்கிட முடியுமா?

  • 55

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

புத்தகக் கல்வி இன்று ஒன்லைன் கல்வியாக
பக்கம் பக்கமாக நூலை புரட்டியோர்
இன்று கைப்பேசிக்குள் கல்வியை
தேட தொழில்நுட்பம்
தடம்பதித்துவிட்டது இன்று

கொரோனாவின் கோரத்தால்
விடுமுறையான கல்வியும்
அச்சப்பட்ட பொழுதுகளும்
பொய்ப்பித்து விட்டது
இன்றைய தொழில்நுட்பம்

இதன் வளர்ச்சி zoom ஆக உருவெடுக்க
இதுவரை தேடப்படாத கல்வி
இன்று பலராலும் தேடப்படுகிறது

தொழிநுட்ப கல்வியின் சாத்தியத்தை
சிந்தித்த உலகை சாத்தியப்பட
வைத்து விட்டது கொரோனா

நாட்டில் திடீரென ஏற்பட்ட
அசாதாரண சூழ்நிலையால்
எனது இளமைக் கனவுகளும்
வீட்டுக்குள் சிறைப்பட்டு போனது
அமாவாசையில் நிலவை
காண துடிக்கும் விழிகளை போல
பாடசாலை நாட்களில்
விடுமுறைக்காக ஏங்கிய மனமோ
இன்று வீட்டில் இருந்து வெளியேற
விடுதலை தேடுகிறது

புத்தகப் பையை சுமக்கும் போது தெரியாத வலி
புத்தகங்கள் தொலைவானதும் தெரிகிறது
இலவச கல்வியை இலவசமாக படித்த காலம் போய்
அதை கைப்பேசிக்குள் காசு கொடுத்து
படிக்கும் நிலை வந்து விட்டது

எனது கனவுகளும் எட்டாத தூரத்தில் நின்று
என்னை ஏளனமாக பார்த்து சிரிக்கிறது

ஒரு வேளை சோற்றுக்கே
கை பிசையும் எனக்கு
ஒரு கைப்பேசியையா
வாங்கிட முடியுமா?

SALAHUDEEN FATHIMA SHAMA,
ANURADHAPURA,
SOUTH EASTERN UNIVERSITY OF SRILANKA.

புத்தகக் கல்வி இன்று ஒன்லைன் கல்வியாக பக்கம் பக்கமாக நூலை புரட்டியோர் இன்று கைப்பேசிக்குள் கல்வியை தேட தொழில்நுட்பம் தடம்பதித்துவிட்டது இன்று கொரோனாவின் கோரத்தால் விடுமுறையான கல்வியும் அச்சப்பட்ட பொழுதுகளும் பொய்ப்பித்து விட்டது இன்றைய…

புத்தகக் கல்வி இன்று ஒன்லைன் கல்வியாக பக்கம் பக்கமாக நூலை புரட்டியோர் இன்று கைப்பேசிக்குள் கல்வியை தேட தொழில்நுட்பம் தடம்பதித்துவிட்டது இன்று கொரோனாவின் கோரத்தால் விடுமுறையான கல்வியும் அச்சப்பட்ட பொழுதுகளும் பொய்ப்பித்து விட்டது இன்றைய…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *