Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஓர் நேசத்தின் வலி 

ஓர் நேசத்தின் வலி

  • 38

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

சப்னா சப்னா எழும்புங்கோஏன் முகமெல்லாம் ஒரு மாதிரியாக இருக்கு உடம்புக்கு என்ன சரியா என்று தன் தோழை பரிவோடு தட்டியெழுப்பிய தன் சகோதரி risla விடம்ஒன்னுமில்ல தாத்தா இன்னைக்கு office  வேலை over அதுதான் தலைவலியாக இருக்குஎன்று தன் சகோதரியை சமாதானப்படுத்திய shafna வால் தன் மனதை ஒரு நிலைப்படுத்த முடியாமல் தவித்தாள். அவளது மனம் பல்வேறுபட்ட சிந்தனையில் சுலன்று கொண்டிருந்தது.

shafna சீதனம் எனும் கோரப்பிடியில் சிக்குண்டிருப்பவள் அன்பான சுபாவம், சுயநலமற்ற மனம், தானுண்டு தன் வேலை உண்டு என இருப்பவள். ஆனால் யாரும் கடினமாக பேசினால் கூட சட்டென்று கண்ணீர் விடும் இளகிய மனம் கொண்ட அவளுக்கு ஆண்கள் விடயத்தில் எப்போதும் ஒரு பயம் இருக்கும் இந்த பயத்திற்கு அவளது கடந்த கால வாழ்க்கையின் கசப்பான அனுபவங்களும் ஒரு காரணம் தான். தாயை இழந்த shafna வுக்கு எல்லாமே சகோதரி risla தான்

மஃரிப் அதான் ஓசை தன் சிந்தனையை சிதறடிக்க தொழுகைக்காக எழுந்தாள்,”யா அல்லாஹ் farsan க்கு office ஆல் எந்த பிரச்சினையும் வந்துவிடக் கூடாது அவன் விலகிச் செல்லாமலிருக்க நீ தான் உதவிடனும்” என்று  இறைவனிடம் இரு கரமேந்தியவளின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாக ஊற்றெடுத்தது. farsan, shafna வின் office ல் மனித வள முகாமைத்துவ பிரிவில் உதவி முகாமையாளராக பணியாற்றுபவன். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் சுறுசுறுப்பாக இயங்கும் அவன் புன்னகை மீது shafna வுக்கு எப்பொழுதும் ஒரு பொறாமை தான்.”வீட்ல ஒரு பிரச்சினை என்றாலே office  அதை முகம்  காட்டிக் கொடுத்துவிடும் அதிலும் முகம் பார்த்தே சாத்திரம் சொல்லத் தொடங்கும் office,தோழி வீனா…… சே இவனால் மட்டும் எப்படி என்றுதன்னுள்ளே அடிக்கடி யோசிப்பாள்.

அன்று திங்கட்கிழமை office முகாமையாளருடன் ஏற்பட்ட முறுகல் நிலையால் farsan office ல் இருந்து விலகுவதற்கான கடிதத்தை உரிமையாளருக்கு அனுப்பியுள்ளதை கேள்வியுற்ற shafna வால் தாங்கிக் கொள்ள முடியாமல் போய்விட்டது. அவனது கையை பிடித்து கதறியழனும் போலிருந்தது அவளுக்கு. விழி நீர் கன்னங்களை நனைக்க சென்ற மாத நிகழ்வின் நினைவுகள் அவளை ஆக்கிரமிக்கத் தொடங்கின.

அன்று திங்கட்கிழமை office ஊழியர்கள் அனைவருக்கும் மேலதிக 10 நாட்கள் வருட இறுதி விடுமுறை வழங்கப்பட, குறித்த வேலைகள் பூரணப்படுத்தப்படாததால் fasrsan, shafna ஆகியோரது விடுமுறை ரத்து செய்யப்பட்டு office வர வேண்டிய நிலை. அவளுக்கோஒரு புறம் கவலை இன்னொரு புறம் பயம் மனதை ஆட்கொள்ளநான் மட்டும் எப்படி தனியாக  வேலை செய்வதுஎன்று நினைத்து திகைத்தாள்.

மறுநாள் வழமை போன்றே office  போக தயாரானவளுக்கு மனதில் படபடப்பு இருந்தும், தன்னை சுதாகரித்துக் கொண்டு office போய் சேர்ந்தாள்.2 ஏக்கர் நிலப்பரப்பில் பல மாடி கட்டிடங்கள் கொண்டு நிரப்பப்பட்டிருந்த அந்த நிறுவனம் ஊழியர்களின் விடுமுறை காரணமாக வெறிச்சோடிக் காணப்பட்டது. முன் வாயிலின் பக்க மூலையில் இருந்த செக்யூரிட்டி தன்னிலை மறந்து smartphone ல் புதைந்திருந்தான். தான் வேலை செய்யும் தொகுதிக்கு சென்ற shafna க்கு மனசு படபடக்கத் தொடங்கியது.

மனித ஓசை ஏதுமின்றி மயானத்தின் நடுவே இருப்பது போன்றதொரு உணர்வு அவளை ஆட்கொள்ளத் தொடங்கியது. மெல்லிய குளிர் காற்றுடன் அசைந்தாடும் மரங்களை அவதானித்தவளுக்கு பேய் பிசாசு கதையெல்லாம் மனசுக்குள் வந்து போகத் தொடங்கியது, அவளது நிலை புரியாத ஆந்தையொன்று தன் அலறல் மூலம் அவளை மேலும் பயம் காட்டிச் சென்றது.

என்ன shafna எங்கயோ பார்த்திட்டு இருக்கீங்கஎன்ற farsan ன் குரல் கேட்டு திகைத்தவள், “எனக்கு பயமாக இருக்குது யாரோ நடமாடுற மாதிரி ஒரு feel பேய் பிசாசுகளோ தெரியலஹா,.,ஹா,.,, பேயோடயெல்லாம் selfi எடுத்த ஆட்கள் நாங்க என்று சொல்லிக் கொண்டே office கதவை திறக்க shafna வும் அவனை பின் தொடர்ந்து தன் seat ல் போய் உட்கார்ந்தாள்.

தனது 5 வருட office வாழ்க்கையில் இப்படியான ஓர் சங்கடத்தை அவள் எதிர்கொண்டிருக்கவில்லை. 2ஏக்கர் நிலப்பரப்பின் ஓர் கட்டடத்தினுள்ளே தனியாக எப்படி 10 நாட்கள்... என யோசிக்கும் போதே, “letter ஒன்னு இருக்கு shafna  அவசரமாக type செய்யனும்என்று farsan கூற தன் வேலையில் மூழ்கினாலும், அவளது மனதை ஒர் பயம் ஆட்கொண்டிருந்தது. 5 வருடங்களுக்கு முன்பு வேலை செய்த company ல் அவள் பட்ட அவஸ்தைகள் ஏராளம், பசுத்தோல் போர்த்திய புலியாக காணப்பட்ட தனது Manager ஐ மனதில் திட்டிக் கொண்டாள். “plantea குடிப்போமா” என்று பரிவோடு கேட்டவனாக shafna வின் பக்கத்து சீட்டில் உட்கார்ந்தவன் “plantea என்றால் அலாதிப்பிரியம் ஒரு நாளைக்கு  ஐந்து, ஆறு plantea குடிப்பேன்” என்று சிரித்துக் கொண்டே சொன்னவனைப் பார்த்துசம்பாரி
க்குற
காசெல்லாம்  சீனி வாங்கியே முடிஞ்சிடும்.” என்று நக்கலாய் shafna பதிலளிக்க, farsan உடன் சேர்ந்து அவளும் சிரித்தே விட்டாள். “நான் வெளில கடைக்கு போய்ட்டு வாரேன்” என்று சொல்லி கிளம்பியவனைம்”  என்று ஒற்றை வார்த்தையில் அவன் போவதை விரும்பாமல் பதிலளித்தவள், தன் வாழ்வின் இறந்தகால நினைவுக்குள் மூழ்கிப் போனாள். தனது பழைய company ல் Manager தன்னிடம் தவறாக நடக்க முற்பட்டதையும் தன் ஆத்திரம் தீர அவனை கன்னத்தில் அறைந்ததையும் அவளால் இன்றும் மறக்க முடியவில்லை.

நம் சமூகத்தில் எத்தனை ஓநாய் கூட்டங்கள் என்று மனதில் நினைத்தவளுக்கு சட்டென பொழிந்த மழையின் இரைச்சல் அவளை நிகழ்காலத்துக்கு கொண்டுவர farsan கொட்டும் மழையில் நனைந்திட்டு இருப்பான். என நினைத்தவள், அவனது computer முன்னாடி போய் உட்கார்ந்தாள், அவளது மனதின் நினைவுகளைப் போன்றே மழையுடனான காற்று சுழன்று வீசத் தொடங்கியது. “சப்னா” என்று சொல்லிக் கொண்டே தன்னை நோக்கி ஓடி வந்த செக்யூரிடியை கேள்விக் குறியோடு பார்த்தவளுக்குபுள்ளைக்கு சுகமில்லை என்று வீட்ல call பண்ணிணாங்க நான் ஊருக்கு போகணும் farsan வந்தா சொல்லுங்க  என்று சொல்லியவாறே சாவிக்கொத்தை கொடுத்துவிட்டு சென்றுவிட செய்வதறியாது நின்றாள். பலத்த மழையுடன் இடியும் சேர்ந்து கொள்ள பயமிகுதியால் farsan இன் வரவை பார்த்திருந்தாள். பலத்த இடியோசை காதுகளை பிளக்க கண் கலங்கிப் போனாள். தூரத்தே, கொட்டும் மழையில் ஓடிக்கொண்டு வந்த  farsan  பார்க்க அவளுக்கு பாவமாக இருந்தது. “மழை விட்ட பிறகு வந்திருக்கலாமே” என சொன்னவளைப் பார்த்து

வழிய வரும் போது செக்யூரிட்டி விசயத சொன்னான் மழையும் வேறு நீங்க தனியாக இருக்கீங்க” என்று சொன்னவன்shafna என்னாச்சு ஏன் கண் எல்லாம் கலங்கி இருக்குவீட்டுல என்ன சரி பிரச்சினையா என்று பரிவோடு கேட்டவனிடம் தன் மனதிலுள்ள பாசத்தை அடக்கியவளாக

ஒன்னுமில்ல தலைவலியா இருக்கு, அது ok ஆகிடும் சரி dinning hall போவோம் பசிக்குதுஎன்று அவள் சொல்ல இருவரும் சாப்பாட்டிற்காக சென்றனர்.

சாப்பிட்டு முடிந்து தன் computer முன் வந்து உட்கார்ந்தவளுக்கு  வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறினாள், அவள் மனசெல்லாம் பக்கத்தில் இருக்கும் farsan, பற்றிய எண்ணமாகவே இருந்தது. கடந்த கால வாழ்க்கையில் பல ஓநாய் கூட்டங்களிலிருந்து தப்பி வந்த பெண் அல்லவா அவள். தன்னையறியாமலேயே அடிக்கடி farsan  நோக்கிய அவளுக்கு அவன் மீது இனம் புரியாத பாசம் துளிர்விடத் தொடங்கியது.

“ஒரு பெண்  சந்தர்ப்ப சூழ்நிலையில் தனிமையில் இருந்தால் அது ஒரு ஆணுக்கு அவகாசமில்லை அமானிதம் என்பதை உணர மறந்தவர்கள் நம் சமூகத்தில் நிறைய பேர் உள்ள நிலையில் farsan  நினைத்து பெருமைப்பட்டால். “என்ன shafna பேசாமலே இருக்குறீங்க நக்கலாக ஏதும் சொல்லுங்களேன்” என்றவனின் வார்த்தைக்கு அவனை நோக்கியவள், உரோமங்களால் நிறைந்திருந்த அவனது கைகளையும் தாடியாலும் மீசையாலும் நிரப்பப்பட்ட ஆண்மைக்கேயுரிய முகத்தினையும் அடிக்கடி shirt கோலரின் மத்தியில் வந்து எட்டிப் பார்க்கும் அந்த உரோமக்கூட்டங்களையும் அவதானித்தவளாக தன் மனதுக்குள்ளே “your really very grate farsan” உன் ஆண்மைக்குள் கண்ணியம் நிறைந்துள்ளது என்று தன்னுள்ளே சொல்லிக் கொண்டாள்.

“இன்னைக்கு மழை நிக்குற மாதிரி தெரியல threewheel ஒன்ற புடிச்சி late ஆகாமல் வீட்டுக்கு போங்க நான் office எல்லாம் close பண்ணிட்டு போறேன் என்று சொன்னவனின் வார்த்தைகளை மீற முடியாமலும், அவனை விட்டு போக மனமின்றியும் வீடு போய் சேர்ந்தாள். shafna க்கு அவன் நினைவு மனதை ஆட்கொள்ளத் தொடங்கியது. farsan இன் கண்ணியம்  அவள் மனதை வெகுவாக கவர்ந்து விட. அவன் மீது அளவு கடந்த நேசம் கொண்டாள்.

Farsan மாதிரி  எல்லாஆண்களும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தவள் தன் வாழ்வின் கசப்பான, விடயங்களையும் அவன் மீதுள்ள பாசத்தையும்  அவனிடம் சொல்ல நினைத்தவள் தன்னுள்ளே அடக்கிக் கொண்டாள். அவனுடன் வேலை செய்த 10 நாட்களும் அவளுள் இனம் புரியாத ஓர் தைரியத்தை கொடுத்து விட, ஒரு நல்ல நண்பனாக நம்பிக்கை நிறைந்தவனாக அவனை  நோக்கினாள்.

farsan மீது அவளுக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டிருந்தது.”சப்னா சப்னா” என்ற அழைப்புக்கு திடுக்கிட்டவள்  “உலகத்தை மறந்து அப்படி என்ன யோசனைஎன்று கூறியவாறு வந்த farsan, “நாளைல இருந்து நான் வேலைல இருந்து விலக இருக்கேன் chairman க்கும் letter குடுத்திருக்கேன்என்று சொல்லிய farsan இடம் மனசு விட்டு வென அழுதுவிட்டாள். அவளது   மனதின் வலியை கண்ணீர் துளிகள் உணர்த்த  “farsan உங்க மீது எனக்கு நிறைய பாசம் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் நம் companyக்கும் சமூகத்திற்கும் வேணும்என்று தன்னை மறந்து அவன் கைகளை இருக பற்றினாள். அந்த பற்றுதலில் அன்பு, பாசம், நம்பிக்கை இருப்பதை  Farsan உணர்ந்தவனாக செய்வதறியாது கலங்கி நிற்க தனக்குள்ளே ஓர் முடிவெடுத்தவளாக farsan விலக கூடாது என்று உறுதி எடுத்தவளாக chairman இன் office பக்கம் விரைந்தாள். அவன் பற்றியும் அவனது தூய்மையான உள்ளம் பற்றியும் chairman இடம் மட்டுமல்ல உலகத்திற்கே சொல்ல துணிந்து விட்டாள் அவள்

“சப்னா சப்னா எழும்புங்கோ” ஏன் முகமெல்லாம் ஒரு மாதிரியாக இருக்கு உடம்புக்கு என்ன சரியா?  என்று தன் தோழை பரிவோடு தட்டியெழுப்பிய தன் சகோதரி risla விடம் “ஒன்னுமில்ல தாத்தா இன்னைக்கு office ல வேலை over அதுதான் தலைவலியாக இருக்கு” என்று தன்…

“சப்னா சப்னா எழும்புங்கோ” ஏன் முகமெல்லாம் ஒரு மாதிரியாக இருக்கு உடம்புக்கு என்ன சரியா?  என்று தன் தோழை பரிவோடு தட்டியெழுப்பிய தன் சகோதரி risla விடம் “ஒன்னுமில்ல தாத்தா இன்னைக்கு office ல வேலை over அதுதான் தலைவலியாக இருக்கு” என்று தன்…

3 thoughts on “ஓர் நேசத்தின் வலி

  1. Attractive section of content. I just stumbled upon your web site and in accession capital to assert that I get
    in fact enjoyed account your blog posts. Anyway I’ll be subscribing
    to your feeds and even I achievement you access consistently quickly.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *