Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
கனவை நனவாக்க பல்கலையில் காலடி வைத்த சகாக்களுடன் ஒரு நிமிடம் 

கனவை நனவாக்க பல்கலையில் காலடி வைத்த சகாக்களுடன் ஒரு நிமிடம்

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

அன்று இரவு அத்தனை பதற்றம் உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டுகிறது, என்றும் வீட்டுப்படி காணாத உறவுகள் அன்று மட்டும் உறவு கொண்டாடி வருகின்றனர்

புன்(ண்)னகையுடன் பார்த்து, “நள்ளிரவு Results வருதாமே?” என்று கேட்கின்றனர். நேரம் செல்லச்செல்ல நெஞ்சு வெடிக்கும் போல் இருக்கிறது, ஆயிரம் கஷ்டங்களுடன் எங்களை கரைசேர்க்க படிக்க வைத்த பெற்றோருக்கும் கலக்கத்துடன் ஓர் எதிர்பார்ப்பு. நேரமும் வந்தது, பெறுபேறுகளும் வந்தன. பெற்றோர் கட்டியணைக்கின்றனர், ஆனந்தக்கண்ணீர் அரும்பு விட ஆரம்பிக்கிறது. திண்டாட்டமும் கொண்டாட்டமாக மாறியது.

காரணம்:

அத்தனை ஆயிரம் சகாக்கள் பரீட்சை எழுதினர், அதில் சொற்பத்திற்கு மாத்திரம் பல்கலை நுழைவு. அதில் நானும் ஒருத்தி என்பதுதானே. ஒரு நிமிடம் பெற்றோரை பார்க்கிறோம் உலகத்தையே முறியடித்த பெருமூச்சு எம் தந்தைக்கும் தாய்க்கும்.

இது இவ்வாறு இருக்க, அத்திண்டாட்டம் வாழ்நாள் போராட்டமாக பலருக்கு மாறியது. அவர்களுக்கு ஆயிரம் ஏக்கம், பல சிறப்பான வழிகள் அவர்களுக்கு திறக்கப்பட்டிருந்தாலும் அந்த நொடி கண்ணீர் தெளிக்காமல் கடப்பது அவர்களுக்கு கடினமானதே.

எனவே நாம் அனைவரும் இரண்டாம் அனுபவத்தை கடக்கவில்லை, மாறாக முதலாவது அனுபவத்தை கடந்து சாதிக்க வந்துள்ளளோம். முதலில் அதற்கு இறைவனை சங்கை செய்வோம். “எல்லா புகழும் இறைவனுக்கே”

ஒருவேளை இரண்டாம் அனுபவத்தை கடந்திருந்தால், எனவே, சற்று சிந்திப்போம்.

பல நாள் விடுமுறையை கடந்த பின்னர், “பல்கலை வாழ்வு ஆரம்பம்” என்ற பேச்சே மூச்சுவிடாமல் உச்சரிக்கப்படுகிறது. எமது பல்கலை உறவுகளின் பதிவுகள் அனைத்தும் பல்கலையை வெறுப்பதாகவே அமைகின்றன. இன்னும் கொஞ்ச நாட்கள் விடுமுறை நீடித்தால்தான் என்ன? இதற்குத்தானா ஆசைப்பட்டாய்? என்று பதிவிடுகிறார்கள். இவ்வாறு பதிவிடுவது ஏன் என்றுதான் தெரியவில்லை. பல்கலை வாழ்வு கசக்கிறதோ என்னவோ, ஒன்றை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள், நாம் கஷ்டப்படாமல் வாழ்வில் எதையும் அடைய முடியாது.

ஒரு விடயத்தை அடைய, பயணிக்கையில் அப்பாதை இலகுவாக இருந்தால் அது நமக்கானது அல்ல; மாறாக வேறு யாரோ முட்களை, பற்றைகளை சிறைப்பட்டு, காயப்பட்டு தூய்மை செய்த பாதை. அதே நேரம், அப்பாதை கடினமாக, பயங்கரமாக அமைந்தால், அதுதான் நமது பாதை அதனை துப்பரவு செய்து நாமே கடந்து செல்ல வேண்டும்.

நாம் சாதிக்க துடிக்கும் நாளைய சாதனையாளர்கள் எனவே, நாம் ஏனைய தலைமுறைக்கு “சிறந்த வழிகாட்டியாக” அமைய வேண்டும். இவ்வாறு பல்கலையை கசப்பானதாக காட்டினால் ஏனைய தலைமுறையின் நிலைதான் என்ன? ஏன் உங்கள் சந்ததிகளின் நிலைதான் என்ன?

இவ்வாறு சோர்ந்துவிடவா நம் பெற்றோர் இராப்பகலாக உழைத்தனர்? நம் பெற்றோரை நாம் மகுடம் சூட்டும் நாள்தான் எப்போது? ஒரு நிமிடம் கண்ணை மூடி உங்களை சந்தித்த துரோகம், ஏமாற்றம், கேலிகள் என்பவற்றை நினைத்துப் பாருங்கள்.

எமது வாழ்வு போற்றப்படப் போவதும் தூற்றப்படப் போவதும் எமது கையில் தான் இருக்கின்றது. எனவே கஷ்டங்களை சிரித்துக் கொண்டு சந்தோஷமாக கடக்க பழகிக் கொள்ளுங்கள். பல்கலைக்கழகத்துடன் எமது வாழ்வு முடியப் போவதில்லை. இதுதான் இலட்சியக் கோட்டையின் நுழைவாயில். இன்னும் எத்தனையோ வாயில்களை திறந்தால் தான் சிம்மாசனத்தில் இருக்கமுடியும். இப்போது நாம் வாயில்களை திறக்கும் வேலையாட்களே, தவிர அரசனாக/ அரசியாக மாறும் நாள் இன்னும் வரவில்லை. எனவே ஒவ்வொன்றையும் சுவைத்து சுவைத்து நகருங்கள்.

விதைத்துக்கொண்டே இரு; முளைத்தால் மரம், இல்லையேல் உரம் எனும் மந்திரவாக்கை என்றும் மனதில் இருந்து அழிய விடாதீர்கள்.

எனவே, என் இனிய சகாக்களே! விரைந்து எழுந்திருங்கள், வாழ்வை சுவைத்து சுவைத்து போராடுங்கள். அறுசுவை கொண்ட வாழ்வில் ஒரு இனிய சுவையை அடையவே இத்தனை போராட்டங்களும்.

“எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும், எனக்கும் அனைத்திலும் அருள்புரிவானாக”

இப்படிக்கு, அத்தனை கஷ்டங்களையும் அனுபவித்து, வாழ்வை சலிக்காமல் கடந்து கொண்டிருக்கும் உங்களில் ஒருத்தி இவள்.

Rahfath  Aara Mohamed Riyaz
Eravur
South Eastern University Of Srilanka

அன்று இரவு அத்தனை பதற்றம் உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டுகிறது, என்றும் வீட்டுப்படி காணாத உறவுகள் அன்று மட்டும் உறவு கொண்டாடி வருகின்றனர் புன்(ண்)னகையுடன் பார்த்து, “நள்ளிரவு Results வருதாமே?” என்று கேட்கின்றனர். நேரம் செல்லச்செல்ல…

அன்று இரவு அத்தனை பதற்றம் உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டுகிறது, என்றும் வீட்டுப்படி காணாத உறவுகள் அன்று மட்டும் உறவு கொண்டாடி வருகின்றனர் புன்(ண்)னகையுடன் பார்த்து, “நள்ளிரவு Results வருதாமே?” என்று கேட்கின்றனர். நேரம் செல்லச்செல்ல…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *