கருப்பொருள் ஒன்றுதான் வழிமுறை வேறாகலாம்.

  • 19

[cov2019]

வாழ்க்கை அன்றாடம் மனிதனுக்கு புதிய பாடங்களை கற்பிக்கும் ,வாழ்க்கையினுடைய பாட போதனை வகுப்பறை போல தான் அமையவேண்டும் என்பதல்ல.

சுனாமியும் சூறாவளியும் காட்டுத்தீயும் மண்சரிவும் நிலநடுக்கமும் ஏன் கொரோனவும் வாழ்க்கை எமக்கு போதிக்கும் பாடங்கள் தான். வாழ்க்கை நிலையில்லாதது உறவுகள் நிரந்தரமில்லாதது. சொத்து செல்வங்கள் பயனற்றுப்போகும், உறவுகள் உன்னை விட்டு தூரமாகும் உன் உடலும் பணமும், இல்லிடமும், உன் கர்வமும், அகங்காரமும், செருக்கும் சொற்ப சந்தோஷங்களும் நிரந்தரமில்லாதவை.

வாழ்க்கையின் இப்போதனைகள் காலகாலமாக சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கும் மனிதன் உணர மறுக்கின்ற போது வழிமுறை மாறலாம் ஆனால் கருப்பொருள் மாறாது.

மீண்டும் ஒருமுறை துறைசார்ந்தவர்கள், கல்விமான்கள், சமூகத்தை வழிநடத்தும் சிந்தனைவாதிகள், தலைவர்கள் மொழியியலாளர்கள் குறிப்பாக பல்மொழி தேர்ச்சியும் நவீன அறிவியலும் சன்மார்க்க பின்புலமும் ஒருசேர பிணைந்த ஆளுமைகள் எமக்கான அடிப்படை தேவை என்பதையும் அதற்கான திட்டமிடல், செயட்படுத்தல் காலத்தின் முன்னுரிமை என்பதையும் வாழ்க்கை திரும்பவும் வேறு ஒரு வடிவத்தில் சொல்லி இருக்கிறது.

உணராதபோது, கால தாமதமாகிறபோது, கண்டுகொள்ளாமல் விடுகிறபோது திரும்பவும் வாழ்கை போதிக்கும் கருப்பொருள் ஒன்றுதான் வழிமுறை வேறாகலாம் அதன் விளைவுகளும் கற்பனை பண்ணமுடியாத ஒன்றாகலாம். உணர்வுபெறுவோம், திட்டமிடுவோம், செயட்படுவோம், வெற்றிகாண்போம்.

M.N.LUKMANUL HAKEEM
MSW (medical& psychiatry), MSc (clinical psy)
M.PHIL (Mental Health), PHD (Mental Health & Abnormal Psy)


[cov2019] வாழ்க்கை அன்றாடம் மனிதனுக்கு புதிய பாடங்களை கற்பிக்கும் ,வாழ்க்கையினுடைய பாட போதனை வகுப்பறை போல தான் அமையவேண்டும் என்பதல்ல. சுனாமியும் சூறாவளியும் காட்டுத்தீயும் மண்சரிவும் நிலநடுக்கமும் ஏன் கொரோனவும் வாழ்க்கை எமக்கு போதிக்கும்…

[cov2019] வாழ்க்கை அன்றாடம் மனிதனுக்கு புதிய பாடங்களை கற்பிக்கும் ,வாழ்க்கையினுடைய பாட போதனை வகுப்பறை போல தான் அமையவேண்டும் என்பதல்ல. சுனாமியும் சூறாவளியும் காட்டுத்தீயும் மண்சரிவும் நிலநடுக்கமும் ஏன் கொரோனவும் வாழ்க்கை எமக்கு போதிக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *