Lock​ Down இல் தவிப்பவர்களே நோன்பு நோற்போம்!

  • 10

இன்றைய நிலையில் நமது வீடுகளில் போதுமான பொருட்கள் இல்லாமல் இருக்கலாம். வீட்டு அத்தியவசிய பொருட்கள் விடயத்தில் கச்சிதமாக இருப்பது அவசியமாகிறது. இவ்வாறான சூழலில் நபிகளார் காட்டிய வழிகாட்டல் நபிலான நோன்பாகும்.

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் காலையில் என்னிடம் வந்து, உண்பதற்கு ஏதேனும் உள்ளதா? எனக் கேட்டார்கள். நாங்கள் இல்லை என்றோம். அப்படியாயின் நான் இன்று நோன்பு வைத்துக் கொள்கிறேன் எனக் கூறினார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா (ரழி), ஆதாரம்: நஸயி)

போதுமான உணவு காணப்படாத போது நபிகளார் நபிலான நோன்பை தேர்ந்தெடுத்துள்ளார்கள். இது எமது வீட்டுப்பொருட்களை மீதப்படுத்தும். இக்கால கட்டத்தில் நமது உளவியலை பலப்படுத்தும். (பத்ரில் நபித்தோழர்களது உளவியலை பலப்படுத்த நோன்பு இருந்த வரலாற்றை நாம் அறிவோம்) குடும்ப சூழலில் கூட்டு இபாதத் செய்வதற்கு சந்தர்ப்பமாக அமையும். சிறுவர்களை இவ்வருட ரமாழானிற்கு தயார்படுத்த வாய்ப்பாக அமையும். இவை அனைத்திற்கும் மேலாக; சோதனையை கொடுத்த இறைவனிடம் மீண்டு அவனிடம் உதவி தேடும் வழிமுறையாக அமையும்.

“பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம்.” (21:35)

நோன்பின் மூலம் இரைவனிடம் மீழுவோம்.

Afra Akram


இன்றைய நிலையில் நமது வீடுகளில் போதுமான பொருட்கள் இல்லாமல் இருக்கலாம். வீட்டு அத்தியவசிய பொருட்கள் விடயத்தில் கச்சிதமாக இருப்பது அவசியமாகிறது. இவ்வாறான சூழலில் நபிகளார் காட்டிய வழிகாட்டல் நபிலான நோன்பாகும். ஒரு நாள் நபி…

இன்றைய நிலையில் நமது வீடுகளில் போதுமான பொருட்கள் இல்லாமல் இருக்கலாம். வீட்டு அத்தியவசிய பொருட்கள் விடயத்தில் கச்சிதமாக இருப்பது அவசியமாகிறது. இவ்வாறான சூழலில் நபிகளார் காட்டிய வழிகாட்டல் நபிலான நோன்பாகும். ஒரு நாள் நபி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *