கவியெனக்கு

  • 5

வாழ்வெனக்கு தந்துவிட்ட
உச்சங்களின் எச்சமாய்
வலிகளின் மிச்சமாய்
என்னோடு என்றும் பயணிப்பது
நீ மட்டுமே

உணர்வுகளை வரைந்தெடுத்த
உள்ளத்தை
எழுத்துக்களாய் வடித்தெடுக்கிறேன்

உச்சகட்ட உடைதலும்
உன்னுடனான – என்
மௌன உரையாடலில்
கொட்டித் தீர்க்கிறது
உள்ளூரும் எண்ணங்களை

கவிதையே
என்றும் நீ எனக்கு
உற்ற தோழனே

கற்காலம் என்றாலும்
கலை ஓங்கும்
இக்காலம் என்றாலும்
பலரது உணர்வுகளை
உன் வடிவிலேயே
சேகரித்து வைக்க
பழக்கி விட்டாய் போலும்
எம்மில் பலரையும்

மனம் சிலிர்த்து
சிறகடித்து பறக்கும்போதும்
மனம் உடைந்து
சிறகொடிந்த பொழுதுகளிலும்

உன்மடி தேடுகிறது
எம் மனம்- கவியெனக்கு
உற்ற தோழன் என்றைக்கும்

MJA Yaazmin
Allied health sciences
University of Peradeniya

வாழ்வெனக்கு தந்துவிட்ட உச்சங்களின் எச்சமாய் வலிகளின் மிச்சமாய் என்னோடு என்றும் பயணிப்பது நீ மட்டுமே உணர்வுகளை வரைந்தெடுத்த உள்ளத்தை எழுத்துக்களாய் வடித்தெடுக்கிறேன் உச்சகட்ட உடைதலும் உன்னுடனான – என் மௌன உரையாடலில் கொட்டித் தீர்க்கிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *