Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 61 

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 61

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

“அன்னிக்கி அந்த உயிர்ரகசியத்தை நோவா கிட்ட இருந்து நான் தெரிஞ்சி கொண்டபோது… யாரு இருந்தா… அவரும் நானும் தானே இருந்தோம். இந்த விஷயத்தில் யார்மேலயும் சந்தேகப்படவும் முடியாதே… ஒருவேளை…. அந்த படகோட்டி… அவன்…”

“என்னது படகோட்டியா?”

“ஆமா அது யாரு படகோட்டி..?”

“ஊர்நசிப்…! ஆமா அதுதான் அவனோட பெயர். சாவுக்கடலை கடக்க அவனுடைய படகில் தான் நான் பயணித்தேன். நோவா இருந்த இடத்துக்கு அவன் தான் என்னை கூட்டிட்டு போய் சேர்த்தான்.”

“அப்படின்னா ஒருவேளை ஊர்நசிப் இந்த ரகசியத்தை ஒட்டுக்கேட்டு இருப்பான் என்று சொல்லவர்றியா?” என்று கேட்டான் ராபர்ட்.

“அவன் அந்த குகைக்குள்ள வரல ஒட்டு கேட்டு இருப்பான்னு சொல்ல தெரியல ஆனா நான் போகிற வழியெல்லாம் என்கிடு பற்றி சொல்லிகிட்டே இருந்தேன். ரொம்ப ஆர்வமா அவற்றை எல்லாம் அவன் கேட்டுக்கொண்டிருந்தான். அதுல அவன் ஒரு கேள்வியை அடிக்கடி கேட்டுக்கொண்டே இருந்தான்.

“என்ன கேள்வி அது?”

“என்கிடு எந்த அளவு பலசாலி என்று.”

“அதுக்கு நீ என்ன சொன்னே?”

அவன் நினைச்சா இந்த உலகத்தையே அவன் காலடியில் கொண்டுவர முடியும் என்னு பெருமையா சொன்னேன்.

என்றவன் அப்படியே பேச்சை நிறுத்தி கொள்ள…

“அப்படின்னா கண்டிப்பா அந்த ஊர்நஷிப்பிற்கும் இந்த மித்ரத் குழுவுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கணும்.” என்றாள் மீரா.

“ஆனா மீராஇந்த கழுகு டெட்டோ போட்ட மித்ரத் ஆளுங்க என்கிடு குடும்பத்த சேர்ந்தவர்கள் என்று தானே சொல்லி இருந்தீங்க” என்று

“என்ன? என்கிடுவுக்கு குடும்பமே கிடையாது.” என்று ஒரு குண்டை தூக்கி போட்டான் கில்கமேஷ்.

“என்ன ஒளர்ற நீ… நீதானே நாம அந்த காட்டு குகைக்குள்ள இருந்தப்போ இந்த கழுகு டெட்டோ போட்ட ஆளுங்க என்கிடு கூட பிறந்தவங்க என்று சொன்னே?” என்று ஜெனி அதிர்ச்சியோடு கேட்டாள்.

“அது அப்போதெல்லாம். உங்கமேல கொஞ்சம் நம்பிக்கை இல்லாம ஏதோ சும்மா.” என்று தலையை சொரிய மூவரும் அவனை கடுப்புடன் முறைத்து பார்த்தனர்.

“அப்போ எங்க மேல நம்பிக்கை இல்லாமதான் இருந்தே அப்படி தானே.”

“ஐயோ.. அது அப்போ இப்போ நான் அதுக்காக சாரி கேட்டுக்கிறேன். தயவுசெய்து என்னை மன்னிச்சிடுங்க.” என்று உண்மையிலேயே  வருத்தபட்டான் கில்கமேஷ்.

“சரி சரி… அது போகட்டும்.. இப்போ இப்படியே இருக்க வேண்டியது தானா?” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே அவர்களுக்கு முன்னாடியே என்கிடு உடலை வைத்து மித்ரத்தும் அவனுடைய ஆட்களும் அந்த சடங்கை ஆரம்பித்து இருந்தனர்.

இவர்கள் நால்வரும் சிறைகம்பிகளில் முகத்தை பதித்து வெளியில் சற்று தொலைவில் லெப் ஹாலில் நடப்பதை அவதானிக்க  அவர்களுக்கு நேரெதிராக உள்ள மறு சுவரில் இருந்த காற்று இடைவெளி ஊடாக மீராவும் டிடானியாவும் கூட இந்த காட்சிகளை பார்த்து கொண்டிருந்தனர்.

“ஹேய் அங்க பாரு இவனுங்க என்கிடு உடலை வைத்து ஏதோ பண்றாங்க.” என்றாள் மீரா.

அங்கு நின்று அழுது கொண்டிருந்த ஹேமாவை பார்த்ததும் டிடானியாவுக்கு அம்மா நியாபகம் வந்து விட்டது.

“எதுக்காக இப்போ அளற டிடானியா..?”

“அங்க பார்த்தியா அங்க ஒருதங்க நிக்குறாங்க அநேகமான இந்த எக்ஸ்பிரிமெண்டை பண்ண போற சயின்டிஸ்ட்டா இருக்கணும். அவங்க ரொம்ப வருத்தத்தில் இருக்குறாங்க கண்டிப்பா இந்த ராட்சசன் அவங்க ரெண்டுபேரையும் மிரட்டி இந்த வேலையை பண்ண அழைச்சிட்டு வந்திருப்பான்.” என்றாள் டிடானியா.

“ஹ்ம்ம்.”என்ற மீராவுக்கு சட்டென விக்டர் நியாபகம் வரவே.

“ஆமா உள்ளே போன விக்டர் என்ன ஆனான்…?” என்று திரும்பி அந்த குழியை பார்த்தனர். ஆனால் உண்மையில் அங்கு அந்த குழி போன்ற சுரங்க அமைப்பை காணவில்லை.

“என்ன????”

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

“அன்னிக்கி அந்த உயிர்ரகசியத்தை நோவா கிட்ட இருந்து நான் தெரிஞ்சி கொண்டபோது… யாரு இருந்தா… அவரும் நானும் தானே இருந்தோம். இந்த விஷயத்தில் யார்மேலயும் சந்தேகப்படவும் முடியாதே… ஒருவேளை…. அந்த படகோட்டி… அவன்…” “என்னது…

“அன்னிக்கி அந்த உயிர்ரகசியத்தை நோவா கிட்ட இருந்து நான் தெரிஞ்சி கொண்டபோது… யாரு இருந்தா… அவரும் நானும் தானே இருந்தோம். இந்த விஷயத்தில் யார்மேலயும் சந்தேகப்படவும் முடியாதே… ஒருவேளை…. அந்த படகோட்டி… அவன்…” “என்னது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *