Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் தொடர் 100 

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் தொடர் 100

  • 18

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

விக்டர் அழைத்தது என்ன நடந்தது என்பதை கேட்கத்தான். அங்கு இருந்த மித்ரத்தின் சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவனுக்கு உடந்தையாக இருந்த ஆட்களை எல்லாம் பிடித்து பொலிஸில் ஒப்படைத்து விட்டு ஜெனிக்கி அழைப்பை ஏற்படுத்தினான். என்கிடு ஃபோனை வாங்கி,

“நாம ஜெயிச்சிட்டோம். விக்டர்.”

என்றதும் இங்கு டிடானியாவும் விக்டரும் துள்ளி குதித்தனர். அன்றே இரவு விமானத்தில் ஏறி ஈராக்கை வந்தடைந்தனர். விமான நிலையத்தில் விக்டர், டிடானியா அவளுடைய அப்பா லூதர் என அவர்களை வரவேற்க காத்திருந்தனர்.

“அப்பாக்கு விஷயம் எல்லாம் சொல்லிட்டேன்.”

என்றாள் டிடானியா.

“எங்களை மன்னிச்சிடுங்க அங்கிள். நாங்க எல்லாத்தையும் உங்க கிட்ட இருந்து மறைச்சிட்டோம்.”

என்று ஜெனி வருத்தத்துடன் சொல்ல.

“வருத்தம் தான் ஆனா உண்மைய சொல்லணும் என்னா எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கு.”

என்றார்.

“எது எப்படியோ எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. நாங்களும் எங்க நாட்டுக்கு போகணும்.”

என்றாள் மீரா.

“அப்படியென்ன அவசரம். இன்னும் ஒரு வாரத்துல என்னோட அம்மாவோட நினைவு நாள் வருது. அன்னிக்கி வரை இருந்துட்டு அப்பறமா போங்களேன்”

என்றாள் டிடானியா.

“அப்போ சரி… இந்த ஒருவாரமும் உங்க ஊரை சுத்தி பார்த்துறோம்.”

என்றான் ராபர்ட் டிடானியாவுக்கு கண்ணடித்து கொண்டே அவளும் வெட்கத்தில் சிரித்தாள். அந்த ஒருவாரத்தில் எல்லோரும் டிடானியா வீட்டில் தான் இருந்தார்கள்.

என்கிடுவும் கில்கமேஷும் தனியாக எவ்வளவோ பேசிக்கொண்டார்கள். அவர்கள் 8000 வருடங்களின் பின்னர் ஒன்றுசேந்துள்ளார்கள் என எண்ணி ஜெனி அவர்களை தொந்தரவு செய்யவில்லை.

ஒருவாரம் முடிய டிடானியா அம்மாவின் நினைவுநாளை ஏழைகளுக்கு உணவளித்து சிறப்பாக முடித்தனர். அன்றே இரவு இத்தாலிக்கு பயணமாக ஏற்பாடுகளை செய்தனர்.

“டிடானியா, படிப்பு முடிஞ்சதும் கல்யாணத்தை வெச்சிக்கலாம்.”

என்றார் லூதர்

“ஓஹோ.. சாருக்கு கண்டம் விட்டு கண்டம் காதலோ… நடத்துங்க நடத்துங்க.”

என்று ஜெனி சீண்டினாள்.

நீங்க மட்டும் என்னவாம். எங்க நாட்டு கிங்கையே வளைச்சு போட்டுடீங்க

என்று டிடானியாவும் பதிலுக்கு சொல்ல எல்லோரும் சிரித்தனர். பின்னர் விக்டர், டிடானியா, லூதர் அங்கிள் வழியனுப்பி வைக்க நமது குழுவினர் இத்தாலிக்கு வந்து சேந்தனர். கில்கமேஷ், என்கிடு இருவருக்குமான ஒரு பெரிய வீட்டை மார்ட்டின் அங்கிள் பரிசாக அளித்தார்.

“உங்க எல்லாரோட உதவியும் தான் என் நண்பன மீட்க உதவியது. நான் உங்களை என்றைக்கும் மறக்க மாட்டேன்.”

என்றான் கில்கமேஷ்.

“சாரி ஜெனி… ஏதோ மூளை குழம்பி அப்படியெல்லாம் நடந்துகிட்டேன்.”

என என்கிடு அவளிடம் மன்னிப்பு கேட்டான். அவளுக்கும் கொஞ்சம் தர்ம சங்கடமாகவே இருந்தது. ஆனால் என்கிடு, கில்கமேஷ் மற்றும் ஜெனியின் கையை சேர்த்து விட்டு,

“என் நண்பனுக்கு ஏத்த பொண்ணு நீதான் ஜெனி.”

என்று சொல்லி எல்லோரையும் சந்தோசப்படுத்தினான். இடை நிறுத்தப்பட்ட ஜெனி, மீரா ஆர்த்தரின் படிப்பை மீண்டும் தொடர மார்ட்டின் அங்கிள் ஏற்பாடுகளை செய்தார். அதேபோல என்கிடு, கில்கமேஷ் இருவரும் சேர்ந்து புதிய வியாபாரம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர். படிப்பு முடிய இவர்களது திருமணம் நடத்துவதாக பேசி இருந்தனர். அதுவரை எம்மவர்கள் காதலிப்பார்கள். அதற்கு பிறகும் காதலிப்பார்கள். அது காவிய காதலாக இருக்கும்.

இடையில் என்கிடுவுக்கு ஒரு பெண் பார்க்க வேண்டும் என்று ஆர்தரும் மீராவும் ,கூடவே ராபர்டும் ஓடித்திரிந்தார்கள். அவர்களது வாழ்க்கை புதியதொரு கோணத்தில் வித்தியாசமாக மகிழ்ச்சியாக பரிணமிக்க ஆரம்பித்து விட்டது. காலத்தால் அழியாத காவிய வரலாறு படைத்து விட்டு, சாகாவரத்தையும் இழந்து வெறும் சாதாரண மனிதர்களை போலவே கில்கமேஷும் என்கிடுவும் வாழ ஆரம்பித்தனர்.

*****************************

ஹாங்காங் சிறைச்சாலை, மித்ரத் வீல் செயாரில் வைக்கப்பட்டு இருந்தான். ஒட்டு மொத்த கோபத்தின் உருவமாக இருந்தான். பலத்த பிரயத்தனங்களுக்கு பிறகு அவனை பார்க்க ஒரு வாலிபன் வந்திருந்தான். இருட்டு அறையில் மித்ரத்தின் முன்னால் கம்பிகளுக்கு வெளியே இவன்,

“நீயா?”

“ஆமா… நானே தான்… உங்களை இப்படி பார்ப்பேன் என்று நினைக்கவே இல்ல”

“அப்பா!!!”

“உனக்காக தான் காத்திருந்தேன். சார்ள்ஸ். அந்த மோதிரத்தை எப்படியாவது உனக்கு சொந்தமாக்கிக்க கில்கமேஷ் அவனை விட்டுடாதே”

என்றான் மித்ரத்.

“உங்களுக்கு இப்படி ஒரு கதியை ஏற்படுத்தியவர்கள் யாரா இருந்தாலும் நான் சும்மா விடப்போராதில்லை.”

என்றான் இவன்.

“அதை கேட்டு கொண்டே மித்ரத்தின் உயிர் பிரிந்தது.”

“அப்பா.”

அங்கு நின்ற போலீசார் உள்ளே விரைந்தனர். மனதை கல்லாக்கி கொண்டு சார்ள்ஸ்,

“மோதிரம், கில்கமேஷ்.”

என்று முணு முணுத்து கொண்டே அங்கிருந்து வெளியேறினான். மறுபடியும் காலங்கள் வேகமாக சுழல ஆரம்பித்தன.

கில்கமேஷ் மீள்வருகை படலம் முற்றும்.
நன்றி.
திகில் மிகுந்த இத்தொடர்கதை பற்றி கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம்.
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

விக்டர் அழைத்தது என்ன நடந்தது என்பதை கேட்கத்தான். அங்கு இருந்த மித்ரத்தின் சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவனுக்கு உடந்தையாக இருந்த ஆட்களை எல்லாம் பிடித்து பொலிஸில் ஒப்படைத்து விட்டு ஜெனிக்கி அழைப்பை ஏற்படுத்தினான்.…

விக்டர் அழைத்தது என்ன நடந்தது என்பதை கேட்கத்தான். அங்கு இருந்த மித்ரத்தின் சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவனுக்கு உடந்தையாக இருந்த ஆட்களை எல்லாம் பிடித்து பொலிஸில் ஒப்படைத்து விட்டு ஜெனிக்கி அழைப்பை ஏற்படுத்தினான்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *