கியாஸ் என்ன விட்டு போய்டுவாரா

  • 84

அவளோடு சில நொடிகள்
தொடர் -13

தாயின் அழைப்புச் சப்தத்தைக் கேட்ட நொடியே அவ்விடம் இருந்து நகர்ந்தாள் நஸீஹா.

“சனா இருக்க வேண்டிய இடத்துல இன்னைக்கு நான் இருக்குறது தான் கியாஸுக்கு பிடிக்கல்ல. அதனாலதான் அவரு என் வெறுக்காரு. அவரு இன்னமும் சனாவ மறக்கல்ல.”

“இந்த சனாங்குற நேய்ம் ரொம்பதான் தாக்கத்த செலுத்துது. ஒரு சனா என்ட உயிர்ல பாதி, இன்னொரு சனா என்ட வாழ்க்கையோட மிகப் பெரிய கேள்விக் குறி.”

“ஒரு வேள அந்த சனாவும் கியாஸ மறக்காம மறுபடியும் வந்து நின்னாள்னா நான் என்ன செய்வன். கியாஸ் என்ன விட்டு போய்டுவாரா. இல்ல, அப்புடியெல்லாம் நடக்கக் கூடா அல்லாஹ்.”

இவ்வாறாக பற்பல எண்ணங்களும் பசியாவின் மனதில் தோன்றி மறைந்தன. அவ்வாறிருக்க யாரோ கதவினைத் தட்டும் சப்தம் அவளுடைய காதுகளைப் பிளந்தது. எழுந்து கதவைத் திறந்தாள் எதிரில் கியாஸ் நீண்ட நேரமாக தட்டிக் கொண்டிருந்தான் போலும். எதுவும் பேசாமல் வழமை போல் அவளைக் கடந்து சென்றான். அவன் தன்னிடம் ஒரு வார்த்தையாவது பேசமாட்டானா என எதிர்பார்த்திருக்கும் ஒவ்வொரு வேளையும் பசியாவுக்கு மிஞ்சுவது ஏமாற்றம் மட்டும் தான்.

இதற்கிடையில் பகல் உணவுக்கான நேரமும் நெருங்கி இருந்தது. நாமளாவது ஏதாவது பேசுவோம் என்று நினைத்துக் கொண்டு,

“பேஸ் வோஸ் பண்ணிகிட்டு சாப்புட வாங்க.” என தயங்கிய படி பேச்சைக் கொடுத்தாள் பசியா.

“ம்ம்ம்” அது மட்டும் தான் அவனுடைய பதில் மொழியாக இருந்தது. அது அவளுக்கு மனக் கஷ்டத்தைக் கொடுத்தாலும் எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தாள். இருந்தாலும் கியாஸ் காதலித்த சனாவை நினைக்க நினைக்க அவளுக்கு திக் திக் என்றிருந்தது.

இன்று முழுச் சமையலையும் பசியா ஒருத்தியே அவள் கைவரிசையில் ஒவ்வொருத்தருக்கு பிடித்தாற் போல் வகை வகையாக செய்திருந்தாள். முதல் முதலாக இன்று தான் அவர்கள் பசியா சமைத்துச் சாப்பிடுகிறார்கள் அவளவு பாராட்டுதல்

“அழகுல படிப்புல குணத்துல மட்டுமில்ல சமைக்குறதுலயும் என்ட மருமகள் தான் பெஸ்ட். அவளை அடிக்க ஆளே இல்லை” என ஒவ்வொருவரும் கியாஸுடைய தாயார் அவளைப் புகழ்ந்தார்.

தொடர்ந்து எல்லோரும் ஒரே நேரத்தில் அவளைப் பாராட்டினார்கள் கியாஸ் ஒருத்தனைத் தவிர அது வரை சாதுவாக அமர்ந்திருந்து சாப்பிட்டவனுக்கு பசியா சமைத்த விஷயம் தெரிய வந்ததும் உடனே கையை அலசிக் கொண்டு எழுந்தான்.

“என்ன கியாஸ் பாதிலயே எழும்பிட்ட.”

“ஒன்னுமில்ல வாப்பா நான் வரும் போதே வெளில சாப்புட்டு தான் வந்த எனக்கு இவளவு போதும்.”

“ஆ சரி”

“வாயில்லா அப்பிராணிய வதச்சிப் போட்டு இவள தலைக்கு மேல தூக்கி வெச்சி கொண்டாடித் தீர்க்காங்க ச்சே”

என நினைத்துக் கொண்டே கியாஸ் அவனுக்குள் இருந்த ஆதங்கங்களை வெளிக்காட்ட முடியாமல் மறைத்துக் கொண்டு நகர்ந்தான்.

என்னதான் அவன் காரணம் சொல்லி இருந்தாலும் அவனுடைய நிலையையும் உண்மையான காரணத்தையும் பசியா புரிந்து கொண்டாள். அவளால் மேற்கொண்டு சாப்பிட முடியாதளவு வலியொன்று மனதை அடைத்துக்க் கொண்டது. பாதியில் எழும்பவும் முடியாமல் சாப்பிடவும் முடியாமல் சமாளித்துக் கொண்டு போனாள்.

பெண்ணாக பிறந்து விட்டாளே வாழ்க்கையில் அதிலும் குறிப்பாக இல்லற வாழ்க்கையில் பல விடயங்களை சமாளித்துத் தானே ஆக வேண்டி இருக்கிறது. அதற்கு இவள் மட்டும் விதிவிலக்கா என்ன.

தொடரும்
ஏரூர் நிலாத்தோழி

அவளோடு சில நொடிகள் தொடர் -13 தாயின் அழைப்புச் சப்தத்தைக் கேட்ட நொடியே அவ்விடம் இருந்து நகர்ந்தாள் நஸீஹா. “சனா இருக்க வேண்டிய இடத்துல இன்னைக்கு நான் இருக்குறது தான் கியாஸுக்கு பிடிக்கல்ல. அதனாலதான்…

அவளோடு சில நொடிகள் தொடர் -13 தாயின் அழைப்புச் சப்தத்தைக் கேட்ட நொடியே அவ்விடம் இருந்து நகர்ந்தாள் நஸீஹா. “சனா இருக்க வேண்டிய இடத்துல இன்னைக்கு நான் இருக்குறது தான் கியாஸுக்கு பிடிக்கல்ல. அதனாலதான்…

11 thoughts on “கியாஸ் என்ன விட்டு போய்டுவாரா

  1. Hello there! This is kind of off topic but I need some advice from an established blog. Is it difficult to set up your own blog? I’m not very techincal but I can figure things out pretty quick. I’m thinking about making my own but I’m not sure where to start. Do you have any ideas or suggestions? Appreciate it

  2. I just like the valuable info you supply in your articles. I will bookmark your weblog and test once more right here regularly. I’m slightly certain I’ll learn a lot of new stuff right right here! Best of luck for the next!

  3. Hi there, You have performed an incredible job. I’ll certainly digg it and for my part recommend to my friends. I’m sure they’ll be benefited from this site.

  4. Im no longer certain the place you are getting your info, however good topic. I must spend some time finding out much more or understanding more. Thank you for magnificent info I was in search of this information for my mission.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *