குரங்கு மனசு பாகம் 12

  • 7

“உம்மா.. அப்படி இல்லம்மமா” சர்மிக்கு வார்த்தைகள் வரவில்லை.

“என்னா? என்னடி உம்மா? உன் புத்தி எங்க கெட்டு போச்சு? அவன் வீடு வந்து பிலக்மெய்ல் பண்ணிட்டு போற அளவுக்கு பெரிய லவ்வா? போயும் போயும் ஒரு ஆட்டோ டிரைவர்.. வெக்கமில்லயா உனக்கு? இது நடக்காது புள்ள”

“அவன் வீடு தேடி வந்தானா?” சர்மியால் தாங்கிக் கொள்ள முடியா மகிழ்ச்சி.

“அப்போ இவன் என்ன விரும்புறான்” தன் ஆனந்தத்தை உள்ளுறக் கொண்டாடி மகிழ்ந்தவள் தாய் சொல்வதெதையும்  பொருட்படுத்தாமல்,

“சரிம்மா எனக்கு பசிக்குது இப்போ. இந்த விஷயமா அப்புறம் பேசிக்கலாம்.

என்னடி நான் சொல்றத சரி வாங்கிக்க மாட்டியா? இங்க பாரு சர்மி. உனக்கு நான் வேணுமா இல்ல அவன் வேணுமான்னு நீயே முடிவு பண்ணிக்க. இருக்குறது ஒரே புள்ள. உன் மேல எவ்வளவு ஆச வெச்சிருக்கன் தெரியுமா? உன்ன போய் எப்புடி ஒரு ஆட்டோ டிரைவர் கையில கொடுப்பன்?

தாயின் வார்த்தைகள் மெல்லினமாக,

“ஐயோ சரிம்மா! நீங்க இத பத்தி ஒன்னும் யோசிக்க வேணாம். எல்லாம் நல்ல படியா நடக்கும். போங்கம்மா உங்க புள்ளக்கி பசிக்குது.” இப்பொழுதைக்கு தாயை சமாதானம் செய்து வைத்த சர்மி, மற்ற விடயங்கள் குறித்து பிறகு சிந்திக்கலாம் என வாய் மூடி இருந்தாள்.

*************************************

மறுபக்கம் அதீகின் நிலை ஒருவித பதட்டமாய் இருந்தது. பக்கத்தே இருக்கும் ஆற்றங்கரையோரத்தில் அமர்ந்து குட்டிக் கற்களை வீசி விளையாடியவனாய் சிந்தனையில் ஆழ்ந்தான்.

“தப்பு பண்ணிட்டன். என்ன இருந்தாலும் சர்மியோட உம்மா கிட்ட இப்படி கடுமையா பேசி இருக்கக் கூடாது. நான் ஒரு ஆட்டோ டிரைவர் தானே? என் கொலிபிகேஷன்கு ஒரு நல்ல புள்ளய என் கையில விட எந்த உம்மாவும் யோசிப்பாங்க தான்.  சிட்! அவசரப் பட்டுட்டனே?” குற்ற உணர்வு அவன் உள்ளத்தில் குறுகுறுக்க, ஏது செய்யலாம் என்றோர் முடிவுடன் அவ்விடம் அகன்றான்.

“அதீக் நீ நல்லா யோசிச்சா இந்த முடிவுக்கு வந்த? எனக்கு என்னமோ இது சரியா படல்லடா? அவள் தான் இப்போ மத்ரஸால இருக்கு. ஒருவேள மனம் மாறி நீ வேணாம்னு சொன்னா என்ன பண்ண?” தன் தனிப்பட்ட விவகாரங்களையெல்லாம் விசுவாசமுள்ள தன்னுயிர் நண்பனிடம் ஒப்புவித்தே முடிவு காணும் அதீக் சர்மியின் விவகாரம் குறித்து தன் எண்ணத்தை சொல்ல, அது சரியாகப் படவில்லை அவன் நண்பனுக்கு.

“வேற என்ன செய்றன்னு தெரியல்லடா.. நமக்கு இருக்குற ஒரே வாய்ப்பு இது மட்டும் தான். அவள என்னால மறக்க முடியாதுடா. எனக்கு அவள் வேணும்.. பிளீஸ் ஹெல்ப் பண்ணு.”

“சரி சரி அப்போ நீ சொன்ன போல செய்யலாம். உன் உம்மா இந்த விஷயத்துல இஷ்டம் தானே அதீக்?”

“ஆமாம்டா.. நான் அவகிட்ட பேசிட்டன்.”

“சரி மத்த விஷயங்களுக்கு நான் ஸபோர்ட் பன்றன். ரொம்ப ஜாக்கிரதடா.”

“சரிடா மச்சி..”

ஏதோ முடிவுடன் சுற்றிக் கொண்டிருந்த அதீகின் ஹிருதய வேகம் இரட்டிப்பாக “ரொம்ப ஜாக்கிரதடா மச்சி” என்ற நண்பனின் வார்த்தைக்கமைய, தன் முடிவில் நிதானமாய் செயற்படத் துவங்கினான்.

கதை தொடரும்…
Aathifa Ashraf

“உம்மா.. அப்படி இல்லம்மமா” சர்மிக்கு வார்த்தைகள் வரவில்லை. “என்னா? என்னடி உம்மா? உன் புத்தி எங்க கெட்டு போச்சு? அவன் வீடு வந்து பிலக்மெய்ல் பண்ணிட்டு போற அளவுக்கு பெரிய லவ்வா? போயும் போயும்…

“உம்மா.. அப்படி இல்லம்மமா” சர்மிக்கு வார்த்தைகள் வரவில்லை. “என்னா? என்னடி உம்மா? உன் புத்தி எங்க கெட்டு போச்சு? அவன் வீடு வந்து பிலக்மெய்ல் பண்ணிட்டு போற அளவுக்கு பெரிய லவ்வா? போயும் போயும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *