Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நித்யா… அத்தியாயம் -12 

நித்யா… அத்தியாயம் -12

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

கார்த்திக் அந்த உருவத்தை உற்றுப் பார்த்தாலும் அவனால் அடைய காண முடியவில்லை

”ஏய்…. யாருடா நீ?” கத்தியவனின் அருகே வந்த அந்த நெடியவன்.

”இங்க பாரு… கத்தாத… கத்தி பிரயோஜனமும் இல்ல… ”

முரட்டுச் சிரிப்பொன்று வெளிப்பட்டது. கார்த்திக்கிற்கு உடம்பெல்லாம் வியர்வை வடியத் தொடங்கியது.

”டேய் ஏ கடத்தினீங்கன்ற விசயத்த சரி சொல்லுங்கடா?”

கெஞ்சிக் கேட்டதும் ,  இரண்டாவதாக வந்தவன் அவனுடைய முகத்தை பிடித்து உயர்த்தி விட்டு,

”இங்க பாரு!! இந்த விசயம் நமக்கு தெரியாது. இதபத்தின விசயம் போஸ்கு தா தெரியும். அது வர பேசாம இரு…”

கறாராகக் கூறியவன் நகர்ந்து அடுத்தவனுடன் ஏதோ இரகசியம் பேசிவிட்டு சென்று விட்டான்.

‘யாரு இவனுகள்ட அந்த போஸ்?’

கார்த்திக்கின் உள்ளம் கேள்வி எழுப்பியது. மீண்டும் வந்தவன்

”ஏய் இத சாப்டு… ” சாப்பாட்டை முன்னால் வைத்துவிட்டு அடுத்தவனை கூப்பிட்டு,

”இவன்ட கட்ட அவித்து வுடு… ” அடுத்தவன் கைக் கட்டை அவிழ்த்து விட்டு

”சாப்பிடு…. சாப்பிடு சீக்கிரம்…”

பசி வயிற்றைக் கிள்ளினாலும் ஒருகணம் கல்யாணியை நினைத்ததும் சித்தமே கலங்கிப் போய்விட்டது அவனுக்கு. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

”ஏய் என்ன அழுவுற?  சாப்பிடு…” ஏளனமாக சிரித்தவனைப் பார்த்து

”அடே… ஒங்களுக்கெல்லாம் பெண்டாட்டி பாசம் இருந்தா தானே… சீ…. அத பத்தி என்னா தெரியும்?”

இரண்டாவதாக வந்தவன் அவனை ஏறிட்டு,

”ஏய்… மத்தவங்கள ஏமாத்தின ஒனக்குள்ளயே காதலா? ”

சப்தமாகச் சிரித்தவன் மீண்டும்.

”போதும்டா… ஓ டிராமா எல்லாம்… சாப்பிடு… சீக்கிரமா… நாம போக வேண்டாமா?”

சாப்பாட்டைப் பார்த்தவனுக்கு மீண்டும் மனைவியின் ஞாபகமே வந்தது.

‘கல்யாணி… கவலப்படாத! நா வந்துடறன் ‘ மனதால் சபதமெடுத்துக் கொண்டான்.

****************************

”இங்க பாரக்கா… நீ சாப்பிடாம இருந்தா ஒடம்பு என்னாவுறது… பிளீஸ்.. ஏ செல்ல அக்கா தானே ஒரு வாய்…”  சாப்பாட்டுத் தட்டை ஏந்தியபடி அவளின் வாயில் சோற்றுக் கவலத்தை ஊட்டிக் கொண்டிருந்தாள் பவித்ரா. கையை தட்டி விட்டவள்.

”என்னடி சொல்ற… அவரு சாப்பிட்டாரோ இல்லயோ…. நா மட்டும் எப்படி டீ…” கண்களில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டு,

”இங்க பாரு பவி… அப்பா, அம்மா பாசம் ஏதென்டே தெரியாம வளந்த ஏ நெஞ்சுல பால வார்த்தவருடீ… ஓ மச்சான்…” மேலும் பேச சக்தியற்றவளைப் போல மடியில் சாய்ந்து கொண்டவளின் நிலைமை மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியது பவித்ராவுக்கு. பழைய ஞாபகங்கள் மீண்டும் எழ கண்கள் குளமாக அதை மீட்டினாள்.


”ஏ பவி… நீ யார் கூட ரொம்ப பாசமா இருப்ப?”

கல்யாணி அவளை கூர்ந்து நோக்கினாள்.

”என்னக்கா இப்படி கேக்குற….. நீ, பெரியக்கா… என்னா எனக்கு உயிரு மாதிரி…” அவளது தோளைக் கட்டிக் கொண்டாள்.

”ம்…போதும் அக்கா, தங்கச்சி நாடகம்… அங்க பாரு யாரு வந்திருக்குனு..?”

பார்வதி கூறியதுமே.

”யாரு சித்தி…?”

வேகமாக முன் வாசலுக்குச் சென்றவள் ஒரு நிமிடம் ஆச்சரியமடைந்தவள் மறு நிமிடம் சந்தோசத்தால் துள்ளிக்குதித்தபடியே ஓடினாள்.

”ஐ…. ஜாலி…ஜாலி….”

”யாரு சித்தி… வந்தது? இப்படி துள்ளுறா…”

முன்வாசலை நோக்கிப் போன கல்யாணியும் ஒரு நிமிடம் சிலையானாள்.

தொடரும்….
Rifdha Rifhan
SEUSL

கார்த்திக் அந்த உருவத்தை உற்றுப் பார்த்தாலும் அவனால் அடைய காண முடியவில்லை ”ஏய்…. யாருடா நீ?” கத்தியவனின் அருகே வந்த அந்த நெடியவன். ”இங்க பாரு… கத்தாத… கத்தி பிரயோஜனமும் இல்ல… ” முரட்டுச்…

கார்த்திக் அந்த உருவத்தை உற்றுப் பார்த்தாலும் அவனால் அடைய காண முடியவில்லை ”ஏய்…. யாருடா நீ?” கத்தியவனின் அருகே வந்த அந்த நெடியவன். ”இங்க பாரு… கத்தாத… கத்தி பிரயோஜனமும் இல்ல… ” முரட்டுச்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *