குரங்கு மனசு பாகம் 27

  • 5

“ஹலோ!” நீண்ட நாட்களுக்குப் பின் கணவனின் குரல் கேட்க, மௌனமாய் அக்குரலை இரசித்தாள் சர்மி.

“ஹலோ..” பிலால் குரல் சற்றுக் கடுமையாக,

“ஆஹ் ஹ.. ஹலோ.. நா.. நான் சர்மி பேசுறன்.”

“ஓஹ் தெரியுமே! என்ன வேணும் உனக்கு?”

“அதில்ல பிலால், ஐ யம் சொறி பிளீஸ்…”

“ஹஹ் என்னா? புள்ள சொறி எல்லாம் கேக்குது? என்னடீ உன் மனசுல நெனச்சிட்டு இருக்க? புருஷன் வார்த்தய மதிக்காக பொண்டாட்டி எனக்கு தேவல்ல…”

“அப்புடி சொல்ல வேணாம் பிலால். அந்தநேரம் நீங்களா இருந்தாலும் உங்க உம்மாவ விட்டு குடுத்திருக்க மாட்டீங்க தானே?”

“ஓஹ் பொத்துவாய.. நான் ஒன்னும் மத்தவங்களுக்கு கஷ்டம் கொடுக்குற உம்மா வயித்துல புள்ளயா பொறக்கல்ல, உன் உம்மா போல எங்க உம்மா ஒன்னும் செல்விஷ் இல்ல, சீசனுக்கு மாப்புள மாத்த நாங்க என்னா ஊனமாவிட்டோமா? தொழில் இல்லாம போனாலும் கட்டினவள காப்பாத்துற அளவுக்கு நல்லாத்தான் இருக்கோம். எங்க பணத்துக்கு பொண்ணு தர பாத்த உங்க உம்மா போல பொம்புளகளுக்கும், எல்லாம் ஓகே ஆனதும் நல்லா பேசவிட்டு அப்புறம் ஏதும் சிறிசா கண்டதும் இந்த மாப்புள வேணாம்னு சொல்றவங்களுக்கும், நீ பாடமா போயிடு. இனி நீ எனக்கு யாரும் இல்ல…”

சர்மியின் தரப்பிலிருந்து அழுகைச் சத்தம் மட்டுமே பதிலுக்கு கேட்க,

“இங்க பாரு நான் ஒன்னும் வெக்கம் கெட்டவனில்ல. எனக்குன்னு தன்மானம் இருக்கு. நான் ஆம்புளடீ.. ‘ஐயோ! என் மாமி என்ன அவங்க வீட்டுக்கு கூப்புட்றாங்க, என் பொண்டாட்டி என்கிட்ட மன்னிப்பு கேக்குது’ன்னு சொல்லிட்டு உன் வீட்டுக்கு வரவோ இல்ல உன்ன திரும்ப ஏத்துக்கவோ நான் ஒன்னும் இலிச்ச வாய் கெடயாது.

“பிலால் எனக்கு நீங்க வேணும் பிளீஸ்…”

“ஓஹ்! இது எப்போல இருந்து? அப்போ நான் ஆஹ்? இல்ல உங்க உம்மவான்னு கேட்ட நேரம் என்ன தவிக்க விட்டுட்டு உம்மா பக்கம் போனவள் தானே நீ? அப்பவே உன்ன விட்டுப் போட்டுட்டன். இங்க கேளு.. எனக்கு நீ வேணாம். உன்ன போல பொம்புள தேவயேயில்ல.. உன் வீட்டுக்கு டிவோஸ் லெட்டர் வரும். அப்புறம் உம்மாவும் புள்ளயும் சேர்ந்து குடும்பம் நடத்துங்க.. வைடீ போன…”

சற்றும் நெகிழாமல் சர்மியுடனான கோவத்தில் கவலை தீர வார்த்தைகளை கொட்டித் தள்ளியவன் அழைப்பைத் துண்டிக்க, கணவனின் வார்த்தை வீச்சுக்களை தாங்கிக் கொள்ள முடியாது உருகி அழுதாள் சர்மி.

“ஏன்ட அல்லாஹ்! என் வாழ்க்கையில இப்புடி எல்லாம் எழுதி வெச்சிட்டியே! தாங்கிக்கொள்ள முடியாம இருக்கே, நான் யாருக்கும் கெடுதல் செஞ்சில்ல அல்லாஹ்… என்னால இதுக்கு மேல வாழப் பிடிக்கல்ல…”

கையால் முகத்தை மூடிக்கொண்டு கதறியவள், தான் இனி வாழ்வதில் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தாள்.

“நான் இனி வாழ மாட்டன். யாருக்கும் என்னால கஷ்டம் தேவயில்ல, நான் போயிட்றன், நான் போயிட்றன், நான் போயிட்றன்” உணர்ச்சி மேலீட்டிலே பைத்தியம் பிடித்தவள் போல் அறையிலிருந்து வெளியே வந்தாள்.

“என்னால முடியல்ல’ நெஞ்சை பிடித்துக் கொண்டு கத்தியழுதவள், தன் அடுத்த கட்டம் குறித்து பயங்கரமாய் சிந்திக்கலானாள்.

புதுத் தம்பதிகளாய் சந்தோஷமாக குடும்பம் நடாத்த வேண்டிய நிலையில், இவளுக்கு வந்த சோதனைகள் தேடி வந்தவைகளல்ல, தேடிக்கொண்டவைகள். ஆம்! ஆண்கள் ஒன்றும் விளையாட்டு பொம்மைகள் அல்லவே!

கதை தொடரும்…
Aathifa Ashraf

“ஹலோ!” நீண்ட நாட்களுக்குப் பின் கணவனின் குரல் கேட்க, மௌனமாய் அக்குரலை இரசித்தாள் சர்மி. “ஹலோ..” பிலால் குரல் சற்றுக் கடுமையாக, “ஆஹ் ஹ.. ஹலோ.. நா.. நான் சர்மி பேசுறன்.” “ஓஹ் தெரியுமே!…

“ஹலோ!” நீண்ட நாட்களுக்குப் பின் கணவனின் குரல் கேட்க, மௌனமாய் அக்குரலை இரசித்தாள் சர்மி. “ஹலோ..” பிலால் குரல் சற்றுக் கடுமையாக, “ஆஹ் ஹ.. ஹலோ.. நா.. நான் சர்மி பேசுறன்.” “ஓஹ் தெரியுமே!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *