Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
சமாதானம் போற்றப்பட வேண்டிய கல்விச்சமூகம் 

சமாதானம் போற்றப்பட வேண்டிய கல்விச்சமூகம்

  • 13

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

சமாதானமானது உள்ளக மற்றும் வெளியக பிரபஞ்சங்களின் தோற்றுவாயாகக் காணப்படுகின்றது. உண்மையில் சமாதானம் என்பது ஒரு குறிப்பிட்ட விடயத்தின் விளைவான அல்லது பல்வேறு துறைகளின் சமநிலையாலும் இணைப்பினாலும் தோற்றுவிக்கப்படும் ஒன்றேயாகும். நடைமுறை வாழ்வில் சமாதானமாக இருப்பதற்கு ஒருவருக்கு வேண்டிய அறிவு¸ மனவெழுச்சி தனிநபர்களுக்கிடையிலான ஆற்றல்கள் மற்றும் மோதல்களை நிவர்த்தி செய்வதற்காக பயன்படுத்தக் கூடிய நுட்ப முறைகள்¸ பயிற்சிகள் என்பவற்றை பெற்றுத் தரும் கல்வியே சமாதானக் கல்வி எனப்படும்.

தவறான வழிகளில் எதிர்கால சமுதாயம் சிக்கிவிடாமல் காத்து அவர்களின் பலத்தினை¸ திறனை¸ அழகியல்¸ ரசனை¸ ஆக்கத்திரன்¸ விஞ்ஞானம்¸ விவேகம்¸ ஆய்வு என்பவற்றை கொண்ட பரிபூரண வாழ்க்கையை நோக்கி அதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இக் கல்வி அவசியமானதாகும். சமாதானக் கல்வி மாணவர்களை சுறுசுறுப்புள்ள செயல்வீரர்களாக மாற்றும் என்பது அதன் செயற்பாடுகளை அவதானிக்கும் எவருக்கும் தெளிவாக புரியும். அங்கு கவனமாய்ச் செவிசாய்த்தல்¸ தனக்காகக் குரல் கொடுத்தல்¸ தனது உணர்வுகளைத் தெளிவாக மற்றவர்களுக்கு எடுத்துக் கூறல்¸ நேர்நடத்தை¸ உறுதிப்பாடு¸ எதிர்ப்புத் தெரிவித்தல்¸ பொறுப்புணர்ச்சியுடன் தீர்மானங்களை மேற்கொள்ளல்¸ விவேகத்துடன் மோதல்களை நிவர்த்தி செய்தல். போன்ற பல்வேறு செயற்பாடுகளை விருத்தி செய்து கொள்வதற்கும் இக் கல்வி அவசியமாகும்.

அகிம்சை வழி நின்று செயற்படுதல் நன்று எனவும் சாலச் சிறந்தது என்றும் மகாத்மா காந்தி¸ மார்டின் லூதர் கிங் போன்றோர் எடுத்துக் காட்டி உள்ளனர். சுமாதானக் கல்வியை ஏற்படுத்திக் கொள்வதற்குக் பிள்ளைகளின் ஆளுமை விருத்தியை ஏற்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளைக் குறிப்பிடுதல் ஆசிரியர்¸ மாணவர்களின் செயற்பாடுகள்.

ஒரு சிறந்த ஆசிரியர்¸ மாணவர் தொடர்பினைக் கட்டியெழுப்புதல்¸ வகுப்பறையிலே நட்புடன் கூடிய பரஸ்பர நல்லெண்னத்துடன் கௌரவத்துடனும் உச்சாகமான ஆக்கச் செயற்பாட்டிற்கு ஊக்கமளிக்கும் திறந்த மனத்துடனும் கூடிய ஒரு சமூகச் சூழ்நிலையைத் தோற்றுவித்தல். வகுப்பறையில் ஒரே விதமான நடத்தை கோலத்தில் ஒரு மாற்றத்தைக் காணுதல். பெரும்பாலான செயற்பாடுகளால் மன குறுக்கம்¸ மன முறிவு இல்லாமல் போதல். பாடசாலையையும் வகுப்பறையையும் மாணவர்களின் விருப்புக்குரிய ஓர் இடமாக மாற்றிக் கொள்வதன் மூலம் கற்றலுக்கான பங்குபற்றலை அதிகரித்தல்.

சமாதானக் கல்வி வழங்கப்படுதன் மூலம் ஒரு பிரஜையிடம் எதிர்பார்க்கக் கூடிய பல விடயங்கள் உள்ளன. இது சமூக இசைவாக்கம் மற்றும் சமாதானத்திற்கான தேசிய கொள்கைகள்¸ 2008 – கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டதாகும். அந்த வகையில்¸ பல் கலாச்சார சமூகத்தில் வாழும் தனி நபர் ஒருவர் பல்வகைமைக்கு மதிப்பளிப்பார்¸ வேறுபாடுகளை அடிப்படையாக கொண்டு போட்டியிட மாட்டார். ஏனைய கலாச்சாரங்களை சகித்துக் கொள்வார். ஏனையோரை மதித்து மரியாதையுடன் நடந்து கொள்வார்¸ அத்துடன் மரியாதை கெடா வண்ணம் நடாத்துவார்¸ இவர் ஒரு போதும் இனவாதி அல்லர்¸ புறவயமாக பல்வேறுபட்ட கலாச்சாரங்களுக்கிடையிலான இணக்கமின்மைக்கான காரணங்களை பகுப்பாய்வு செய்வார்¸ தீர்மானங்கள்¸ முடிவுகள் எடுக்கும் பட்சத்தில் ஜனநாயக வழியையே கையாள்வதற்கு முன்வருவார்.

எவ்வித சாதி¸ மத¸ இன¸ பேத வர்க்கப் பாகுபாடற்ற முரண்பாடுகள் இன்றியே தனக்கு கிடைத்த குழுவில் தன் பணியை சமத்துவமாக செய்வார். மற்றவர்களின் கருத்துகளுக்கு முன்னுரிமை அளிப்பார். விளங்கிக் கொள்ள முயற்சிப்பார். தம்மிடையே சமத்துவமான முறையில் வளங்களைப் பகிர்வார்¸ எப்போதும் திறந்த மனமுடையவராகவே இருப்பார்¸ நுணுக்காற்றலுடன் சிந்தனை செய்வார்¸ உறுதிப்பாங்கான மனத்துடன் செயலாற்றுவார். ஏனையோரின் உரிமைகளை உறுதிப்படுத்தி மதிப்பளிப்பார்¸ எவ்வகையான பிரச்சினைகளையும் முகம்கொடுத்து தீர்க்க வழி அமைப்பார்¸ பல்வேறுபட்ட சவால்களை எதிர்நோக்குவார்¸ முரண்பாட்டையே மாற்றி அமைத்து நேர்முறையான சிந்தனையின் வழி பயணிப்பார். உட்சமாதானத்தை கண்டவர்¸ சமாதானமானதும் நிலைபேறுடையதுமான வாழ்க்கை முறையினை உடையவர்¸ தன் சொந்த ஆற்றலையும் வேலைப் பிரமானத்தையும் விளங்கக் கூடியவர்.

அரசியலின் விளக்கம் கொண்டவர்¸ ஊழல்¸ மோசடி போன்ற அத்து மீறல்களுக்கு இடமளிக்காத மன உறுதி கொண்டவர். எவ்வித எதிர்பார்புகளும் இன்றி ஏனையோருக்கு சேவை புரிபவர். குடியியலிலும் நற்குணங்கள் உடையவர். துணிவாக எதையும் அர்ப்பணிக்க அஞ்சியவரல்ல¸ உலகளாவிய பார்வை கொண்டவர்¸ உலகின் பிரஜை¸ உலகின் முன்னேற்றத்திற்காக அயராது முயற்சிக்க வேண்டும் என்பதில் திடசங்கம் பூண்டவர்¸ சுற்றுச் சூழல் சுகாதாரத்துடனும் நட்புரிமையுடன் வாழ்பவர்¸ சிந்தனை¸ சொற்களில் கூட பிறர் துன்பம் அடைய நினைக்காதவர்¸ ஏனையோரின் உணர்ச்சிகளை மதித்து அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பவர். உணர்வுப் பகிர்வுள்ளவர்.

இலங்கை நாட்டினுடைய பாரம்பரியங்கள்¸ கலாச்சாரங்கள்¸ விளுமியப் பண்புகள் என்னும் காலத்தால் அழியாதவை மற்றும் மாறாத பரம் பொருட்கள் ஆகும். இதனை எவ்வித எதிர்பார்ப்புகளுமன்றி பாதுகாக்கக் கூடியவர். சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து கீழ்படிபவர்¸ விதிகள்¸ பிரமானங்கள் அனைத்திற்கும் அப்பாலான பண்புகளை கொண்டவர்.

இத்தலைப்பானது சுவாரஸ்யமான புது விடயங்களை அனைவரது மனதிலும் உட்புகுத்திவிடாது என்பது இதனை எழுதும் நான் கண்ட உண்மை. இருப்பினும் மேற் கூறப்பட்ட அனைத்து விடயங்களும் வாசகர்கள் ஒவ்வொருவரினதும் உள்ளத்தில் கலந்தவை. ஆனால் இவை உள்ளத்தோடு நின்று விடாமல் உணர்வுகளினூடாக செயற்படுத்தப்பட வேண்டும் என்பதே அடியேனது அவா எனலாம். ஆகவே ஆசிரியர்கள்¸ மாணவர்கள் அனைவரும் கல்வி எனும் அமிர்தத்தினை அகிம்சை வழியில் எவ்வித இடையூறுமின்றி கொடுக்கவும் பெற்றுக்கொள்ளவும் இக் கட்டுரை எவ்வளவு உதவும் என்ற ஆசையுடனும் இலங்கையில் மாணவர்களின் மகிமை அளப்பரியது. ஆகவே¸ சிறந்த நாட்டினை இச்சமாதானக் கல்வியின் ஊடாக நிலைநாட்ட பேராசையுடன் வாழும் உயிர்களில் இவளும் ஒருத்தி என முடித்துக் கொள்கிறேன்.

றிஸ்வான் ஜுஸ்லா
2ம் வருட கல்வியியல் சிறப்புக்கற்கை,
கல்வி பிள்ளைநலத்துறை
கிழக்கு பல்கலைக்கழகம்
வந்தாறு மூலை
இலங்கை

சமாதானமானது உள்ளக மற்றும் வெளியக பிரபஞ்சங்களின் தோற்றுவாயாகக் காணப்படுகின்றது. உண்மையில் சமாதானம் என்பது ஒரு குறிப்பிட்ட விடயத்தின் விளைவான அல்லது பல்வேறு துறைகளின் சமநிலையாலும் இணைப்பினாலும் தோற்றுவிக்கப்படும் ஒன்றேயாகும். நடைமுறை வாழ்வில் சமாதானமாக இருப்பதற்கு…

சமாதானமானது உள்ளக மற்றும் வெளியக பிரபஞ்சங்களின் தோற்றுவாயாகக் காணப்படுகின்றது. உண்மையில் சமாதானம் என்பது ஒரு குறிப்பிட்ட விடயத்தின் விளைவான அல்லது பல்வேறு துறைகளின் சமநிலையாலும் இணைப்பினாலும் தோற்றுவிக்கப்படும் ஒன்றேயாகும். நடைமுறை வாழ்வில் சமாதானமாக இருப்பதற்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *