Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
குரங்கு மனசு பாகம் 32 

குரங்கு மனசு பாகம் 32

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

சர்மியை பார்க்கிலும் தாய் ராபியாவுக்கு நடுக்கம் பிடித்துக்கொள்ள,

“என்ன கொல்லிருக்கான்? பாரு… பாரு சர்மி..”

மகளை அவசரப்படுத்த, அதீகின் மெஸேஜை ஓபன் செய்கிறாள் சர்மி.

“விச் சர்மி” தூக்கி வாரிப்போட்டது சர்மிக்கு.

“சொறி ரோங்க் மெஸெஜ்” பதிலுக்கு சொன்ன சர்மியை நாடி மீள் எந்த மெஸேஜும் அதீக் தரப்பிலிருந்து வாராதிருக்க இன்னும் உடைந்து போனாளவள்.

“அதீக் என்மேல விருப்பமில்லாம இருக்குற போலமா. எந்த சர்மின்னு கேக்குற அளவுக்கு என்ன அறியாம போயிட்டானா?” விம்மி அழுத மகளுக்கு என்ன சொல்வதென்றே புரியாமல் மௌனியாக நின்றிருந்தாள் தாய் ராபியாவும்.

***************************

தன் இறந்தகால வேதனைகள் எதுவும் சர்மியை விட்டு விலகிப்போகாத நிலையில், அதன் வடுக்கள் அவள் நிகழ்காலத்தை வதைத்துக் கொண்டிருக்க, அதன் காரணகர்த்தாக்களாக அதீகையோ பிலாலையோ சொல்ல முடியாது தான். இவ்வாறு இரண்டு நாட்கள் கழிய, இனப்பெருக்கம் செய்வது போல் ஒன்றன் பின் ஒன்றாக துன்பங்களும் விட்டு விடவில்லை சர்மியை.

ஆம்! அதீகின் நெருங்கிய நண்பர்களுல் ஒருவரான ரினாஸ் சர்மியின் வீட்டு முகவரி கோரி அவள் இலக்கத்துக்கு திடீரென்று மெஸேஜ் போட, காரணம் யாதென்று வினவிய சர்மி விடயம் அறிந்ததும் அந்தக் கவலையை தாக்குப்பிடித்துக் கொள்ள முடியாமல் நிலத்தில் சாய்ந்தாள்.

ஆம்! அதீக் இன்னொருத்திக்கு வாழ்க்கைப் படுவதை எப்படியும் இந்த மனம் தாங்காது தான். அதீகின் ஆடம்பரத் திருமணத்துக்கு சர்மி வீட்டை வரச்சொல்லி அழைப்பிதழ் அனுப்ப, வீட்டு முகவரி கேட்டு வந்த மெஸேஜது.

“அதீன் கலியாணமா? அப்போ இவன் என்னை மறந்து விட்டானா? நியாயம் இருக்கல்லவா? நான் தான் விதவையாயிற்றே… என்னை எவ்வாறு ஏற்றுக்கொள்வான்? நான் கட்டிக் கொண்டவனால் விடப்பட்ட விதவை தானே? வாழா விட்டாலும் எந்த ஆணும் என்னை மாசுபட்டவளாகத் தானே காண்பார்கள்.”

தானே கேள்வி கேட்டு தனக்குத்தான் பதிலையும் சொல்லிக் கொண்டவளாக அகம் நிறைய வருத்தத்தோடு அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள் சர்மி.

“ஹெபி மெரேஜ் லய்ப் அதீக்” கடமைக்காய் வாழ்த்துச் செய்தியொன்றையும் அனுப்பிவிட்டு வேறு வழியின்றி தன்பாட்டில் இருந்த சர்மியை நாடி அதீகின் திருமண அழைப்பிதலும் வந்தாகிவிட்டது.

தனக்காகவன் இன்னொருத்திக்கு கணவனாகப் போகும் நிலையில் கண்ணீர் நிறைய அந்த அழைப்பிதலைப் பிரித்தாள். அவள் உடம்பெல்லாம் நடுங்க உதடு கடிபட்டது.

“உம்மா இதப் பாருங்க”

ஆச்சரியத்துடன் கத்திக் கொண்டே ஓடி வந்த மகள் கையில் கிடந்த அந்த அழைப்பிதலைப் பிடுங்கிப் பார்த்த தாய் ராபியாவும் ஆச்சரிய மேலீட்டில் கண்ணீர் வழிந்தோட அழுதாள்.

கதை தொடரும்…
Aathifa Ashraf

சர்மியை பார்க்கிலும் தாய் ராபியாவுக்கு நடுக்கம் பிடித்துக்கொள்ள, “என்ன கொல்லிருக்கான்? பாரு… பாரு சர்மி..” மகளை அவசரப்படுத்த, அதீகின் மெஸேஜை ஓபன் செய்கிறாள் சர்மி. “விச் சர்மி” தூக்கி வாரிப்போட்டது சர்மிக்கு. “சொறி ரோங்க்…

சர்மியை பார்க்கிலும் தாய் ராபியாவுக்கு நடுக்கம் பிடித்துக்கொள்ள, “என்ன கொல்லிருக்கான்? பாரு… பாரு சர்மி..” மகளை அவசரப்படுத்த, அதீகின் மெஸேஜை ஓபன் செய்கிறாள் சர்மி. “விச் சர்மி” தூக்கி வாரிப்போட்டது சர்மிக்கு. “சொறி ரோங்க்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *