குரங்கு மனசு பாகம் 35

  • 11

“புள்ள சர்மி பிளீஸ் அழாத டா, அழாத கண்ணு. உனக்குத் தான் இந்த உம்மா இருக்கன்ல, இப்படி அழக் கூடாதும்மா… சர்மி… சர்மி… சர்மி… சர்மி பேசும்மா… சர்மி..”

மயக்கமுற்ற தரையில் சாய்ந்த மகளின் நிலை கண்டு நடுங்கிப் போனாள் தாய் ராபியா.

“சர்மி எழும்புடா…”

தண்ணீர் சொட்டுக்களை அவள் மேல் தெளிக்க தன்னிலை உணர்ந்தவள் மீண்டும் விம்மி விம்மி அழுதாள். வாஹிதாவின் ஒவ்வொரு வார்த்தைகளும் தாயையும், மகளையும் உயிருடன் வதைத்தன.

“நான் இப்புடியே இருந்துட்டு போறன் மா. எனக்கு யாருமே வேணாம் மா. என்னால இதற்கு மேலயும் தாக்குப் பிடிக்க முடியல்லம்மா. சரி கண்ணு, கலங்காத டா. உனக்குத் தான் உம்மா இருக்கன்ல.”

*********************************

தாயைக் கட்டிப் பிடித்துக் கொண்டு மீள் அழுதவளுக்கு எந்த ஆற்றுப்படுத்தல்களும் பலனளிக்கவில்லை. மறுபுறம் தன் விருப்பு குறித்து தாயிடம் மன்றாடித் தோற்றுப் போன அதீக் அதன் எதிர் விளைவுகளையும், சர்மியின் வீடு சென்று தன் தாய் செய்த லீலைகள் குறித்தும் எதுவுமே அறிந்திருக்கவில்லை. ஆக எப்படியாவது தன் தாயுடன் சர்மி விவகாரமாக சமாதானம் பேசி சம்மதிக்க வைக்கலாம் என்ற நப்பாசையில் கனவு கண்டுக் கொண்டிருந்தான்.

வாஹிதாவின் முடிவில் இருந்த உறுதி அவ்வளவு இலகுவாக உடைந்து போவதல்லவே!

**************************

“என் புள்ளய எப்புடி தவிக்க விட்டிருப்பாங்க, ஆட்டோ ட்ரைவர்னு சொல்லி எந்தளவு கீழ்த்தரமா நடாத்தினாங்க, வீட்டுக்கு போய் நொந்து வந்தவங்க தானே நாம, இப்போ பணத்தக் கண்டதும் வாய பிளந்துட்டு வந்துட்டாங்க”

வாய் மூடாமல் முணுமுணுத்துக் கொண்டே சமையல் வேலைகளில் மும்முரமாய் இருந்தாள் வாஹிதா.

“உம்மா எங்க இருக்கீங்க? இந்தாங்க நாநா கோல் (Call) இங்க கிஷ்ஷன் ல வேலடா, கொஞ்சம் போன எடுத்துட்டு வந்து தாவேன்”

அதீகின் இளையவன் தாயை தேடி வந்து மொபைலைக் கொடுத்தான்.

“சொல்லு மகன். இந்த நேரம் எதுக்கு போன் பண்ணி இருக்க? உம்மா அதுவந்து நான் இமேஜென்சி விஷால நெக்ஸ்ட் வீக் ஶ்ரீலங்கா வாரன் மா. ஹே எதுக்குடா? என்ன அவ்வளவு அவசரம்?” ஏதோ தப்பாகத் தோன்றியது வாஹிதாவுக்கு.

“அது ஒன்னும் இல்லம்மா. நாட்டுக்கு வந்து நேர்ல பேசிக்குவோமே என்னா? என்ன பேச இருக்கு? சொல்லு அதீக்.”

“எதுக்கும்மா இந்தளவு பதட்டம்? உங்க புள்ள வாரானேன்னு சந்தோஷப் படுவீங்கன்னு பார்த்தா இது என்னமோ நான் வாரதுல இஷ்டமே இல்லாத போல பேசுறீங்க?”

“நீ வாரதுல இந்த உம்மா சந்தோஷப் படாம இருப்பனாடா? ஆனா உம்மாவோட விருப்பத்துக்கு மீறி என் புள்ள நடந்துக்க மாட்டானே?”

“வந்து நேர்ல பேசுறன் மா”

வாஹிதாவின் கேள்விக்கு பதில் சொல்லாமலே ஏதோ பெரும் திட்டத்தோடு தாய் நாடு காண தயாரானான் அதீக். ஆயினும் எதுவாக இருந்தாலும் இன்னும் இன்னும் நொந்து போகாதளவுக்கு சர்மி உள்ளம் விரும்புவதாய் எல்லாம் கைகூடினால் சந்தோஷமே.

கதை தொடரும்…
Aathifa Ashraf

“புள்ள சர்மி பிளீஸ் அழாத டா, அழாத கண்ணு. உனக்குத் தான் இந்த உம்மா இருக்கன்ல, இப்படி அழக் கூடாதும்மா… சர்மி… சர்மி… சர்மி… சர்மி பேசும்மா… சர்மி..” மயக்கமுற்ற தரையில் சாய்ந்த மகளின்…

“புள்ள சர்மி பிளீஸ் அழாத டா, அழாத கண்ணு. உனக்குத் தான் இந்த உம்மா இருக்கன்ல, இப்படி அழக் கூடாதும்மா… சர்மி… சர்மி… சர்மி… சர்மி பேசும்மா… சர்மி..” மயக்கமுற்ற தரையில் சாய்ந்த மகளின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *