குரங்கு மனசு பாகம் 51

  • 9

“இரியுங்கம்மா, நாநா இப்போ வந்துடுவாரு. கொஞ்சம் பொறுமயா இரீங்கம்மா.. பிளீஸ் மா, பிளீஸ்”

“நான் வேணாம்னு போனவன்டா அவன். அவன் வந்தன்னு எனக்கு என்ன கெடச்சிடப் போவுது?”

முன்னதாகவே விரைந்து வந்த அதீக் தாயின் கைப்பற்றி எழுந்து நிற்க உதவி செய்தான்.

“உங்களுக்கு என்னம்மா?”

பரிதாபமாய் கேள்வி தொடுத்த அதீகை எண்ணி உள்ளுக்குள் குளிர்ந்தாள் வாஹிதா. ஆயினும் அவள் திட்டம் கைகூடும் வரை விட்டு விடுவாளா என்ன?

“நான் எப்புடிப் போனா உனக்கு என்னடா? என்னமோ என் ஆயுசு கொறஞ்சிட்டு வருதுன்னு மட்டும் சொல்லலாம்.”

“இப்புடியெல்லாம் பேசாதிங்கம்மா. அப்புடி எதுவும் நடக்காது. சரி சரி டாக்டர் கிட்ட போய் வருவோமா?”

“இல்ல அது சரியாவிடும்”

நடிப்பு தெரிந்துவிடக் கூடாதல்லவா? மெதுவாக நகர்ந்து வீட்டுக்குள் சென்றாள்.

“நீ போடா… உன் பொண்டாட்டி, புள்ளகள் வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க.” சொல்லி முடிக்கும் முன்னதாகவே சர்மி அழைப்பு செய்ய,

“இப்போ வந்துட்றன்மா” அன்பாக சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்த மகன் மீது பயங்கரக் கோவம் வெளிக்கிட்டாலும் காட்டிக் கொள்ளவில்லை வாஹிதா.

“சரிம்மா நான் போய் வாரன், அங்க சர்மி…”

“சொல்லாத, நான் அவளப் பத்தி எதுவும் கேக்கல்லயே.. நீ போ, போயிடு இங்கிருந்து”

வெடுக்கென்று சொன்னவள் உள்ளே போக, ஆதிலுக்கு கண்ணால் பயணம் சொல்லிவிட்டு கிளம்பி வீடு வந்தான் அதீக்.

“ஏன்ட அபி வந்து, ஏன்ட அபி வந்து”

கூப்பாடு போட்ட மகனை தூக்கிக் கொண்டே வீட்டுக்குள் வந்தவனை நாடி, தேவதையாய் தன்னை அழங்கரித்துக் கொண்டு முன்னாடி வந்து நின்றாள் சர்மி. ஆயினும் வழமையான சந்தோஷத்தோடு மனைவியை அணுக முடியாதவன், அவளை பெரிதாகக் கண்டு கொள்ளாமல் குளியலறை செல்ல, ஏதோ சர்மியின் அகம் வலித்தது. எதையும் கணவனிடம் காட்டிக் கொள்ளாமல் சாப்பாடு தயார் பண்ணச் சென்றவளை ஏறிட்டும் பார்க்கவில்லை அதீக். இதுவரை பிள்ளையாய் தன்னைக் கொஞ்சும் தன்னவனின் திடீர் மாற்றத்துக்கான மர்மம் அறியாமல்,

“சொல்லுவார் தானே”

என்ற எண்ணத்தில் காத்திருந்தவளுக்கு அன்றைய நாள் எல்லாமே ஏமாற்றமாய் இருந்தது. அதையும் தாண்டி வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு படுக்கைக்குச் சென்றவள், தனக்காக ஆர்வமாய் காத்திருக்கும் கணவன் என்றுமில்லாதவாறு ஆழ்ந்து தூங்கியிருக்கக் கண்டு, ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டாள். இருப்பினும் தனியாக, மெதுவாக எவ்வளவு இயலுமோ, அந்தளவு அழுது தீர்த்தவள் அக் களைப்பிலேயே மெதுவாகக் கண்ணயர்ந்தாள்.

நேரம் ஏதோ சர்மிக்கு பாதகமாய் இருக்க, தன்னவன் தன்னை விட்டு தூரமாய்ப் போவதாக, தான் தனிமையில் அழுவதாக, தனக்கு யாரும் இல்லாத நிலை உருவாவதாக அன்றைய கனவு கூட அவளை வெகுவாய் வாட்ட,

“நோ… நோ…” என்று கத்திக் கொண்டு எழுந்து நின்றவள் இன்னும் தான் வெகுவாய் உடைந்து போகலானாள்.

கதை தொடரும்…
Aathifa Ashraf

“இரியுங்கம்மா, நாநா இப்போ வந்துடுவாரு. கொஞ்சம் பொறுமயா இரீங்கம்மா.. பிளீஸ் மா, பிளீஸ்” “நான் வேணாம்னு போனவன்டா அவன். அவன் வந்தன்னு எனக்கு என்ன கெடச்சிடப் போவுது?” முன்னதாகவே விரைந்து வந்த அதீக் தாயின்…

“இரியுங்கம்மா, நாநா இப்போ வந்துடுவாரு. கொஞ்சம் பொறுமயா இரீங்கம்மா.. பிளீஸ் மா, பிளீஸ்” “நான் வேணாம்னு போனவன்டா அவன். அவன் வந்தன்னு எனக்கு என்ன கெடச்சிடப் போவுது?” முன்னதாகவே விரைந்து வந்த அதீக் தாயின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *