Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
கொரோனாவால எல்லாம் தலகீழ 

கொரோனாவால எல்லாம் தலகீழ

  • 11

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

“இப்பவல்லாம் போனுக்கு காசு போடவே ஒரு தொகை ஒதுக்க வேண்டியிருக்கு” என அலுத்துக் கொண்டார் சுஹாரா மாமி.

“அது என்டா உண்ம தான் தாத்தா. இப்ப சாப்பாட்டுக்கு கறி, புளி வாங்கவே கஷ்டமாயிருக்கு. இதுல இது வேற செலவு” ஒத்து ஊதினாள் ஆயிஷா தாத்தா.

“என்ன செய்ய இனி, புள்ளகளுக்கு ஸ்கூலும் இல்ல. போன்ல படிச்சி கொடுக்குறதும் பெரிய விசயம் தான்.” சுஹாரா தாத்தா கூற,

“ஒ சுஹாரா தாத்தா முந்தியெல்லாம் புள்ளகளுக்கு போனே கையில கொடுக்க வாணம் என்டு எனா சொன்னாங்க. இப்போ கொரோனாவால எல்லாம் தலகீழ எங்கட ஊட்டுல 24 மணித்தியாலமும் போன் இப்ப புள்ளகள்ட கையில.” ஆயிஷா தாத்தா சொல்லி முடித்தார்.

“எங்கட மகள் ஸீனதும் அப்படி தான் என்னத்தான் படிக்கிறாவோ தெரியா. இராவெல்லாம் படிக்கிறா பகலெல்லாம் தூங்குறா.” யோசித்தார் சுஹாரா மாமி.

” தாத்தா நீங்க கொஞ்சம் பாக்குறல்லயா அவ என்ன படிக்குற என்டு. ராவக்கி மிச்சம் போன கொடுக்க வாணம் தாத்தா. அது கண்ணுக்கும் சரியில்லயாமே ஒரே ரேடியோல முஸ்லிம் நிகழ்ச்சில இது பத்தி சொல்ற.” ஆலோசனை வழங்கினாள் ஆயிஷா தாத்தா.

“நீங்க சொல்றதும் சரி தான் தங்கச்சி. ஆனா நா ஒன்டு சொல்லி அவ கேட்டா இனி சூரியன் மத்த பக்கமா தான் உதிச்சும். எங்கட இவரும் எனக்கு ஒன்டும் தெரியாத மாதிரி எனா மகளுக்கு சபோட் பண்ணுற.” புலம்பினார் சுஹாரா மாமி.

“எங்கட சின்னவனாலயும் ஏலா.” ஆயிஷா தாத்தா நீட்ட,

“அது எனா தங்கச்சி” கேட்டாள் சுஹாரா மாமி.

“செல்லி வேல இல்ல தாத்தா. அவனுக்கு அவங்கட மிஸ் பேப்பர், பயிற்சி அனுப்பினா அத அவன் செய்றல்ல. எப்படியோ ஏமாத்தி கொஞ்சி கெஞ்சி அழுது புழுந்து கடைசில நான் தான் செய்யோனும்.” என் தன் பங்குக்கு புலம்பினாள் ஆயிஷா தாத்தா.

“அதென்டா வேல இல்ல தான் தங்கச்சி. அவன் செஞ்சா தானே அவனுக்கு நல்லம். இல்லாடி மிஸ்ஸ ஏமாத்துறது மட்டும் தான் மிச்சம். கடைசில ஏமாற போறது மிஸ்ஸல்ல நாங்க” என சுஹாரா மாமி முடிக்கும் முன்பே,

“அது நூத்துக்கு நூறு உண்ம தான் தாத்தா. ஆனா இவனுக்கு காட்டூன் பாக்கவும் விளாடவுமே டயிம் சரி. இப்ப 2ஆம் ஆண்டு ஸ்கொலர்சிப்புக்கு இப்பவே ரெடியான தானே சரி. இந்த கொரோனாவால என்ன நடக்குமோ தெரியா. எங்கட மத்தது 2உம் என்டா ஒருமாரி பாஸ் இவனும் கெட்டிக்காரன்” கொஞ்சம் பெருமையாக பீற்றீக் கொண்டாள் ஆயிஷா தாத்தா.

“ஓ இனி இந்த ஸ்கொலசிப்பும் பொய் வேல. சும்மா புள்ளகள போட்டு வதை பண்ணி மிஸ்மாரும் வதை படுற. உம்மாமார்ட எக்ஸேம் என்டு தானே இதுக்கு செல்ற.” தன் மகள்கள் பெயிலென்ற ஏமாற்றத்தை மறைத்தாள் சுஹாரா மாமி.

“ஆனா இப்படி செல்லுற ஆக்கள் தான் அவங்கட புள்ளகள பாஸாக்க இராவு பகலா பாடுபடுற. இனி பாஸாகவ சான்ஸும் இருக்கோனும்” வாழைபழத்தில் ஊசி ஏற்றினாள் ஆயிஷா தாத்தா.

“அதில்ல தங்கச்சி உங்கட வீட்டில போனுக்கு சண்ட புடிச்சி கொள்றலயா?” கதையை மாற்றினாள் சுஹாரா மாமி.

“அத ஏ கேக்குற தாத்தா. எங்கட பெரியவன் அவங்கட டெடாவோட சண்ட. புதுசா அவனுக்கு தனிய போன் வாங்கி தரட்டாம். எங்க இப்ப பிஸ்னஸே இல்ல எனா. அவரு ஒரு மாதிரி ஏமாத்தி வைச்சிருக்குற. இந்த கொரோனா முடிய கொள்ள சண்ட விளக்கி விளக்கி எங்கட தொண்ட தான் வத்தி போகும்.” தலையில் கையை வைத்தார் ஆயிஷா தாத்தா.

“ஓ! தங்கச்சி இதுகளுக்கு விதவிதமா ஆக்கி கொடுத்தே எங்கட டயிம் போற. அந்த போன்ல பார்த்து பார்து அது இது செஞ்சி கேக்குற. சில பேர்களே வாயில வாரேமில்ல. சொன்னா விளங்குறமில்ல அதுகளுக்கு.” தன் கஷ்டத்தை பகிர்ந்தார் சுஹாரா மாமி.

“ஓ தாத்தா இந்த 2, 3 அ வைச்சி கொண்டே எங்களுக்கு சமாளிக்க ஏலாம இருக்கு. ஸ்கூல்ல மிஸ்மார் பாவம் என்டு இப்ப தான் விளங்குது.” ஆயிஷா தாத்தா பரிதாபப்பட்டார்.

அதே நேரம் மஃரிப் அதான் சத்தம் கேட்கவே, “அப்ப தங்கச்சி மஃரிபும் வந்து இப்ப மஃரிப் நேரத்தோட எனா? நா பெய்து வாரான். இனி ராவாக்கி கடயப்பம் செய்யோம் ஓணுமே.” சுஹாரா தாத்தா விடைபெற,

“ஓ தாத்தா நானும் ஊட்டுக்குள்ள போற. சரி நெழும்பும் தான் நாளக்கி மீதிய பேசுவோமே.” தன் கையில் அமர்ந்த நுளம்பிற்கு மரண அடி கொடுத்தவராய் ஆயிஷா தாத்தாவும் வீட்டுக்குள் சென்றார்.

கொரோனா அச்சத்தால் சுகாதார முறைபடி வேலிக்கு அங்காலயும் இங்காலயும் இருந்து முந்தானையை மாஸ்காய் சுற்றி கதைத்து களைத்த இருவரும் நாளைக்கும் புதிய செய்திகளை பகிரும் ஆர்வத்தோடு விடை பெற்றுச் சென்றனர்.

Shifana Zameer
Balangoda

“இப்பவல்லாம் போனுக்கு காசு போடவே ஒரு தொகை ஒதுக்க வேண்டியிருக்கு” என அலுத்துக் கொண்டார் சுஹாரா மாமி. “அது என்டா உண்ம தான் தாத்தா. இப்ப சாப்பாட்டுக்கு கறி, புளி வாங்கவே கஷ்டமாயிருக்கு. இதுல…

“இப்பவல்லாம் போனுக்கு காசு போடவே ஒரு தொகை ஒதுக்க வேண்டியிருக்கு” என அலுத்துக் கொண்டார் சுஹாரா மாமி. “அது என்டா உண்ம தான் தாத்தா. இப்ப சாப்பாட்டுக்கு கறி, புளி வாங்கவே கஷ்டமாயிருக்கு. இதுல…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *