Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
முதலாம் வருடம் 

முதலாம் வருடம்

  • 16

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பெற்றாரும், உற்றாரும்
கூட்டிவந்து கரைந்த
கனாக்களுக்கு நனவாய்
எங்களை கரை சேர்த்திட

படபடப்பும் பரபரப்பும்
சற்று கனதியாய் இருந்தது
பதிப்பு நாளின் புதிய அனுபவம்
அறிந்த முகங்கள் சில
அறியாத முகங்கள் பல
இந்த நாளில்

புல்வெட்டும் பணியாளனும்
சிரேஷ்ட மாணாக்களாகத்தான்
தென்பட்டன இரு விழிகளுக்கும்

யாரைக் கண்டாலும்
ஸலாமும்,விலாசமும்
மொழிந்ததே நாவு
சிரேஷ்டமாணாவாக
இருக்குமோ என்ற பீதியில்

முற்றாத காய்களாக வந்த
எங்களுக்கு கனிந்த கனிவான
தோழமைகளையும் பரிசளித்தது
பல்கலை வாழ்வுக்கு
இந்த நாள்

பேருந்து பயணத்தின்
புதிய அனுபவம்
விலைபேசி விட்டது
மூன்று வருட பயணத்திற்கு

பேரூந்தில் செருப்புக்களன்று
கரங்களில் பொருத்தி
வெட்கம் சொட்ட பிடித்துச் சென்ற
நாட்கள் சில
அனுபவமில்லாத அரைகுறை அனுபவம் அது

பசித்தாலும் சிற்றுண்டி
செல்ல முடியாத தருணம் சில
எது நடந்தாலும் சென்றுதான்
பார்ப்போமேயென்று சென்று
வாங்கிய உணவை நுகர்ந்து மட்டும்
பார்த்து விட்டு மனம் வரண்டு
சிரேஷ்ட மாணவிக்கு கொடுத்து விட்டு
சிக்கித் தவித்த தருணம்

வயது கடந்து சென்றாலும்
சிறு சிறு சந்தோசங்களும்
சில கசப்புக்களும்
சிறு குழந்தை ஆட்டமாய்
ஆடி செல்கிறது இந்த
முதலாம் வருடத்தின் பக்கங்களில்

N.SOHRA JABEEN
AKKARAIPATTU
SEUSL

பெற்றாரும், உற்றாரும் கூட்டிவந்து கரைந்த கனாக்களுக்கு நனவாய் எங்களை கரை சேர்த்திட படபடப்பும் பரபரப்பும் சற்று கனதியாய் இருந்தது பதிப்பு நாளின் புதிய அனுபவம் அறிந்த முகங்கள் சில அறியாத முகங்கள் பல இந்த…

பெற்றாரும், உற்றாரும் கூட்டிவந்து கரைந்த கனாக்களுக்கு நனவாய் எங்களை கரை சேர்த்திட படபடப்பும் பரபரப்பும் சற்று கனதியாய் இருந்தது பதிப்பு நாளின் புதிய அனுபவம் அறிந்த முகங்கள் சில அறியாத முகங்கள் பல இந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *