Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
கொரோனாவும் தடுப்பூசியும் கவிதை மக்கொனையூராள் Youth Ceylon 

கொரோனாவும் தடுப்பூசியும்

  • 12

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

கொரோனா தடுப்பூசி
இரு மாத்திரைகளையும்
ஏற்றிக்கொள்ளச்
சொல்கிறார்கள் – ஆனால்
இரு ஊசிகளையும்
ஏற்றிக் கொண்டவர்களுக்கும்
கொரோனா பொசிடிவ்
ஆகியிருக்கின்றது என்கின்றார்கள்.

அதே நிறுவத்தின் ஊசிக்காக
காத்திருக்க வேண்டாம்
கிடைப்பதை ஏற்றிடுங்கள்
என்கின்றார்கள் – ஆனால்
மாற்றி ஏற்றியவர்களுக்கும்
கொரோனா பொசிடிவ்
ஆனது என்று சொல்கின்றார்கள்.

தடுப்பூசி ஏற்றிக்கொள்வதன் மூலம்
கொரோனா தாக்கத்தின்
வீரியத்தை குறைக்க முடியும்
என்கின்றார்கள் – ஆனால்…
தடுப்பூசி போதியளவு
நோய் எதிர்ப்பு சக்தியை
தோற்றுவிக்காதவர்களுக்கு
கொரோனா ஏற்படின் தாக்கம்
அதிகம் என்கின்றார்கள்.

வெளிநாடு செல்வதென்றால்
கட்டாயம் இரு ஊசிகளும்
ஏற்றியிருக்க வேண்டும்
என்கின்றார்கள் – ஆனால்
சில நாடுகள்
சில வகையான ஊசிகளுக்கு
அனுமதிக்க மாட்டோம்
என்றும் சொல்கின்றார்கள்.

இரு ஊசிகளும்
ஏற்றிக்கொள்ளல்
கட்டாயம்
என்கின்றார்கள் – ஆனால்
மூன்றாவதாய் இன்னொன்றும்
ஏற்றிட வேண்டும் என்கின்றார்கள்.

இருதடுப்பூசீகளுக்கு
இத்துணை
கருத்துமுரண்பாடுகளா!
திகைத்து நிற்கிறேன்!
ஏற்பதா! மறுப்பதா!
என்பதையறியாமல்.

மக்கொனையூராள்

Sri Lankan Best News Service

கொரோனா தடுப்பூசி இரு மாத்திரைகளையும் ஏற்றிக்கொள்ளச் சொல்கிறார்கள் – ஆனால் இரு ஊசிகளையும் ஏற்றிக் கொண்டவர்களுக்கும் கொரோனா பொசிடிவ் ஆகியிருக்கின்றது என்கின்றார்கள். அதே நிறுவத்தின் ஊசிக்காக காத்திருக்க வேண்டாம் கிடைப்பதை ஏற்றிடுங்கள் என்கின்றார்கள் –…

கொரோனா தடுப்பூசி இரு மாத்திரைகளையும் ஏற்றிக்கொள்ளச் சொல்கிறார்கள் – ஆனால் இரு ஊசிகளையும் ஏற்றிக் கொண்டவர்களுக்கும் கொரோனா பொசிடிவ் ஆகியிருக்கின்றது என்கின்றார்கள். அதே நிறுவத்தின் ஊசிக்காக காத்திருக்க வேண்டாம் கிடைப்பதை ஏற்றிடுங்கள் என்கின்றார்கள் –…