Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
சமூகத்தின் கண் 

சமூகத்தின் கண்

  • 20

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பெண்ணே சமூகத்தின்
கண் நீ
விண்ணிலிருந்து விழும்
மழைத்துளி போல்
மண்ணுக்கே வளம் சேர்க்கும்
பொன்மகள் நீ
ஆணையும்
ஆண்மையுள்ளவனாய்
மாற்றும் ஆளுமையும் நீ

பாலகர்களை பயிற்றுவிக்கும்
பள்ளிக்கூடம் நீ
பெண்ணோடு ஆணையும்
சுமக்கும் தாய்மையும் நீ

களைப்புற்று வந்த
கண்மணி நபியையும்
களை நீக்கி
தெளியச் செய்தார்
கருணை மிகு கதீஜா சீமாட்டி

பொருளேற்றி பொருளிறக்கி
பொருளீட்டி இஸ்லாத்திற்கு
வளமூட்டினார்
ஈமானில் முந்திய முதற் பெண்

ஆணுக்கும் அறிவூட்டினார்
ஆளுமை மிக்க ஆயிஷா பிராட்டி
பெண்ணுக்கே பெருமை சேர்த்தார்
சுவனத்துத் தலைவி பாத்திமா

பாகப்பிரிவினையில்
பாதகம் செய்யவில்லை
இஸ்லாம் மஹர் மூலம்
மேன்மைப்படுத்திய
மகத்தான மார்க்கம் இஸ்லாம்

சொத்தாக பங்கு பிரித்த உன்னை
சொத்துக்கு சொந்தக்காரியாக
மாற்றிய முத்தான மார்க்கம் இஸ்லாம்

ஆணுக்கு கட்டுப்படுவது
சிறுமையல்ல
ஆணின் விலாவிலிருந்து
உதித்த நீ
ஆணுக்கு துணைநிற்பதே பெருமை

பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் மகளாய்
உடன்பிறப்புகளுக்கு உற்றசகோதரியாய்
கணவனுக்கு ஆடையாய்
உறவுகளுக்கு உத்தமியாய்
மொத்தத்தில்
சமூகத்திற்கே சேவகியாய்
சாதனைப் பெண்ணாய் மிளிர்ந்திடு

Farisa Asadh
SEUSL.

பெண்ணே சமூகத்தின் கண் நீ விண்ணிலிருந்து விழும் மழைத்துளி போல் மண்ணுக்கே வளம் சேர்க்கும் பொன்மகள் நீ ஆணையும் ஆண்மையுள்ளவனாய் மாற்றும் ஆளுமையும் நீ பாலகர்களை பயிற்றுவிக்கும் பள்ளிக்கூடம் நீ பெண்ணோடு ஆணையும் சுமக்கும்…

பெண்ணே சமூகத்தின் கண் நீ விண்ணிலிருந்து விழும் மழைத்துளி போல் மண்ணுக்கே வளம் சேர்க்கும் பொன்மகள் நீ ஆணையும் ஆண்மையுள்ளவனாய் மாற்றும் ஆளுமையும் நீ பாலகர்களை பயிற்றுவிக்கும் பள்ளிக்கூடம் நீ பெண்ணோடு ஆணையும் சுமக்கும்…