Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
சமூகத்திற்கான அர்ப்பணிப்பின் மறுவடிவம் : ஏ.எம்.ஏ. அஸீஸ் 

சமூகத்திற்கான அர்ப்பணிப்பின் மறுவடிவம் : ஏ.எம்.ஏ. அஸீஸ்

  • 138

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

வரலாற்றில் தனிமனிதன் ஒருவன் சமூகத்தின் கல்வி, கலை, கலாச்சாரம், மொழி, அரசியல், மற்றும் நிர்வாகம் என எல்லாத் துறைகளிலும் பங்காற்றியிருப்பது மிகச் சொற்பமே. இவ்வாறு விரல் விட்டு எண்ணக்கூடிய அவர்களில் முதலாமவரும், முக்கியமானவருமாக ஏ.எம்.ஏ. அஸீஸ் திகழ்கின்றார். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முதலாவது சிவில் சேவையாளர்களாராக, கொழும்பு ஸாஹிராவின்; சிற்பியாக, பல் ஆளுமை கொண்டவராகவும் இறுதி மூச்சு வரை சமூகத்துக்காக தன்னை அர்ப்பணித்தவராவார்.

இலங்கை முஸ்லீம் சமூகத்துத்தின் விடிவெள்ளியாகத் திகழ்த்த ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் உலகை விட்டுப்பிரிந்து (1973.11.24) இன்றுடன் 47 வருடங்களாகின்றன. 1911ஆம் ஆண்டு ஒக்டோபர் 4ஆம் திகதி யாழின் புகழ்பூத்த குடும்பத்தில் அபூபக்கர், நாச்சியா தம்பதிகளின் மகனாகப் பிறந்தார்கள். ஆரம்பக்கல்வியை அல்லாபிச்சை பள்ளியிலும், தொடர்ந்து வைத்தீஸ்வரா கல்லூரியிலும் பெற்றதுடன், இந்துக் கல்லூரியிலேயே இடைநிலை கல்வியை பூர்த்தி செய்தார்கள். இலத்தீன் மொழி, விஞ்ஞானம் முதலியவற்றை பயில்வதற்கும் கேம்பிரிட்ஜ் சிரேஸ்ட பரீட்சைக்கு தோற்றுவதற்குமாகவே அவர் இந்துக் கல்லூரியை தேர்ந்தெடுத்தார். 1923இல் 6ஆம் வகுப்பில் அவர் இந்துக் கல்லூரியில் தனது கல்விப் பயிற்சியை ஆரம்பித்தார். 1929 ஆம் ஆண்டு இலங்கை பல்கலைக்கழக கல்லூரியில் வரலாற்று துறையில் சிறப்பு பட்டத்தினைப்பெற்றார். ஏ.எம்.ஏ.அஸீஸ் அவர்கள் இலங்கை முதலாவது முஸ்லிம் சிவில் சேவை அதிகாரி திகழ்ந்ததுடன், இவர் முஸ்லிம் சமூகத்திற்கான வழங்கிய சமூக, அரசியல், கல்வி உட்பட பல்துறைகளின் நடிபங்கினை ஆக்கமானது சுருக்கமாக ஆராய்கின்றது.

ஏ,எம்.ஏ அஸீஸின் சமூக அர்ப்பணிப்பின் மிகப்பெரிய ஆரம்ப அர்ப்பணிப்பாக இன்று வரைக்கும் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1933ஆம் ஆண்டு வரலாற்று துறையில் சிறப்பு மேற்படிப்பு (புனித கதனில்) தொடர்ந்த நிலையில் ஒரு தவணை கூட முடிவுறாத நிலையில் இலங்கையின் சிவில் சேவை பதவியை பொறுப்பேற்றார். இது சமூகத்துக்காக தன்னை அர்ப்பணித்த முதலாவது சந்தர்ப்பமாக இது உள்ளது. உண்மையாக சமூகத் தேவையையை இனங்கண்டு தொண்டாற்றுபவன் சிறந்த புத்திஜீவி. ஆக உலகின் செல்வாக்குமிக்க, மிகச்சிறந்த ஒரு பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைத் தொடர்வதற்கான சூழ்நிலையை கைவிட்டுவிட்டு தேசத்துக்காக இப்பதவியை பொறுப்பேற்றார்கள். மேலும் 13 வருடங்களாக இப்பதவியில் பணியாற்றினார்கள். இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்றார். சுகாதார திணைக்கள நிர்வாகச் செயலாளர், சுங்கத்திணைக்கள அதிகாரி, தகவல் திணைக்களத் தலைவர் என்பவற்றுடன் உதவி அரசாங்க அதிபர் பதவியிலும், சில வருடங்கள் சேவையாற்றினார். கண்டியிலும் கல்முனையிலும் அவர் இப்பதவியை வகித்தார்.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது இலங்கை பல்வேறுபட்ட இடர்களுக்கு முகம் கொடுத்ததுடன், இலங்கையின் பிரதான துறைமுகங்களான கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுங்களினை ஜப்பானிய படை தாக்கி அழித்தது. உள்நாட்டு உணவு மற்றும் தொடர்புடைய நெருக்கடிகள் ஏற்பட்டதுடன் நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு வெவ்வேறு வகையான திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

உணவுற்பத்திக்கான பொறுப்பு உதவி அரசாங்க அதிபர்கள் மேல் சுமத்தப்பட்டது. இத்தகைய சூழலில் சுங்கத் திணைக்களத்தின் மேலதிக மேற்பார்வையாளராக இருந்த ஏ.எம்.ஏ. அஸீஸ் உடனடியாக இலங்கையின் தென் கிழக்கு பகுதிக்கு பணியாற்ற இடமாற்றம் செய்யப்பட்டார். மிகவும் சொகுசான வாழ்க்கை, பதவிநிலையிலிருந்தும், நகர கொழும்பு சூழலிலிருந்தும் விவசாய, கிராமிய, கஸ்ட பிரதேசத்தை நோக்கிய பணியாற்ற சம்மதித்திமை அதற்காக தன்னை அர்ப்பணித்தமை இரண்டாவது அர்ப்பணிப்பாகும். உணவு நெருக்கடியைச் எதிர்கொள்ள விவசாய காணிகளை துப்பரவு செய்தல் புனர்நிர்மாணம் செய்தல் மற்றும் கால்வாய்கள் புனரமைப்பு, ஆடு மற்றும் கோழி பண்ணை வளர்ப்புக்களுக்கான செயற்திட்டங்களை முன்னெடுத்தல் போன்றவற்றை ஆரம்பித்தார்.

ஒரு வருட காலத்துக்குள் 12 ஆயிரம் ஏக்கர் காணிகளை பகிர்ந்தளித்துடன், 3000 ஏக்கருக்கு மேற்பட்ட தரிசு நிலங்களைப் பயன்பாட்டுக்கு ஏற்பாடுகளைச் செய்தார்கள். மேலும் 475 ஏக்கர் விவசாயப் பண்ணையும் ஆரம்பித்தார்கள. ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் தனது பொறுப்பின் கீழிருந்த தென்கிழக்குப் பகுதியை விவசாயம் மற்றும் கால்நடை ஊடான தேசத்தின் உணவு தேவை நிறைவின் பொருட்டு தன்னை அர்ப்பணித்தார்கள். இன்று இலங்கையின் நெற்களஞ்சியமாக, தென்கிழக்கு பிரதேசங்கனை மாற்றியமைந்தார்கள். தனக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பினை கர்சிதமாக முன்னெடுத்தார்கள்.

கல்முனையின் அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய காலத்திலேயே கால்நடை மற்றும் விவசாய அறுவடை விழாவினையும், விவசாய கண்காட்சினையும் சிறப்பாப நடாத்தியதுடன், 1942ஆம் ஆண்டிலேயே கல்முனை முஸ்லிம் சங்கத்தை ஆரம்பித்து வறிய மாணவர்களின் கல்விக்காக உறமூட்டினார்கள். மேலும் கல்முனையில் பணியாற்றிய காலத்திலேயே தமிழ், முஸ்லிம் இனங்களிடையே நல்லுறவைப் பேணிவராகவும், இருகுழுக்களிடையே சகோதரத்துவத்தை வலுவூட்டுவதற்காக தன்னை அர்ப்பணித்தார்.

மட்டகளப்புக்கு அடிக்கடி சென்று சுவாமி விபுலானந்த அடிகளார் அவர்களுடன் கல்வி சிந்தனைகள், சமுதாய மேம்பாடு மற்றும் தொடர்புடைய விடயங்களைப் உரையாடுபவராக இருந்துள்ளார.; நிர்வாகப் பணியாற்றுகைக்கு அப்பால் பயன்மிக்க மனித தொடர்பு, கல்வி மற்றும் ஏனைய சமூகச் செயற்பாடுகளை முன்னெடுத்துமையானது இவரின் சமூக அர்ப்பணிப்பாகும்.

மேலும் ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களின் முக்கிய சமூக அர்ப்பணிப்பாக சமூகத்தின் தேவை கருதி தனது மேல்நிலை அந்தஸ்த்துமிக்க பதவியைத்துறந்தமையாகும். அந்த அடிப்படையிலேயே இலங்கையின் மிக உயர்ந்த பதவி நிலையான சிவில் சேவையில் இருந்து சமூகத்தின் கல்விக்காக வேண்டி தன்னை அர்ப்பணிக்கும் பொருட்களும் மருதானை ஸாஹிராவின் அதிபராக பொறுப்பேற்றார்.

இன்றும்கூட இலங்கையின் மிக உயர்ந்த பதவி நிலையான இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றும் ஒருவர் பதவி நிலையைத் துறந்து அதிபராக பொறுப்போற்க முயற்சிப்பது என்பது எட்டாக் கனி முயற்சியே ஆனால் சமூகத்தின் தேவை கருதி தனது பதவிநிலையை மாற்றியமையாது ஏ.எம்.ஏ. அஸீஸின் சமூக அக்கறையினையும் இவ்விடயத்தில் அவருக்கே அவர்தான் நிகர்.

ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் மருதானை சாஹிரா கல்லூரியின் அதிபராக பொறுப்பேற்றதுடன், (1948-1961) கல்லூரியின் கல்வி வளர்ச்சியில் தன்னை அர்ப்பணித்தார்கள். இவரது காலம் பொற்காலப்பகுதியாகவும் இருந்தது. திறன் கல்லூரியின் ரீதியாகவும் திகழ்ந்தார்கள் இவரது காலம் பொற்காலமாக இருந்தது. கல்வியினூடாக சிறந்த சமூக மாற்றத்தினை ஏற்படுத்தும் பொருட்டு வாசிப்புக்கானவும், வாசிப்புக் கலாசாரத்தை உருவாக்க நூலகம், சிறந்த மற்றும் இளம் ஆசிரியர் வளங்களை உள்வாங்கிமை, திறன் மற்றும் மனித தொடர்புகளை விருத்திசெய்தமை, தொழில் பயிற்சிக்கான வாய்ப்பினை ஏற்படுத்தியமை, சிறந்த பாடத்திட்டத்தினை உருவாக்கியமை, மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துதல் போன்றன உட்பட பல்வேறுபட்ட திட்டங்களின் மற்றும் பணிகளை மேற்கொண்டார்கள். இவரது காலத்திலேயே கற்ற மாணவர்கள் இன்று விருட்சமாகி தேசத்திலேயே பல்துறைசார் பங்களிப்பு வழங்குகின்றமை நோக்கத்தக்கது.

ஆகமொத்திலேயே ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் ஸாஹிராவிலிந்து நாட்டுக்குத் தேவையான மிகச் சிறந்த மனித வளங்களை உற்பத்தி செய்தார்கள். தனது இறுதிக் காலத்தில் கூட ஜாமிஆ நளீமிய்யாவின் உருவாக்கத்தில் தன்னுடைய பங்களிப்பினை வழங்கியதுடன் திட்ட ஆலோசகராக தனது பங்களிப்பினை நல்கினார்கள்.

ஏ.எம்.ஏ. அஸீஸின் சமூக அர்ப்பணிப்பின் மிக முக்கியமானதான ஒன்றாகக் கல்வி சார்ந்த தடைகள் மீதான கவனம், அதன் பொருட்டு இலங்கை முஸ்லிம் கல்வி சகாயநிதியத்தை; உருவாக்கினார்கள் இதனை 1946ஆம் ஆண்டு பாரளுமன்ற சட்ட தர்மதாபன அங்கீகாரத்துடன், உருவாக்கினார்கள். தகுதி மற்றும் ஆற்றலினைக் கொண்டவர்கள் நிதி பற்றாக்குறையால் கல்வியை விட்டு விடக் கூடாது என்ற ஒரே நோக்கிலேயே இதனை உருவாக்கினார்கள். மட்டுமன்றி 1952- 1962ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கை சமூகத்திற்கான மற்றுமொரு முக்கிய பங்களிப்பாக மொழி உரிமை சார்ந்து குரல்கொடுத்ததாகும்.

இக்காலப்பகுதியில் இலங்கைப் பராளுமன்றத்தில் செனட்டராக பணியாற்றினார். 1956இல் தனிச்சிங்களமொழி சட்டத்தின் போது கடுமையான தனது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தினார். தமிழ் மொழிக்கு குறிப்பிட்ட இடத்தை வழங்க வேண்டும் என வற்புறுத்தியதுடன், மட்டுமன்றி தனிச்சிங்கள மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேளை தான் அங்கத்துவம் வகித்த செனட் சபையில் அம்மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் அச்சட்ட மூலத்தை அவர் கடுமையாக கண்டித்தார்.

மேலும் முஸ்லிம்கள் நான்கு மொழிகளிலும் அறிவினைப் பெற வேண்டும் என்பதிலும், அரபு மொழியிலேயே சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக அரபுத் தமிழ் சார்ந்த பாவனையை ஊக்கப்படுத்தியடன் அது தொடர்பான நூல்களையும் எழுதினார். இது இவரது மொழி சார்ந்த பங்களிப்பாக உள்ளது.

ஏ.எம்.ஏ. அஸீஸின் சமூக அர்ப்பணிப்பின் பெண்ணிய கல்விக்கான தடைகளை நீக்கி வாயிலைத் திறந்துவிட்டதுடன், 1920இல் இருந்து முஸ்லிம் பெண்கல்வியானது பருவ வயது வரை மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது. கல்வியினை இல்லாமல் ஆக்கும் பொருட்டு பல்வேறுபட்ட செயற்திட்டங்களை முன்னெடுத்தார்.

இதற்காகப் பெண் கல்வியை ஊக்கப்படுத்தியதுடன், பெண் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பயிற்சி சகாய நிதி ஒதுக்கீடு, தனது குடும்பத்தின் பெண்களை கற்பதற்காக தூண்டியமை போன்ற பல்வேறு விடயங்களைக் குறிப்பிடலாம்.

இன்னுமொரு அவர் அர்ப்பணித்த முக்கிய ஒன்றாக கலை, இலக்கிய சார்ந்த பங்களிப்புகள் உள்ளன. மேலும் கல்வி சார்ந்த மாநாடுகளை தன்னுடைய காலப்பகுதியில் ஏற்படுத்தி முன்னின்று நடத்தினார்.

ஸாஹிராவினை கலை, நடனம், வானொலி நிகழ்ச்சி போன்ற கலை நிகழ்ச்சிப் போட்டிகளில் இவரது காலத்தில் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை முஸ்லிம் கலை, பண்பாட்டு, நாடகம் சார்ந்த ஈடுபாட்டிக்கான பல்வேறுபட்ட செயற்பாடுகளை பாடசாலை மட்டத்தில் இருந்து முன்னெடுத்தார்கள்.

இலங்கையில் இஸ்லாம், மொழிபெயர்ப்பு கலை, மிஸ்றின் வாரியம், கிழக்காப்பிரிக்காவில் காட்சிகள், தமிழ் யாத்திரை, ஆபிரிக்க அனுபவங்கள், அரபுத்தமிழ் எங்கள் அன்புத் தமிழ் போன்றனவாகும். இவரது நூல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கு நிலைகளில் எழுதப்பட்டுள்ளவையாகும். இவை இவரது பல்துறை அறிவியல் புலமையை வெளிக்கொணர்வதாக உள்ளன.

சமூகத்திற்காக தன்னையர்ப்பணித்த ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களின் இப்பணிக்கான பரிசாக சுவனத்தை வழங்குவானாக. இது போன்று எம்மையும் சமூக அர்ப்பணிப்பு உள்ளவர்களாக மாற்றியருள்வானாக.

பௌவுஸ்தீன் பமீஸ்

வரலாற்றில் தனிமனிதன் ஒருவன் சமூகத்தின் கல்வி, கலை, கலாச்சாரம், மொழி, அரசியல், மற்றும் நிர்வாகம் என எல்லாத் துறைகளிலும் பங்காற்றியிருப்பது மிகச் சொற்பமே. இவ்வாறு விரல் விட்டு எண்ணக்கூடிய அவர்களில் முதலாமவரும், முக்கியமானவருமாக ஏ.எம்.ஏ.…

வரலாற்றில் தனிமனிதன் ஒருவன் சமூகத்தின் கல்வி, கலை, கலாச்சாரம், மொழி, அரசியல், மற்றும் நிர்வாகம் என எல்லாத் துறைகளிலும் பங்காற்றியிருப்பது மிகச் சொற்பமே. இவ்வாறு விரல் விட்டு எண்ணக்கூடிய அவர்களில் முதலாமவரும், முக்கியமானவருமாக ஏ.எம்.ஏ.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *