சமூக ஊடகப்பாவனையும் பள்ளி மாணவர்களும்

  • 21

துரிதமாக வளர்ந்து வரும் உலகில் நாம் 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காலத்தின் கோலத்தில் சமூக ஊடகங்கள் உயிர் மூச்சாக அனைவர் மத்தியிலும்! அவ்வகையில் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் தாக்கம் செலுத்தும் முக்கிய காரணியாக இதனை குறிப்பிடலாம்.

சமூக ஊடகங்கள் என்றால்

சமூக ஊடகங்கள் என்பது எங்கள் கருத்துக்களை படைக்கவும் பகிரவும் இணைக்கப்பட்ட ஓடு தளம் அல்லது மேடை எனலாம். இவை மனித ஆக்கத்திறனுக்கு ஒரு சாதனமாக இருந்த போதிலும் இன்றளவில் மாணவர்களிடத்தே பாதகங்களை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் மத்தியில் கவலை, மன அழுத்தம், தனிமையுணர்வு ஏற்படுத்தவல்ல கருவியாக தொழிற்படுகின்றது.

சமூக ஊடகங்களாக
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Skype
  • Instagram
  • Viber

என பட்டியலிடலாமம்.

மாணவர்கள் மத்தியில் ஊடகங்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகள்.
  • நீண்ட நேரப் பாவணை காரணமாக கண் வலி ஏற்படல்.
  • இவற்றை பயன்படுத்த தொலைபேசியை தொடர்ந்து touch செய்வதினால் கை விறைப்படைதல்.
  • இரவு நேரப் பாவனை தூக்க கோளாறுகளை ஏற்படுத்துதல்.
  • கல்வி நடவடிக்கைகளில் அதாவது, பாட விதானங்களில் மனதை ஒரு முகப்படுத்த முடியாமை.
  • கற்கும் நேரம் விரயமாதல்.
  • அடிமையாதல். (Addiction)
  • தவறான நடத்தைக்கு இட்டுச் செல்கிறது.
  • மன நலப்பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. (2017 ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை) மேலும் ஓர் அறிக்கையின் படி, 11வயதினருள் 46% 12வயதினருள் 31% 10 வயதினருள் 28% சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருக்கின்றனர்.
பாவனையை குறைப்பதினால்
  • உடலும் /மனமும் அமைதி பெறும்.
  • சிறந்த நித்திரைக்கு வழி வகுக்கும்.
  • கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • உடற் பாதிப்புக்களை தவிர்க்கலாம்.
  • நேரத்தை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளலாம்.
  • நடத்தைகளை நல்ல முறையில் மாற்றி அமைக்கலாம்.
Afra Minsar (BA)

துரிதமாக வளர்ந்து வரும் உலகில் நாம் 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காலத்தின் கோலத்தில் சமூக ஊடகங்கள் உயிர் மூச்சாக அனைவர் மத்தியிலும்! அவ்வகையில் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் தாக்கம் செலுத்தும் முக்கிய…

துரிதமாக வளர்ந்து வரும் உலகில் நாம் 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காலத்தின் கோலத்தில் சமூக ஊடகங்கள் உயிர் மூச்சாக அனைவர் மத்தியிலும்! அவ்வகையில் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் தாக்கம் செலுத்தும் முக்கிய…

One thought on “சமூக ஊடகப்பாவனையும் பள்ளி மாணவர்களும்

  1. Howdy! Do you know if they make any plugins to assist with SEO? I’m trying to get my blog to rank for some targeted keywords but I’m not seeing very good success. If you know of any please share. Many thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *