சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் மாணவர்களின் பங்களிப்பு

  • 35

கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் இலங்கையில் ஆண்டுதோறும் இரகசியமான முறையில் திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனவாதத் தாக்குதல்களினால் கல்வித்துறை,பொருளாதாரத்துறை, சுற்றுலாத்துறை ஆகியவற்றில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது. குறிப்பாக பாடசாலை கல்வித்துறையில் முன்வைக்கப்பட்ட ஓர் விடயம் நாட்டின் இனவாத தாக்குதல்களுக்கு அடிப்படையாக மதரீதியாக பிரிக்கப்பட்டுள்ள பாடசாலையும், மதம் சார்ந்த பாடத்திட்டமும் காரணமென குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டமையாகும்.

ஆனால் இது தவறான வாதமாகும். அவ்வகையில் தற்போதுள்ள மதம் சார்ந்த பாடசாலைகள் இலங்கையில் உருவாகக் காரணத்தையும் தற்போது பாடசாலைகளை சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்பதே இன்றைய பகுதியில் அலசவுள்ளோம்.

இன்று “உலகமயமாதல்” என்ற திட்டத்தின் கீழ் “ஒரே சட்டம், ஒரே தேசம் என்றதொரு கோட்பாடொன்றை உலகை ஆளத்துடிக்கும் மேற்கத்திய நாடுகள் உருவாக்கியுள்ளது. அத்திட்டத்தின் கீழ் வாழ்க்கைக்கு தேவையான விழுமியப் பண்புகளை போதிக்கும் மதங்களுக்கு உள்ளேயும் மதங்களுக்கிடையேயும் உள்ள முரண்பாடுகளை உருவாக்கி அதை யுத்தங்களாக பூதாகரப்படுத்தி மனித வாழ்வுக்கு மதங்கள் பொருத்தமில்லையென்ற கருத்தை உருவாக்கி மனிதர்களை புனிதர்களாக மாற்றும்  மதச் சிந்தனைகளை மக்களுக்கு மத்தியில் வழு விலக்க செய்யும் திட்டம் உலகளவில் அரங்கேறிய வண்ணமுள்ளது.

ஓர் சமூகமொன்றை வழி கெடுக்கவும், வழிப்படுத்தவும் வேண்டுமாயின் அச் சமூக மாணவர்களுக்குத்தான் சிந்தனைகளை போதிக்க வேண்டும். அவ் வகையில்  உலகில் மதக்காலசார விழுமியங்களை பின்பற்றும் தென்கிழக்காசியா நாடான இலங்கையிலும் மதப்பாரம்பரிய விழுமியங்களை வழு                  விலக்க செய்யும் திட்டமாக இதன் பின்னர் மதரீதியிலான பாடசாலைகள் ஆரம்பிக்கப்படமாட்டது என முன்மொழியப்பட்டுள்ளது. ஆனால் இப்பகுதி. அதுபற்றி விமர்சிப்பதல்ல.

இலங்கையில் மதரீதியான படசாலைகள் உருவாகக் காரணம்.

இலங்கையில் 1850 ஆண்டுக் காலப்பகுதியில்தான் பாடசாலைகள் அன்று வாழ்ந்த தேசிய தலைவர்களால் தத்தமது பிரதேசங்களில் ஆரம்பித்தனர். அன்று இவ்வாறு ஒவ்வொரு மதம் சார்ந்த தலைவர்களும் தமது மதம் சார்ந்த பாடசாலைகளை உருவாக்க காரணம். இலங்கையில் காணப்படுகின்ற பௌதம், இந்து, இஸ்லாம் ஆகிய சுதேச இனங்கள் பின்பற்றும் மதங்களுக்கிடையில் பிரிவினையை உருவாக்குவதற்கல்ல. மாறாக குறிப்பிட்ட காலப்பகுதியில் இலங்கையானது பிரித்தானியரின் ஆதிக்கத்தின் கீழ் காணப்பட்டது. அவர்கள் இரண்டு பிரதான நோக்கங்களுக்காக இலங்கையை கைப்பற்றினர். தெற்காசியாவிலுள்ள இயற்கை வளங்களை சுரண்டி சர்வதேச நாடுகளுக்கான  தமது ஏற்றுமதி வர்தகத்தை மேற்கொள்ளல், தமது மதமான கிறிஸ்தவ மதத்தை தெற்காசியாவில் பரப்புதல்.

ஆங்கிலேயர் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக மேற்கொண்ட திட்டம்தான் இலங்கையின் அன்றைய இளைஞர்கள் மற்றும் மாணவப் பருவ சிறுவர்களுக்கு கல்வியை போதித்தல் என்றபெயரில் மிஷனரிப் பாடசாலைகளை ஆரம்பித்து கிறிஸ்தவ மதத்தை போதித்தமையாகும். இக் கல்வித்திட்டத்தைபெற்ற அன்றைய உயர் பிரபுக் குடும்ப மாணவர்களும், இளைஞர்களும் குறிப்பாக பெளத குடும்த்தைச் சேர்ந்தோர் தமது மதம், கலாசாரம் என்பவற்றை புறந்தள்ளி கிறிஸ்தவ மதத்தைநோக்கிச் சென்ற வண்ணமிருந்தனர். இத்தருணத்தில் இலங்கையில் பௌதம், இந்து, இஸ்லாம் ஆகிய மதங்களை சார்ந்த மிகொட்டுவானந்தே குணானந்த தேரர்,  ஆறுமுக நாவலர், மு. கா. சித்திலெப்பை போன்ற தேசிய தலைவர்களால் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு அதனூடாக ஆன்மீகக் கல்வி, லௌகீகக் கல்வி என்பன போதிக்கப்பட்டு  சுதேச மதங்கள் பாதுகாக்கப்பட்டது.

ஆனாலும் காலவோட்டத்தில் பல வர்ண பூக்களுள்ள பூங்காவைப் போன்று நமக்குள் இருந்த வேறுபாடுகளை ரசித்துக்கொண்டிருந்த இலங்கையர்களுக்கு இந்த வேறுபாடுகளை எலிக்கும் பூனைக்குமுள்ள பகைபோல காட்டி சுதந்திரத்தையும் வழங்கிவிட்டு பிரித்தானியர் சென்றுவிட்டனர்.

சமூக நல்லிணக்கத்திற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்.

தற்போது கீரியும் பாம்பும் போன்று பகை பூதாகரமாக மாறிக்கொண்டிருக்கும் இனவாத பிரச்சினைக்கு தீர்வை பாடசாலைகளில் இருந்து ஆரம்பிப்பதன் மூலம்தான் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். இங்கு நாம் எதிர்பார்க்கும் தீர்வு இலங்கையில் உள்ள ஒவ்வொருவரும் தமது மதங்களை பிற மத மக்களின் மிரட்டல்களுக்கு பயந்து விட்டுவிடுவதல்ல. மாறாக சுதந்திரமாக தமது மத நம்பிக்கை, கலாசாரங்களை பின்பற்றுவாதாகும். இதற்காக மாணவர்களுக்கு வேறுபாடுகளை மதித்தல், விட்டுக்கொடுத்தல், பிற மதக்கலாசாரங்களை புரிந்துகொள்ளல், மதவேறுபாடுகளை மறந்து உதவிசெய்தல் போன்ற பண்புகளை மாணவர்களிடம் வளர்க்க வேண்டும்.

பாடசலைகளில் பாடத்திட்டம் மூலமும், பரீட்சையை மாத்திரம் இலக்காகக்கொண்ட , போட்டி மனப்பாங்கிற்கு பதிலாக பொறாமையை தூண்டும் கல்வித்திட்டத்தினால் சமயங்களுக்கிடையில் மட்டுமல்ல வகுப்பு நண்பர்களுக்கிடையிலும் சகவாழ்வை உண்டாக்குவது கடினமாக உள்ளது. எனவே தான் ஏற்கனவே குறிப்பிட்ட பண்புகளை வெறும் பாடத்திட்டங்களினூடாக மாணவர்களுக்கு புகட்டுவதை விட செயற்திட்டங்களாக உருவாக்கி நடைமுறைப்படுத்தினால்தான் சிறந்த மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்தலாம்.

அவ்வகையில் பாடசாலைகளுக்கு மத்தியில் விளையாட்டுப் போட்டி, கலைவிழாக்களை ஏற்பாடுசெய்தல், பிற மதஸ்தலங்களை தரிசிக்க ஏற்பாடுசெய்தல், கட்டுரை போட்டி, சிறுகதைப்போட்டி, கவிதை, நாடகம் சார்ந்தபோட்டிகளை வைத்தல்,  அருகிலுள்ள பாடசாலைக்கு களப்பயணம் செய்தல், அருகிலுள்ள பாடசாலையில் தனக்கோர் நண்பனைதெரிவு செய்தல் போன்ற செயற்திட்டங்களை மேற்கொள்ளலாம்.

அருகிலுள்ள பாடசாலையில் தனக்கோர் நண்பனை தெரிவு செய்தல் என்ற நிகழ்ச்சியானது அருகருகே உள்ள இரண்டு அல்லது மூன்று பாடசாலைகள் சேர்ந்து திட்டமிட வேண்டிய 3 நாள் பயிற்சி நெறியாகும். இப் பயிற்ச்சிநெறியின் ஆரம்பத்தில் குழுக்கல் முறையில் வெ​வ்வேறு பாடசாலையைசேர்ந்த இருவர்களை நண்பர்களாக்க வேண்டும். பின்னர்  அவர்கள் இருவரின் பங்களிப்புடன் பாடல், கதை எழுதுதல் போன்ற நிகழ்ச்சிகளை எற்பாடு செய்ய அடுத்த கட்டமாக அதனை ஐந்து அல்லது ஆறு உறுப்பினர்களை குழுக்களாக ஒன்றிணையச் செய்து அவர்களுக்கிடையில் நாடகம் போன்ற குழு நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டும். (இப்பகுதி மேலும் விரிவாக கலந்தலோசிக்க வேண்டும்.)

முஸ்லிம் சமூகத்தில் பாடசாலை சமூகம் கருதி மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள்.

குறிப்பாக பிறமத மாணவ சமூகத்தில் முஸ்லிம் சமூகம் பற்றிய சந்தேகம் ஏற்பட பள்ளிவாசல்களும் காரணமாகவுள்ளது அதாவது பள்ளிவாசல்களில் தொழுகை, குர்ஆன் திலாவத் போன்ற நிகழ்வுகள் இடம் பெறுகின்றது. இவை முஸ்லிம் சமூக ஆண்களின் பங்களிப்புடன் இடம்பெறுகின்றது.  பிற மதத்தவர்களுக்கு இவற்றை பார்வையிடும் வாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால்  முஸ்லிம்கள் பற்றிய தப்பபிப்ராயம்  ஏற்படுகின்றது. இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிற மதத்தவர்களிடம் முஸ்லிம்கள் பள்ளிவாசலில் ஆயுத பயிற்சி வழங்குவதாகவும்  பொய்யை பரப்புகின்றனர்.

மறுபுறம் நமது பாடசாலை சுற்றுலாவில் வரலாற்று சிறப்புமிக்க புரதான நகரங்களையும், சின்னங்களையும் பார்வையிடவென விகாரைகளுக்கும்  கோவில்களுக்கும் செல்கின்றோம். ஆனால் அதனூடாக வரலாற்று சின்னங்களையும் அவர்களின் வணக்க முறைகளையும் நேரடியாக அவதானித்தோம்.  ஆனால்  இவ்வாறு பள்ளி  வாசல்களுக்கு பிற மத மாணவர்கள் சுற்றுலாவில்   செல்வதி​ல்லை.  இதனால் இத்தப்பபிப்ராயத்​தை  கலைவது சிரமமாகவுள்ளது. எனவே இவ்வாறு பிற மத மாணவர்களுக்கும் பள்ளிவாசல்களை தரிசிப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் ஒரளவு களையலாம்.

இதனை சட்ட ரீதியாக மேற்கொள்ள கல்விச் சுற்றுலாக்களில் அனைத்து மதத்தளங்களையும் பார்வையிடலுக்கான ஒர் சட்ட    ஏற்பாட்டை செய்வதற்கு  அரச மட்டத்தில் முயற்சிக்க வேண்டும்.

Ibnuasad

கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் இலங்கையில் ஆண்டுதோறும் இரகசியமான முறையில் திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனவாதத் தாக்குதல்களினால் கல்வித்துறை,பொருளாதாரத்துறை, சுற்றுலாத்துறை ஆகியவற்றில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது. குறிப்பாக பாடசாலை கல்வித்துறையில் முன்வைக்கப்பட்ட ஓர் விடயம் நாட்டின்…

கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் இலங்கையில் ஆண்டுதோறும் இரகசியமான முறையில் திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனவாதத் தாக்குதல்களினால் கல்வித்துறை,பொருளாதாரத்துறை, சுற்றுலாத்துறை ஆகியவற்றில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது. குறிப்பாக பாடசாலை கல்வித்துறையில் முன்வைக்கப்பட்ட ஓர் விடயம் நாட்டின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *