Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலும் இலங்கை மக்களும் 

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலும் இலங்கை மக்களும்

  • 22

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஆய்வு சுருக்கம்: இலங்கையில் இடம் பெற்ற குண்டுத்தாக்குதலிற்கு பின்னால் உள்ள அரசியல், பொருளாதார, சமூக காரணிகளை ஆராய்ந்தலும் இலங்கையின் அரசியல், பொருளாதார, சமுக மட்டத்தில் நிலையான அபிவிருத்தியை இலக்காக கொண்டு மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் பற்றிய கருத்துக்களை முன்வைத்தலும்

Contents

  1. இஸ்லாம் முன்வைக்கும் போர் கோட்பாடும் நவீன முதாலாளித்துவ சிந்தனையும்
  2. ஸஹ்ரானின் தீவிரவாத சிந்தனையின் பின்னனி
  3. ஈஸ்டர் தாக்குதலும் அதன் பின்னரான அரசின் நடவடிக்கைகளும்
  4. இலங்கையை மையப்படுத்திய சர்வதேச அரசியல் நகர்வுகள்
  5. BBS கூட்டமும் தெளிவு பெற்ற மக்களும்
  6. பிற்குறிப்பு

இலங்கை வரலாற்றில் மறக்க முடியாத பல சேவைகளை செய்துள்ள முஸ்லிம்களின் வரலாற்றில் மறக்க கூடாத ஓர் ஆண்டே 2019 ஆகும். சர்வதேச வியாபா​ர அரங்கில் இலங்கையை அறிமுகம் செய்தவர்கள் அரேபியா முஸ்லிம்களாகும். அவ்வாறே சர்வதேச பயங்கரவாதமொன்றை இலங்கையில் அறிமுகம் செய்து ஓர் அவப்பெயரை இன்று அவர்கள் பெற்றுள்ளனர். என்றாலும் இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் வெறும் ஓர் இஸ்லாமிய ஜிஹாதிய சிந்தனைக்கு மேலாக அரசியல், பொருளாதார காரணிகளே செல்வாக்கு செலுத்தியுள்ளது என்பதை அந்நிகழ்வை தீரா ஆய்வு செய்வதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

இஸ்லாம் முன்வைக்கும் போர் கோட்பாடும் நவீன முதாலாளித்துவ சிந்தனையும்.

இஸ்லாமியம், முதாலாளித்துவம் என்பன உலகிலுள்ள இரு துருவ சிந்தனைகளாகும். இஸ்லாமியம் அல்லது இஸ்லாமிய சிந்தனைகள் ஈருலக அபிவிருத்தி அல்லது இம்மையில் நிம்மதியான வாழ்வும் மறுமையில் சுவனத்தை இலக்காக கொண்டு செயற்படுகின்றது. ஆனால் முதாலாளித்துவம் இம்மையில் அபிவிருத்தி அல்லது இவ்வுலகில் மாத்திரம் நிம்மதியான வாழ்வை இலக்காகக் கொண்டு செயற்படுகின்றது. இதில் இஸ்லாமியத்தில் ஓர் பகுதியாக ஜிஹாதும், முதலாளித்துவத்தில் பிரதான பகுதியாக அமெரிக்கா பொருளாதாரமும் காணப்படுகின்றது.

ஜிஹாத் என்பது விரிவான பொருள் கொண்ட வார்த்தையாகும். இதனை விளக்குவது எமது நோக்கமல்ல என்றாலும் கட்டுரையின் தேவை கருதி சுருக்கமாக பதிவிடுகிறேன். மனதில் எழும் சைத்தான் தனமான உணர்வுகளை எதிர்த்துப் போரிட்டு நமது மனத்தை அடக்குதல். அநீதியாளர்களை எதிர்த்துப் போரிடுதல். இஸ்லாத்திற்கு எதிரான சடங்கு சம்பிரதாயங்களைக் கிள்ளியெறியப் பாடுபடுதல். இதேபோல் எல்லா வகையான தீமைகளையும் எதிர்த்து மேற்கொள்ளும் சீர்திருத்த நடவடிக்கைகள் யாவும்தான் ஜிஹாத் எனப்படும்.

ஜிஹாத் என்றபெயரில் உலகில் போரொன்றை ஆரம்பிப்பதாக இருந்தால் அதற்கு கட்டாயம் இஸ்லாமியாட்சி இருக்க வேண்டும். இயற்கை மற்றும் சிறுவர்கள், பெண்கள் எத்தரப்பில் இருந்தாலும்  அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறுஅவதானிக்கையில் இன்று மத்திய கிழக்கு  நாடுகளில் நடைபெறும் யுத்தங்களை ஜிஹாத்தாக அடையாளப்படுத்த முடியாது.

ஆனால் இன்று ஜிஹாத் என்றாலே மற்ற மதத்தவர்களைக் கொல்லுதல்; தாக்கி அழித்தல்; அவர்கள் மீது போர் தொடுத்தல் என்கிற ரீதியில் ஒரு தவறான கருத்தோட்டம் நிலை பெற்றிருக்கிறது. இது தவறான பார்வையாகும்.. இக்கருத்தானது முதலாளித்துவ பொருளாதாரத்தின் ஆயுத விளம்பரத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள விளம்பரமாகும்.

உலகரங்கில் அமெரிக்காவின் பொருளாதார அபிவிருத்தியில் பிரதான பங்களிப்புசெய்வது ஆயுத விற்பனையாகும். அமெரிக்கா ஆண்டொன்றுக்கு சராசரியாக 9892.87 மில்லியன்   அமெரிக்கா டொலர் பெறுமதியான ஆயுதங்களை விற்னை செய்கின்றது. இவர்களின் பிரதான சந்தையாக உள்ளது மத்திய கிழக்காசியா யுத்​ததேசங்களாகும்.

அதாவது முஸ்லிம்களிடமுள்ள ஜிஹாத் பற்றிய தவறான எண்ணக்கருக்களுக்கேற்ப அவர்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து தமக்கான பொருளாதார அபிவிருத்தியை அமெரிக்கர் அடைகின்றனர்.

இவ்வாறுதான் கடந்த 40 வருடங்களில் 30  வருடங்கள் இலங்கையில் இடம்பெற்ற ஈழப்போரிற்கு ஆயுத விற்பனை செய்த  அமெரிக்காவின் ஆயுத விற்பனையில் இலங்கைக்கான பங்களிப்பு யுத்தமின்மை காரணமாக குறைந்நது. என்றாலும் இக்காலப்பகுதியில் இலங்கை முஸ்லிம்களை சீண்டி யுத்தமொன்றை உருவாக்க முனைந்தாலும் இவை  அலுத்கம, கிந்தோட்டை, திகன, நீர்கொழும்பு என ஆரம்ப ஆர்ப்பாட்டத்துடன் முடிந்தது. அவை தொடர் யுத்தமாக மாறவி​ல்லை என்றாலும் இந்த சதிவலையில் ஒரு சிலர் சிக்கினர். ஆனால்  அமெரிக்காவின் இலக்கு இலங்கையை யுத்த பூமியாக மாற்றி ஆயுத விற்பனை செய்வதற்கு பதிலாக இலங்கையிலும் பயங்கரவாத தாக்குதல்கன் இடம்பெறலாம். அதனை முறியடிக்க நாம் களத்தில் இருக்கவேண்டும் என்ற போர்வையில் வந்து சீனாவை உளவு பார்ப்பதாகும்.

ஸஹ்ரானின் தீவிரவாத சிந்தனையின் பின்னனி.

தலைப்பை அவதானித்ததும் ஸஹ்ரானின் ஆதராவாளரென தவறாக எண்ண வேண்டாம். நானும் அவரின் தற்கொலை தாக்குதலை வன்மையாக கண்டிப்பவன். என்றாலும் அவரின் வாழ்க்கையிலிருந்தும் சில படிப்பினைகளை பெறவேண்டியுள்ளோம்.

இவரின் வாழ்க்கையை  ஆவதானித்தால் 2017கு பின்னர்தான் இவர் ஜிஹாத் பற்றிய கருத்துக்களை முன்வைக்கின்றார். ஆனால் இவர் ஈழப்போரின் இறுதிக் காலப்பகுதியில் கிழக்கு மாகாண இந்து பாடசாலை கலாசார நிகழ்வுகளிலும் கலந்து சகவாழ்வு பற்றிபேசியுள்ளார். இவரிடமுள்ள சிறந்தாளுமைபேச்சாளுமையாகும்.மேலும் இவர் 2012 ஆண்டு தொடக்கம் தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அமைப்பை உருவாக்கி பல சேவைகளை செய்துள்ளார்.  என்றாலும் ஓரிடத்தில் தடம்புரண்டு விட்டார்.

அதுதான் இவர் காத்தான்குடியில் சமூக சேவை செய்யும் போது பிரதான எதிரியாக செயற்பட்டவர்கள் முஸ்லிம் சமுகத்திலுள்ள அப்துல் ரவுப் குழுவாகும். இக்குழுக்களுக்கிடையில் பிரசார நடவடிக்கை, சமூகசேவை நடவடிக்கைகளின் போது ஏற்பட்ட தகறாறு, நீதிமன்ற நடவடிக்கை என்பவை மற்றும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக அரசின் மௌன ஆதரவுடன் மேற்கொண்ட தாக்குதல்களும்தான் அவரையும் அவர் சார்ந்த குழுவையும் தீவிரவாதத்தின்பால் தூண்டியது. குறிப்பாக திகன கலவரத்தின் பின்னர் இவரின் தீவிரவாதசெயல்கள் அரங்கேறத்துவங்கியுள்ளது.

அதாவது இவரிடம் தீவிரவாத சிந்தனைகள் உருவாகுவதற்கு பிரதானமாக இரண்டு காரணிகள் செல்வாக்கு செலுத்தியுள்ளது. இஸ்லாமிய பிக்ஹ் சார்ந்த கருத்து முரண்பாடுகள்,பௌத இனவாத தாக்குதல் என்பன இவருக்கு ஜிஹாத் பற்றிய தவரான சிந்தனையை ஊட்டுவதில் செல்வாக்குசெலுத்தியுள்ளது.

ஈஸ்டர் குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் செல்வம் மற்றும் கல்வித்தறையில் சிறந்து விளங்கியவர்களாகும். மேலும் இவர்கள் இலங்கையிலுள்ள ஆன்மீக அமைப்புகளில் இணைந்து செயற்பட்ட பின்னர் விலகியவர்களாகும். இவ்வாறு ஒர் அமைப்பில் இணைந்து செயற்பட்ட பின்னர் விலகுவதற்கான காரணங்களாக நிர்வாகத்துறையில் ஏற்பட்ட முரண்பாடு அல்லது இவர்கள் முன்வைத்த கருத்துக்கள் புறக்கணிப்பு என்பன இருக்கலாம். அதாவது சில இளைஞர்களிடமுள்ள செயற்திட்டங்கள் உயர் அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுவது அவர்களை தீவிரவாத்தின் பால் தூண்டக் காரணமாகவுள்ளது.

ஸஹ்ரான் சமூகசேவைகள் செய்தாலும் அவர் இறுதிப் பகுதியில் மௌலவி அப்துல் ரவுப் குழுவுடன் ஏற்பட்ட சண்டைகள் காரணமாக அவர் மறைந்து வாழ வேண்டிய நிலையெற்பட்டது. அல்லது சமூகத்திற்கு மீண்டும் வந்தால் சிறைச்சாலையில் வாழவேண்டிய நிலையெற்படும்.

இவ்வாறு இவர்கள் வாழ்ந்த குழு, மதம், நாட்டினால் இவர்களுக்கேற்பட்ட இடர்கள், சோதனைகள் இவர்களை தீவிரவாதிகளாக மாற்றிவிட்டது இவ்வாறு ஓர் குழுவொன்று தீவிரவாதிகளாக மாறவேண்டும் என்பது இலங்கை அரசாங்கத்தாலும் எதிர்பார்க்கப்பட்டதொன்றாகும்.

ஈஸ்டர் தாக்குதலும் அதன் பின்னரான அரசின் நடவடிக்கைகளும்.

ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்ட போது அதற்கு முன்னர் இந்தியாவிலிருந்து உளவுத்துறை தகவல் அனுப்பியும் இலங்கை பாதுகாப்புத் தரப்பு உரிய நடவடிக்கை எடுத்தாலும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலான கருத்து முரண்பாடுகள் காரணமாக பாதுகாப்பு சபை கூட்டம் கூடவில்லை. இதனால்  குறித்த தாக்குதல்களை முறியடிக்க முடியவி​ல்லை என்று ஜனாதிபதி, பிரதமர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் இங்கு அரசு கவனக்குறைவாக செயற்படவில்லை மாறாக குண்டுத்தாக்குதல் வரை தூங்குவதுபோல் நடித்துக்கொண்டிருந்தது.

திகன கலவரத்தின் பின்னர்  அரசியல்வாதிகளாலும், முஸ்லிம் சமூக ஆன்மீக அமைப்புக்களாலும் இலங்கையில் ஓர் தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சுறுத்தல்கள் சூட்சமான முறையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவுடன் வந்துள்ள நல்லாட்சியிலும் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அரச  பாதுகாப்புத்தரப்பு பார்த்திருக்கும் போது சிங்கள தீவிரவாதிகள் முஸ்லிம்களை தாக்கியமை  என்பன காரணமாக முஸ்லிம்  இளைஞர்களும் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடலாம்  என எச்சரிக்கப்பட்டது.

இந்நிலையில் 2018 இறுதிப்பகுதியில் மாவனல்லை சிலையுடைப்பு சம்பவம் நிகழ்கிறது. இச்சிலையுடைப்புடன் சம்பந்தபட்டவர்களே குண்டு வெடிப்பிலும் பிரதான சூத்திரதாரிகளாக இனங்காணப்பட்டனர். அன்று அவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டாலும் அவர்களையும், அவர்​களுடன் வீதியில் தற்செயலாக சந்தித்து பேசுபவர்களையும் உளவுத்துறையால் கண்காணிக்கப்பட்டது. இவ்வாறு கண்காணிக்கப்பட்ட இவர்கள் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலன்று பொதுபோக்குவரத்து பேரூந்தொன்றில் குண்டை சுமந்த வண்ணம் பயணித்தது உளவுத்துறைக்கு தென்படாதது சிந்திக்கவேண்டிய விடயமாகும்.

அதாவது அரசு இலங்கை பாதுகாப்பு விடயத்தில் தூங்கியதாகத்தான் கூறப்படுகின்றது. ஆனால் அவர்கள் உண்மையில் தூங்கவில்லை. தூங்கியதாக நடித்தார்கள். அரசு தூங்குவதைவிட தூங்குவது போன்று நடிப்பது பயங்கரமானது. அரசு ஏன் தூங்கியது என்பதை தொடர்ந்தும் வாசிப்பதன் மூலம் உங்களால் புறிந்து கொள்ளலாம்.

இலங்கையில் உள்ள ஆன்மீக அமைப்புக்களான அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, சிலோன் தௌஹீத் ஜமாத் போன்ற அமைப்புக்களும் சந்தேக நபரான சஹ்ரான் பற்றிய எச்சரிக்கை தகவல்களை இலங்கையின் பாதுகாப்புத்துறைக்கு வழங்கியுள்ளது. என்றாலும் நாட்டின் தேசிய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட விடயமென்பதால் அவ்வமைப்புக்கள் தமது நிறுவன ஊடக அறிக்கை மூலம் மக்கள் மயப்படுத்தவில்லை.

இலங்கையை மையப்படுத்திய சர்வதேச அரசியல் நகர்வுகள்.

உலகளாவிய ரீதியில் உளவுத்துறைகளுக்கிடையில் தொடர்புள்ளது. அவ்வகையில் இலங்கையின் பாதுகாப்புத்துறைக்கு அச்சுறுத்தலாகவுள்ள சஹ்ரான் பற்றிய தரவுகள் இலங்கையை மேய காத்திருக்கும் இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளின் உளவுப் பார்வையில் சிக்கியுள்ளது.

குறிப்பாக இலங்கையில் தடம்பதித்து அதன் மூலம் இந்தியா மற்றும் சீனாவை கண்காணிக்க கழுகுப்பார்வை கொண்டு காத்திருந்த அமெரிக்காவும் இதுதான் சந்தர்பமென சஹ்ரான் குழுவைக்கொண்டு இலங்கையின் பாதுகாப்புத்துறை பலவீனமாகவுள்ளது. இலங்கைக்கும் எமது பாதுகாப்பு அவசியமென நிறுவ குண்டுத்தாக்குதல் நாடகத்தை அறங்கேற்றினர்.

இதற்கு இலங்கையின் நல்லாட்சியும் சிறந்த களத்தை அமைத்துக்கொடுத்துவிட்டது. அதாவது இலங்கை பொதுமக்களிடம் நீண்டகாலமாக தவறான இரு நம்பிக்கையுள்ளது. இந்நம்பிக்கை வழுப்பெற நிச்சியமாக ஊடகங்கள்தான் பங்களித்திருக்க வேண்டும். அதுதான் ஐக்கிய தேசிய கட்சி அனைத்து சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம்கள் சார்பாக செயற்படுபவர்கள் என்ற நம்பிக்கை முஸ்லிம்களிடமும், பொதுஜன பெரமுனா கட்சி அனைத்து சந்தர்ப்பங்களிலும் பௌத மக்கள சார்பாக செயற்படுகிறார்கள் என்ற நம்பிக்கை சிங்கள மக்களிடமும் குடி கொண்டுள்ளது.

ஆனால் இவ்விரு கட்சிகளின் வெளிநாட்டுக்  கொள்கைகள், அதாவது ஐக்கிய தேசிய கட்சி  அமெரிக்கா சார்பாகவும், பொதுஜன பெரமுனா கட்சி சீனா சார்பாகவும் செயற்படுகின்றது. ஏற்கனவே குறிப்பிட்ட நம்பிக்கைகள் இவர்களின் வெளிநாட்டுக்கொள்கையை பொது மக்களிடமிருந்து மறைத்துவிட்டது. தற்போதுள்ள அரசின்  அமெரிக்கா சார்பான கொள்கை அவர்களின் செயற்திட்டத்தை இலங்கையில் நடாத்த இடமளித்துவிட்டது.

உண்மையில் தற்போதைய அரசு பொதுமக்களின் பாதுகாப்பு விடயத்தில்  தூங்கவில்லை தூங்கியதாக நடித்தார்கள். அந்த  நடிப்பு  அமெரிக்காவின் உள்நுழைவிற்கு களம் அமைத்துள்ளது.

BBS கூட்டமும் தெளிவு பெற்ற மக்களும்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலிற்குப் பின்னால் இவ்வாறு ஓர் சர்வதேச அரசியல் நாடகம் அறங்கேறினாலும், அதுபற்றி பொதுமக்கள் சிந்திப்பதை இலங்கையின் கட்சி அரசியலுக்கு துணைபோகும் ஊடகங்களின் அறிக்கைகள் மறைத்துவிட்டது. மாறாக மதங்களை மறந்து நட்புக்கொண்டிருந்த சிங்கள முஸ்லிம் அன்பர்களிடையே சந்தேகத்தை உண்டுபண்ணியது. ஆனால் அதுவும் நீண்டகாலம் நிலைக்கவில்லை. ஏனெனில் முன்வைக்கப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுக்களும் போலியானது என்பதை ஒரளவு சுதந்திரத்துடன் இயங்கும் நீதிச்சேவை  மூலம் நிறுபிக்க முடிந்தது.

அவ்வாறு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டொன்றே முஸ்லிம்களிடம் வால்கள் இருப்​பதென்பது. ஆனால் அதனை நிறுபிக்க முடியவில்லை. அவ்வாறே  இலங்கைத் தென்பகுதி சிங்களவர்களும் தமது பாதுகாப்புக்கென வால்களை வைத்திருப்பதால் இக்குற்றச்சாட்டு வெற்றிபெறவில்லை.

மேலும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒன்றே மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் உணவுகளை முஸ்லிம்கள் பரிமாறுவதென்பது, அதனையும் தீரவிசாரித்த போது உலகளவில் இவ்வாறு மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் உணவுகள் இல்லையென நிறூபமானது.

இன்னோரு குற்றச்சாட்டுதான் டொக்டர் ஷாபி என்பவர் 4,000 கர்ப்பிணித்தாய்மார்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொண்டார் என்பது. இதனையும் தீரவிசாரித்த போது தனியோருவரால் இச்சிகிச்சை மேற்கொள்ள முடியாது என்ற உண்மையும், இக்குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள் வைத்திய பரிசோதனைக்கு தயங்கியமை காரணமாக இதுவும் பொய்யென பொதுமக்கள் உணர்ந்துகொண்டனர்.

இவ்வாறு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யென உறுதி செய்யப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் சுமார் 100,000 சிங்கள மக்களை ஒன்றிணைத்து  முஸ்லிம்களுக்கெதிராக பிரகடணம் செய்வதாக பொதுபலசேனா அமைப்பு சூளுறைத்தது. ஆனால் அது எதிர்பார்த்த தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தவில்லை. அன்று சிங்கள மக்கள் இதுவெல்லாம் அரசியல் நாடகமென உணர்ந்து கொண்டனர். ஆனால் இந்த உண்மையை முஸ்லிம்கள் இன்னும் உணரவில்லை.

பொதுமக்களே இலங்கையில் இடம்பெற்ற  குண்டுத்தாக்குதலுக்கு மதசாயம் பூசப்பட்டாலும் உண்மையான முஸ்லிம்கள் செய்த தேசத்துரோக செயலல்ல இது. மாறாக இலங்கையில் தொடர்ந்தும் இனவாத செயல்கள் இடம்பெறுவதால் மனதளவில் பாதிக்கப்பட்ட இளைஞர்களைக்கொண்டு தமது சர்வதேச மற்றும் உள்நாட்டு அரசியல் இருப்புக்காக மேற்கொண்ட நாடகமே இதுவாகும். எனவே இனியும் தீவிரவாத சிந்தனையுள்ள மதகுருமார்களினதும், அரசியல்வாதிகளினதும், ஊடகங்களினதும் கருத்துக்களை குருட்டுத்தனமாக நம்பாமல் சிந்தித்து செயற்படுவோம்.

பிற்குறிப்பு:

இக்கட்டுரைக்கான தரவுகள் விடிவெள்ளி, நவமணி போன்ற பத்திரிகை, www.madawalanews.com, www.jafnamuslim.com, www.srilankamuslims.lk இணையத்தளங்களில் குறிப்பிட்ட காலங்களில் வந்த கருத்துக்கள், நண்பர்களுடான உரையாடல்களில் முன்வைத்த கருத்துக்கள் என்பற்றை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது.

ஏனைய இணைய முகவரிகள்

https://tradingeconomics.com/united-states/weapons-sales

http://meiyeluthu.blogspot.com/2009/01/blog-post.html

http://anbudanislam2012.blogspot.com/2012/10/032_24.html

https://www.facebook.com/onlinepjnet/videos/1084416975081422/

Ibnuasad

ஆய்வு சுருக்கம்: இலங்கையில் இடம் பெற்ற குண்டுத்தாக்குதலிற்கு பின்னால் உள்ள அரசியல், பொருளாதார, சமூக காரணிகளை ஆராய்ந்தலும் இலங்கையின் அரசியல், பொருளாதார, சமுக மட்டத்தில் நிலையான அபிவிருத்தியை இலக்காக கொண்டு மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள்…

ஆய்வு சுருக்கம்: இலங்கையில் இடம் பெற்ற குண்டுத்தாக்குதலிற்கு பின்னால் உள்ள அரசியல், பொருளாதார, சமூக காரணிகளை ஆராய்ந்தலும் இலங்கையின் அரசியல், பொருளாதார, சமுக மட்டத்தில் நிலையான அபிவிருத்தியை இலக்காக கொண்டு மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *