Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும்; பிழைத்த பின் கைசேதப்பட்டு பயனில்லை. 

சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும்; பிழைத்த பின் கைசேதப்பட்டு பயனில்லை.

  • 6

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

வாக்குச் சாவடிக்குள் நீங்கள் எடுக்கின்ற முடிவு  ஊரிலும், நகரிலும், மாநகரிலும் மாத்திரமன்றி நாட்டிலும் எதிர்கால சந்ததிகள் வாழ்விலும் நல்லதையோ கெட்டதையோ விளைவிக்கப் போகிறது.

வாக்கு என்பது “சாட்சியமாகும்”,
வாக்கு என்பது “அதிகாரமளித்தலாகும்”
வாக்கு என்பது “தெரிவு” ஆகும்,
வாங்கு என்பது “ஆயுதமாகும்”,
வாக்கு என்பது “தீர்ப்பு” ஆகும்,
வாக்கு என்பது “ வகிபாகம்” ஆகும்,
வாக்கு என்பது “துணைபோதல்” ஆகும்,
வாக்கு என்பது “சோதனை” ஆகும்,
வாக்கு என்பது மொத்தத்தில் “அமானிதமாகும்”.

இந்த அமானிதம் குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவோம்.

நாம் வாழுகின்ற தேசத்தில் அமைதி பாதுகாப்பு, சமாதானம், இனங்களுக்கிடையிலான நல்லுறவு, பொருளாதார சபீட்சம், உடகட்டமைப்பு வசதிகள், பொது சேவைகள்…

கல்வி கலை கலாசார பண்பாடுகளில் விருத்தி, ஊழல் மோசடிகளற்ற நல்லாட்சி, மனித உரிமைகள் மதிக்கப்படல்,  நீதி நிலைநாட்டப்படுவது, சுகாதாரம், சுற்றுச் சூழல் பேணிப் பாதுகாக்கப்படுவது, வறுமை ஒழிப்பு, மது போதை வஸ்துகள் ஒழிப்பு…

என எல்லோருக்கும் பொதுவான  பொது வாழ்வின் சகல துறைகளிலும் நாம் போற்றுகின்ற உயரிய விழுமியங்களை கொள்கை கோட்பாடுகளை நியாய தர்மங்களை மேலோங்கச் செய்வது  தஃவா மற்றும் ஜிஹாத் எனும் விதியாக்கப்பட்ட அறப்பணிகளாகும்.

அரசியல் ஆட்சி அதிகாரம் என்பன அக்கிரமக்கார்களிடமிருந்து மீட்கப்படுவதற்கான போராட்டம் வரலாறு நெடுகிலும் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமிடையிலான தொடர்ந்தேர்ச்சியான சமராக இடம் பெற்று வந்தள்ளதை நாம் நன்கு அறிவோம்.

சங்கிலித் தொடராக வரும் சத்திய வழி நின்று அரசியல் எனும் மிகப்பெரிய அமானிதத்தை பேணிக்காப்பதில் வேட்பாளராயினும்  வாக்காளராயினும் எமது வரலாற்றக் கடமையினைச் சரியாகச் செய்வோம்.

ஹலால் அழுத்கமை முதல் திகன மினுவங்கொட வரை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட சங்கிலித் தொடரான சவால்களுக்கு பின்னால் இருந்ததுவும் தேசிய பிராந்திய பல்தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் தான்.

தெளிவான தேசிய சமூக பார்வையும்,கூட்டுப் பொறுப்பும், மூலோபாய திட்டமிடல்களும் இல்லாமல் பயணிக்கும் ஒரு சமூகம் அடுத்தடுத்த சமூகங்களை நொந்து கொள்வதில் அர்த்தமில்லை,அரசியலும் இராஜ தந்திரமும் முஸ்லிம் சமூகம் பறிகொடுத்து பரிதவிக்கும் ஆயுதங்களாகும்…!

இனாமுல்லாஹ் மஸிஹுத்தீன்
வியூகம் வெளியீட்டு மையம்

[totalpoll id=”6618″]

வாக்குச் சாவடிக்குள் நீங்கள் எடுக்கின்ற முடிவு  ஊரிலும், நகரிலும், மாநகரிலும் மாத்திரமன்றி நாட்டிலும் எதிர்கால சந்ததிகள் வாழ்விலும் நல்லதையோ கெட்டதையோ விளைவிக்கப் போகிறது. வாக்கு என்பது “சாட்சியமாகும்”, வாக்கு என்பது “அதிகாரமளித்தலாகும்” வாக்கு என்பது…

வாக்குச் சாவடிக்குள் நீங்கள் எடுக்கின்ற முடிவு  ஊரிலும், நகரிலும், மாநகரிலும் மாத்திரமன்றி நாட்டிலும் எதிர்கால சந்ததிகள் வாழ்விலும் நல்லதையோ கெட்டதையோ விளைவிக்கப் போகிறது. வாக்கு என்பது “சாட்சியமாகும்”, வாக்கு என்பது “அதிகாரமளித்தலாகும்” வாக்கு என்பது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *