சொல்லாமலே விடைபெறுமா?

  • 11

காலச்சக்கரத்தின் ஓயாத ஓட்டம் மெய்சிலிர்க்க வைக்கிறது
கண்ணிமைக்கும் நொடிதனிலே
மூன்றாண்டுகளின் விளிம்பினிலே

நம்மை அறியாமலே
பல்லாயிரம் அனுபவங்கள்
இன்பங்கள், துன்பங்கள்
உரிமையுடன் பின் தொடரும்
பல சொந்தங்கள் என்று.

மூன்றே மூன்று ஆண்டுகளாம்
அதிலும் இரண்டாண்டுகளே
விடுதி வாழ்க்கையாம்
இறுதி ஆண்டிற்கு நடந்ததென்னவோ?

கொரோனாவின் கோரத்தாண்டவம்
இக்கொஞ்ச காலமதை
மெய்மறந்து ‘ஸூம்’ இனிலே
கழிக்க வைக்கிறது.

உல்லாசமாக கழித்த பொழுதுகள் எங்கே?
கலையகம் தந்த உறவுகள் எங்கே?
சிரிப்பொலிகளால் வெடித்த
விரிவுரை மண்டபங்கள் எங்கே?
சீனியர் ஜுனியர் வட்டங்கள் எங்கே?

அனைத்தையும் புறந்தள்ளி
உறவுகளை அடைக்கலமிட்டு
சொல்லாமலே விடைபெறுமா
இப்பல்கலை வாழ்க்கை !!

எம்.என்.எப். நப்fலா
மூன்றாம் வருடம் (கலை கலாசார பீடம்)
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்.

காலச்சக்கரத்தின் ஓயாத ஓட்டம் மெய்சிலிர்க்க வைக்கிறது கண்ணிமைக்கும் நொடிதனிலே மூன்றாண்டுகளின் விளிம்பினிலே நம்மை அறியாமலே பல்லாயிரம் அனுபவங்கள் இன்பங்கள், துன்பங்கள் உரிமையுடன் பின் தொடரும் பல சொந்தங்கள் என்று. மூன்றே மூன்று ஆண்டுகளாம் அதிலும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *