Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
தனது அழகு கண்டவனுக்கு அல்ல கொண்டவனுக்கு 

தனது அழகு கண்டவனுக்கு அல்ல கொண்டவனுக்கு

  • 12

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

அணிந்தும் அணியாத நிர்வாண நிலை, விலை கொடுத்து வாங்கி மாற்றான் கண்களுக்கு பிறந்த மேனியாய் விருந்தாகும் அவலம் அரங்கேறும் நவீன உலகம்!

சொந்த தாய், மகள், சகோதரி, மனைவி நிர்வாணமாக சுற்றுவதை பார்த்தும் கண்டிக்காது உறுதுணையாக இருக்கும் அனைத்து தந்தை, கணவன், மகன், சகோதரன் போன்றோர் மறுமையில் தப்பவே முடியாது.

வீட்டில் உள்ளவர்களைத் தடுக்காத இவர்கள் ஆண்கள் என்று வீராப்பு பேசுவதற்கு அருகதை உள்ளவர்களா? வினயமாக கேட்பது யாதெனில், பெற்றோர்கள் இது குறித்து கூடிய கரிசனை செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும். மார்க்கம் உதறித்தள்ளப்பட்டு அன்னிய சக்திகள் ஊடுருவி எமது வாலிப சமுதாயத்தை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கின்றன.

நபியவர்கள் கூறியது போல்

ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே அவர்களது பொறுப்புகளைப் பற்றி விசாரிக்கப்படுவார்கள்.

இன்று கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் கல்விகற்கும் பெண்களின் ஆடைகளை அவதானித்தால் கவலைக்கிடமாக உள்ளது. உடலை முழுமையாக மறைக்கா வண்ணமும் உடலோடு ஒட்டிய ஆடை கழுத்துக்கு மட்டும் ஒரு சுற்று இதெல்லாம் ஏன் காற்றோட்டம் தேவைப்படுவதனாலா??

சிறுவயது குழந்தைகளின் உடையில் உட்பட, ஏன் பள்ளிக்கூட சீருடைகளில் கூட இந்த ஆடைக்குறைப்பு பின்பற்றப்படுவதைக் கண்டுவருகிறோம். ஆனால் நாம் ஒரேயொரு காரணத்தை மட்டும் உறுதியாக புரிந்து கொள்ளவேண்டும். ஆம், பெண்ணின் கவர்ச்சிகரமான உடல் உறுப்புக்கள் பொது மக்களின் அதாவது அந்நிய ஆண்களின் பார்வைக்கு விருந்தாக வேண்டும் என்ற ஒரே நோக்கமே இதன் பின்னணியில் உள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை!

பெண் என்பவள் பலவீனமானவள், அவளது உடலின் கவர்ச்சி கண்டு ஏதாவது அந்நிய ஆண் ஈர்க்கப்பட்டால் அங்கு அவளது கற்பும் தொடர்ந்து உயிரும் பறிபோக வாய்ப்பு உண்டு என்பதை நாம் அனைவரும் அறிந்தே இருக்கிறோம். அதனால் இந்த விதமான ஆடைகள் பாதுகாப்பு அற்றவை என்பதை நிரூபிக்க சான்றுகள் தேவையில்லை. அன்றாடம் தொடர்ந்து அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களே இதை உறுதிப்படுத்துகின்றன.

தேசிய குற்றவியல் பதிவகத்தின் (NCRB) புள்ளிவிவரப்படி நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் 95 பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள். அதாவது ஒவ்வொரு ஒரு மணிக்கு சுமார் நான்கு பெண்கள் வீதம் இதற்கு பலியாகிறார்கள். (இது காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கணக்குப்படி. பதிவுக்கு வராத கணக்கை நீங்களே ஊகிக்க முடியும்.) இந்த குற்றங்களுக்குப் பின்னால் பல காரணங்கள் இருந்தாலும் பெண்களின் ஆடைக்குறைப்பு ஒரு முக்கிய காரணமாக வுள்ளது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், பிற ஆண்களை தம் அழகை வெளிகாட்டி ஈர்க்கவேண்டும் என கேவலமான எண்ணத்தோடு நடந்துக்கொள்ளும் பெண்கள் சொர்க்கத்தின் வாடையை நுகரக்கூட முடியாத அளவிற்க்கு நரகில் தள்ளப்படுவார்கள் என நபிகளார் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 4316)

பிறரின் சிந்தனையை தன்பால் ஈர்ப்பதற்கும், அதனை பொதுத்தளத்தில் பகிர்வதற்க்கும் ஆசைப்பட்டு நரகிலே நுழைய தங்களை தயார் படுத்தி கொண்டுள்ளனர். இதனால் இவர்கள் நரகபடுகுழியில் செல்வதால் மட்டுமல்லாது பிற பெண்களையும் அந்த பாதையில் இழுத்துச்செல்ல வழிகாட்டுகின்றனர். ஒழுக்கத்தை இழந்து சுவர்க்கத்தை இழந்து மார்க்கத்தை இழந்து சமுதாய அந்தஸ்த்தை இழிவுப்படுத்தி இவர்கள் அடைய கூடிய மகிழ்ச்சி அற்பத்திலும் அற்பம் தானே!

தனக்கான அழகை அல்லாஹ் வழங்கியதை நினைத்து அல்லாஹ்விடம் நன்றி கூறவேண்டியவர்கள் அந்த அழகை இது போன்ற ஹராமானவற்றுக்கு பயன்படுத்துகின்றனர். அல்லாஹ் வழங்கிய அந்த அழகை அவனே அழிப்பதற்க்கு எத்துனை மணித்துளிகள் ஆகும்? அல்லாஹ் நாடினால் எந்த அழகை ஹராமானவைக்கு பயன்படுத்துகிறோமோ அதே அழகை பறித்து விடமாட்டானா?

தன் கணவனல்லாது கண்டவனை பார்ப்பதற்கே அச்சப்படும் முஸ்லிம் பெண்கள் மத்தியில் இப்படியும் சிலர் இருக்கிறார்கள். நாளை மறுமையின் அச்சத்தை உணர்ந்த எந்த பெண்ணும் இவ்வளவு மட்டமாக நடந்து கொள்ளமாட்டாள். இதனை பொதுத்தளத்தில் பதியாமல் என் நண்பர்களுக்கே காட்டுகிறேன் என கூறினாலும் நீங்கள் இறைவன் தடுத்த பாவத்தை செய்த பெண்கள் தான்…

وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ ۛ وَأَحْسِنُوا ۛ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ

அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக்கொள்ளாதீர்கள்! (திருக்குர்ஆன் 2:195)

அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! எனவே பெண்களே ஆடை விடயத்தில் நிறங்கள் முக்கியம் இல்லை பிறரை கவராத வகையிலும், கவர்ச்சி, இறுக்கமில்லாத அவ்ரத்தை முழுமையாக மறைக்கக்கூடிய வகையில் அமைவதே இஸ்லாம் எதிர்ப்பார்க்கிறது தனது அழகு கண்டவனுக்கு அல்ல கொண்டவனுக்கே என்பதை மனதில் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.

FASLAN HASHEEM
South Eastrn University of Sri Lanka
(Islahiya Arabic college)

அணிந்தும் அணியாத நிர்வாண நிலை, விலை கொடுத்து வாங்கி மாற்றான் கண்களுக்கு பிறந்த மேனியாய் விருந்தாகும் அவலம் அரங்கேறும் நவீன உலகம்! சொந்த தாய், மகள், சகோதரி, மனைவி நிர்வாணமாக சுற்றுவதை பார்த்தும் கண்டிக்காது…

அணிந்தும் அணியாத நிர்வாண நிலை, விலை கொடுத்து வாங்கி மாற்றான் கண்களுக்கு பிறந்த மேனியாய் விருந்தாகும் அவலம் அரங்கேறும் நவீன உலகம்! சொந்த தாய், மகள், சகோதரி, மனைவி நிர்வாணமாக சுற்றுவதை பார்த்தும் கண்டிக்காது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *