Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
"தப்லீக்" நோய் பரப்பும் பணியல்ல. 

“தப்லீக்” நோய் பரப்பும் பணியல்ல.

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

தப்லீக் பற்றி எதுவும் எழுத வேண்டிய அவசியமில்லை என நினைத்தேன். ஆனால் இப்போது எழுதாவிட்டால் நமது இயக்க கண்மணிகள் தப்லீக் ஜமாத்தை “தாம்” செட்டுக்குள் அடக்கிவிடுவார்கள் என்பதால் இந்த பதிவு.

கடந்த இரண்டு நாட்களாக கூகுள் தேடலில் அதிகமாக தேடப்பட்ட வாசகம் “தப்லீக் ஜமாத்” என்பதாகவே இருக்கும் என நினைக்கிறேன்.

நிறைய பத்திரிக்கை நண்பர்கள் கூட இது என்ன அமைப்பு? யார் தலைவர்? தமிழ்நாட்டில் மாநில தலைவர் உண்டா? என பல கேள்விகளுக்கான பதிலை கேட்டு தலையை பிய்த்துக்கொண்டு ஓடிவிடுகிறார்கள்.

இன்றைய தேதியில் முழு உலகிலும் (ஒரு நாட்டை கூட விட வேண்டாம் ) அனைத்து இஸ்லாமியர்களுக்கும் பரிச்சயமான ஒரு அமைப்பு உண்டு என்றால் அது “தப்லீக் ஜமாத்” மட்டுமே. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட அமைப்பு. தப்லீக் ஜமாத் என்ற பெயர் பதிவு செய்யப்பட்ட இயக்கத்தின் பெயரில்ல இது பொதுவாக பலரால் அழைக்கப்பட்டு பழக்கப்பட்ட பெயர் இன்றளவும் இதற்கான ஒரு பெயர் இல்லை.

“தப்லீக்”என்றால் பிறருக்கு செய்தியை கொண்டு சேர்ப்பது என்று பொருள். “ஜமாத்” என்றால் கூட்டம். இஸ்லாமிய கடமைகளை இஸ்லாமிய சகோதரர்களுக்கு நினைவுபடுத்தும் கூட்டம் என்றால் சரியாக இருக்கும்.

இவர்களின் ஒரே நோக்கம் உலகில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் இறைவனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து, நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை பின்பற்றி வாழ வேண்டும் என்பது மட்டும்தான். (தொழுக்கு அழைப்பது மட்டும் அவர்களின் வேலையில்லை) இவர்களின் செயல்திட்டம் பற்றி பேசினால் இந்த பதிவு மிக பெரிய பதிவாக நீண்டு விடும். உலகளாவிய இஸ்லாமியர்களின் எழுச்சியில் இந்த அமைப்பின் பங்கு அலாதியானது.

குறிப்பாக இந்தியாவில் இஸ்லாமியர்கள் பிற கலாச்சார சூழலில் இறை கட்டளைகளுக்கு எதிராக வாழ்ந்து கொண்டு இருந்த போது அவர்களை இஸ்லாமிய வாழ்வியலின் பால் திருப்ப வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்போது இந்த அமைப்பு செய்த பணிகளால் இந்திய அளவில் பல கிராமங்களில் இஸ்லாமிய எழுச்சி உருவானது. தொழுகையே நடக்காத ஆயிரக்கணக்கான மசூதிகளில் தொழுகை நிறைவேற்றப்பட்டது. அனாச்சாரங்கள் ஒழிக்கப்பட்டது.

இஸ்லாமிய பாடசாலைகள் உருவாக காரணமாக அமைந்தது. நாடுமுழுவதும் நூற்றுக்கணக்கான அரபி மத்ரஸாக்கள் உருவானது. அதன் மூலமாக லட்சக்கணக்கான மார்க்க அறிஞர்கள் உருவானார்கள். குர்ஆனை மணனம் செய்த ஹாபிழ்கள் உருவானார்கள். இந்த அமைப்பு எந்த காலத்திலும் யாரிடமும் வசூல் செய்யாது, மேலும் லெட்டர் பேட், பில் புக், கொடி, அரசியல் முடிவு,போன்றவைகள் இவர்களிடத்தில் இல்லை.

தமது சொந்த பணத்தை எடுத்து செலவழிக்க வேண்டும் என்பது இவர்களின் முக்கிய கொள்கை. எவ்வளவு இக்கட்டான அரசியல் சூழலாக இருந்தாலும் 100% அரசுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். பொதுவாக சொன்னால் இந்த அமைப்பு விதையை பரவலாக தூவிவிட்டு போய் கொண்டே இருக்கும்.

ஏதாவது ஒரு விதத்தில் அது இஸ்லாமியர்களுக்கு பலனாக அமையும். அது மத்ரஸாக்களாக, ஆலிம்களாக, ஹாபிழ்களாக, தொழுகையாளிகளாக, ஹஜ் செய்பவர்களாக, மத்ரஸா மாணவர்களாக, இஸ்லாமிய பாடசாலைகள் , இஸ்லாமிய பைதுல்மால்கள், இஸ்லாமிய மருத்துவ மனைகள், இப்படி இவர்கள் கொடுக்கும் “இஸ்லாமிக் ஸ்பிரிட்” நேரடியாக பலனை தரவில்லை என்றாலும், ஏதாவது ஒரு விதத்தில் ஒரு முஸ்லிம் முஸ்லிமாக வாழ வேண்டும் என்பதை உணர்த்தும்.

கூட்டத்தை காட்டும் நோக்கமில்லாமல் கூட்டத்திற்கு வரும் அனைவரும் முழு இஸ்லாமிய வாழ்வியலை பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையை சுமந்து கொண்டு லட்சக்கணக்கான மக்களை திரட்டும் ஆற்றல் கொண்டவர்கள்.

இந்த அமைப்பில் உலகளாவிய டாக்டர்கள், பெறியாளர்கள், அரசியல் தலைவர்கள், மார்க்க அறிஞர்கள், அரசு பணியாளர்கள் என லட்சேபலட்சம் தொண்டர்களை கொண்ட அமைப்பு. பல கோடிக்கு அதிபதியும் அன்றாடங்காய்ச்சியும் ஒரே தட்டில் சாப்பிட வைக்கும் அமைப்பு. ஆனால் இதற்கு தனி ஐ.டி கார்ட் இல்லை.

சுருங்கச் சொன்னால் எவ்விதமான உலகளாவிய ஆதாயங்களையும் தேடாமல், முழுமையாக இஸ்லாமியராக ஹலால், ஹராம் பேனுபவராக ஒரு முஸ்லிம் வாழ வேண்டும் என்பது மட்டுமே.

தப்லீக் பற்றி எதுவும் எழுத வேண்டிய அவசியமில்லை என நினைத்தேன். ஆனால் இப்போது எழுதாவிட்டால் நமது இயக்க கண்மணிகள் தப்லீக் ஜமாத்தை “தாம்” செட்டுக்குள் அடக்கிவிடுவார்கள் என்பதால் இந்த பதிவு. கடந்த இரண்டு நாட்களாக…

தப்லீக் பற்றி எதுவும் எழுத வேண்டிய அவசியமில்லை என நினைத்தேன். ஆனால் இப்போது எழுதாவிட்டால் நமது இயக்க கண்மணிகள் தப்லீக் ஜமாத்தை “தாம்” செட்டுக்குள் அடக்கிவிடுவார்கள் என்பதால் இந்த பதிவு. கடந்த இரண்டு நாட்களாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *