Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 10 
திசை மாறிய தீர்ப்புக்கள்

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 10

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

வைத்தியசாலைக்கு உள் சென்றதும் மீண்டும் மொபைல் அலற வத்சலாவை உள்ளே விட்டு விட்டு வெளியிறங்கி வந்தான். கணவனின் இந்த நிலைமை வத்சலாவுக்கு சிறிது சந்தேகத்தை கிளறி விட்டது. செக்கப்பை முடித்து விட்டு வெளியே வந்தாள். சுந்தர் யாருடனோ தூரமாய் கதைத்துக் கொண்டிருப்பதை கண்டவள் மெதுவாக அவன் பக்கம் நகர்ந்தாள்.

ஏதோ அவனின் நல்ல காலம் பின்னால் திரும்பிப் பார்த்தவன் வத்சலா தன்னை நோக்கி வருவதை கண்டு கொண்டான்.

“என்ன சரியா? என்ன சொன்னாங்க?

ஹ்ம்ம் எல்லாம் நல்லாத் தானிருக்கு” திருப்தியுடன் மனைவி சொல்ல அவனின் வதனத்தில் சந்தோஷம் இருக்கவில்லை.

“சரி வா அவசரமா வீடு போகலாம். எனக்கு பயணம் ஒன்னு போக இருக்கு.

எங்க போகனும்?” எடுத்த எடுப்பிலேயே கேட்டு விட்டாள் வத்சலா.

“எல்லாம் உன்கிட்ட சொல்லனுமா?” அந்தப் பதிலை அவள் எதிர்பார்க்கவில்லை. மௌனமே உருவாய் கணவனை பின் தொடர்ந்தாள். அவளின் உள்ளம் கவலையால் வலித்துக் கொண்டிருந்தது.

வத்சலாவை வீட்டில் விட்டவன் எதுவும் சொல்லாது அதே வகனத்தில் எங்கோ பயணமாக, ஏக்கத்துடன் அந்த நீண்ட பாதையை பார்த்துக் கொண்டிருந்தாள் வத்சலா.

இங்கு “தன் மகளுக்கு என்ன ஆயிற்றோ?” வீட்டை அடையும் வரை பதற்றமாய் இருத்தது சுந்தருக்கு..

“ராதா… ராதா…

இப்போ தான் ஹாஸ்பிடல் போனாங்க அண்ணா” தனக்கிளையவள் சொல்ல பதற்றம் இன்னும் அதிகமாகி வைத்தியசாலையை நோக்கி விரைந்தான்.

அங்கு சோர்ந்து போய் தாயின் மார்பில் தலைவைத்துக் கொண்டிருந்த மகளை தன் கரங்களால் அள்ளி எடுத்தான். “என்ன விட்டு போக வேணாம் டெடி” மகளின் அந்த வார்த்தை அவனை நோக வைத்தது.  “டெடி எங்கயும் போக மாட்டேன்” மனைவி ராதாவின் வதனமும் வாடிப் போயிருக்க, அவள் கரங்களை ஆறுதலாய் பற்றிக் கொண்டான்.

“என்னம்மா திடீருன்னு?

தெரியல்லங்க, காலையில இருந்து நல்லமேயில்ல. வாடிப் போயிருந்தாள். அப்புறம் வாந்தி, உடம்புலயும் நல்ல சூடு” அதுதான் பயந்து போயிட்டன்.

எதுவும் இருக்காது” என்ன இருந்தாலும் மகள் விடயத்தில. அதீத பிரியம் கொண்ட சுந்தர். மனைவிக்கு ஆறுதல் சொல்லி விட்டு உள்ளுக்குள் பயந்து போயிருந்தான்.

“வாணி” வெளியே வந்த தாதி ஒருவர் பெயர் சொல்லி அழைக்க, மகளை வாரியெடுத்துக் கொண்டு இருவரும் உள்ளே சென்றனர்.

கதை தொடரும்…
Ruwaiza Razik
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

வைத்தியசாலைக்கு உள் சென்றதும் மீண்டும் மொபைல் அலற வத்சலாவை உள்ளே விட்டு விட்டு வெளியிறங்கி வந்தான். கணவனின் இந்த நிலைமை வத்சலாவுக்கு சிறிது சந்தேகத்தை கிளறி விட்டது. செக்கப்பை முடித்து விட்டு வெளியே வந்தாள்.…

வைத்தியசாலைக்கு உள் சென்றதும் மீண்டும் மொபைல் அலற வத்சலாவை உள்ளே விட்டு விட்டு வெளியிறங்கி வந்தான். கணவனின் இந்த நிலைமை வத்சலாவுக்கு சிறிது சந்தேகத்தை கிளறி விட்டது. செக்கப்பை முடித்து விட்டு வெளியே வந்தாள்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *