என் ஊரான அல்லைநகர்

  • 7

மேம்பாலத்தின் வாசலிலேயே!
தோப்புகளின் எழிலிலே!
தோப்பூர் நகரின் மணம் வீசும்
மதிப்புடனே!
மேற்தலை நிமிர்ந்து நிற்குது – எம்
ஊராம் அல்லைநகர்

எங்கும் இயற்கை வளங்களும்
எப்போதும் கண்களை கவரும் நெற்பயிர்களும்
எந்நேரமும் எழில் பொருந்திய அழகிய குளங்களும்
என்றும் நிறைந்த ஈமானிய இதயங்களும் கொண்ட – எம்
ஊராம் அல்லைநகர்

மும்மொழியும் ஒற்றுமையுடனே!
ஒரு தாய் பிள்ளையாய்!
ஒன்றிணைந்து வாழும் – ஊராம்
மாண்புமிகு நகர் அல்லைநகர்

ஆயிரம் ஆயிரம் ஆலிம்கள்
பலநூறு ஆசான்கள்
அடுக்கடுக்காய் கல்விமான்களை
முத்து முத்தாய் பெற்றெடுத்த
தூய பூமாதா – எம் அல்லைநகர்

எம்மை வளர்ந்து
அரவணைத்து வரும்
ஓர் அன்னை- அவள்
என்றும் வாழ்க வளமுடன் வளமாய்!!!

H.M. Faais
(Thoppur)
Faculty Of Islamic Studies and Arabic Language
South Eastern University- Oluvil
வியூகம் வெளியீட்டு மையம்

மேம்பாலத்தின் வாசலிலேயே! தோப்புகளின் எழிலிலே! தோப்பூர் நகரின் மணம் வீசும் மதிப்புடனே! மேற்தலை நிமிர்ந்து நிற்குது – எம் ஊராம் அல்லைநகர் எங்கும் இயற்கை வளங்களும் எப்போதும் கண்களை கவரும் நெற்பயிர்களும் எந்நேரமும் எழில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *