Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
துடிப்பான வாசகர்களாக இருப்போம். 

துடிப்பான வாசகர்களாக இருப்போம்.

  • 13

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

முழு உலகையும் உள்வீட்டிற்கு அழைத்து வரும் மந்திர சக்தி வாசிப்புக்கு இருக்கிறது. வாசிப்போரின் உலகம் பரந்து விரிந்தது. வாசிக்காதோரின் உலகமோ மிகமிகக் குறுகியது.

வாசிக்காமலேயே எழுத்தாளர்களாக, விமர்சகர்களாக, பேராசிரியர்களாக ஆய்வாளர்களாக தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் சிந்தனைச் சோம்பேறிகளுக்கு மத்தியில் நாம் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம்.

பழைய வாசிப்பின் ஞாபகங்களில் தேங்கிப் போயிருப்போரே இங்கு அதிகம். புதிய வாசிப்பு இல்லாமலேயே நம்மில் பலரின் காலம் கழிகிறது.

இன்னும் சிலரோ தங்களது துறையோடு மட்டுமே சுருங்கிப் போகின்றனர். அதைத் தாண்டிய வாசிப்பு அவர்களிடம் இருப்பதில்லை. பரந்த வாசிப்புதான் நமது ஆழ்மனச் சிறகை விரிக்கச் செய்யும்; விரிந்த உலகைக் காட்டித் தரும்.

வாசிக்கும்போது உள்ளூர ஒரு பரவசம் ஊறிப் பரவும். அது தரும் சுகம் மிக அலாதியானது. இன்னும் சில நூல்களோ எழுத்துகளோ நம்மோடு ஓயாது பேசிக் கொண்டிருக்கும்; நம்மைத் தொந்தரவு செய்து கொண்டிருக்கும்.

இதை உணர்ந்து அனுபவிப்போர் வாசிப்பின் மீது தீராக் காதல் கொண்டோராய் இருப்பர். நம்முள் பலருக்கு இந்த இனிய அனுபவம் வாய்ப்பதில்லை என்பது துயரமே.

அறிவோடும் உணர்வோடும் உரசி/ மோதி, மனவெளியிலும் சிந்தனைப் புலத்திலும் வாசிப்பு எழுப்பும் ஆழ்மன தரிசனங்களே மாற்றத்தின் விதைகளை ஊன்றச் செய்கின்றன. செயல் முனைப்புடன் கூடிய வாசிப்பு, பின்னர் தொடர் செயன்முறையாக மலர்கிறது. இச்செயன்முறையானது, காலவோட்டத்தில் சமூக மாற்றமாக வளர்ந்து கிளை விரிக்கும்.

சிலபோது, இதற்கு மறுதலையான வாசிப்பும் இருக்கும். மகிழ்ச்சியும் கிளர்ச்சியுமாய் அந்த வாசிப்பு முடிந்து விடும். இந்த வகையான வாசிப்பு செயலூக்கமற்ற ஒன்றாய்ச் சுருங்கி விடும்.

வாசிப்பு நதி நீரோட்டம் போன்றது. அது குட்டையைப் போல பழைய நீரைத் தேக்கி வைப்பதில்லை. புதிது புதிதாய் மலர்ந்தும் வளர்ந்தும் ஊற்றெடுத்துக் கொண்டுமே இருக்கும். ஓடும் நீரில்தான் இயக்க சக்தி அதிகம். வாசிப்போரால்தான் இந்த வாழ்வு வளம்பெறும்- அர்த்தமும் கனதியும் மிகுந்ததாய் மாறும்.

துடிப்பான வாசகர்களாக இருப்போம்.

சிராஜ் மஷ்ஹூர்

முழு உலகையும் உள்வீட்டிற்கு அழைத்து வரும் மந்திர சக்தி வாசிப்புக்கு இருக்கிறது. வாசிப்போரின் உலகம் பரந்து விரிந்தது. வாசிக்காதோரின் உலகமோ மிகமிகக் குறுகியது. வாசிக்காமலேயே எழுத்தாளர்களாக, விமர்சகர்களாக, பேராசிரியர்களாக ஆய்வாளர்களாக தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும்…

முழு உலகையும் உள்வீட்டிற்கு அழைத்து வரும் மந்திர சக்தி வாசிப்புக்கு இருக்கிறது. வாசிப்போரின் உலகம் பரந்து விரிந்தது. வாசிக்காதோரின் உலகமோ மிகமிகக் குறுகியது. வாசிக்காமலேயே எழுத்தாளர்களாக, விமர்சகர்களாக, பேராசிரியர்களாக ஆய்வாளர்களாக தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *