Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நன்மை செய்வோம், பிறருக்கும் தூண்டுவோம் 

நன்மை செய்வோம், பிறருக்கும் தூண்டுவோம்

  • 16

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

உண்மையில் நன்மையை செய்வது மிகவும் வெறுப்பும் கஷ்டமும், ஆனால் தீமையை அதிகம் செய்வது அதிக விருப்பும் இன்பமும், ஆகும்.

ஏனெனில் சுவர்க்கம் வெறுப்பினாலும், நரகம் விரும்பினாலும் ஆக்கப்பட்டுள்ளது. அதாவது “இவ்வுலகம் மறுமையின் விளைநிலமாக படைக்கப்பட்டுள்ளது.”

அந்தவகையில் இம்மையின் வீண்கழியாட்டங்கள், உலக இன்பங்களில் மூழ்கியவனுக்கு இவ்வுலகில் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு வாழ்வது கஷ்டமும், வெறுப்புமாகும்.

அவனது இறுதி முடிவு நரகமே, அதனால்தான் உலக வாழ்வில் மூழ்கியவன் மறுமையை மறந்து இவ்வுலகில் இன்புறுவதால் தான் நரகம் இன்பத்தால் சூழப்பட்டுள்ளது எனப்படுகின்றது.

அதே போல் இவ்வுலகில் அல்லாஹ்வின் ஏவல்களை அனுஅனுவாக ஏற்று, விளக்கள்களை விட்டும் மிக நுணுக்கமாக விலகி வாழ்பவருக்கு கஷ்டமாக, மிகவும் அவதானமாக தம் மனோ இச்சைக்குக் கட்டுப்படாமல் இவ்வுலக வாழ்வை கழிக்க வேண்டும் என்பதினாலே சுவனம் வெறுப்பினால் ஆக்கப்பட்டுள்ளது என நபி மொழி முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நமது வாழ்வு இந்நவீன உலகில் எப்படி மாறியுள்ளது?

நாம் வாழும் சூழல் முற்றாக இஸ்லாத்தை விட்டும் தூரமாகி, ஷைத்தானின் வலையில் முழுமையாக சிக்குண்டுள்ளோம். எனவே நம் வாழ்வில் நாம் நன்மை செய்பவராகவும், நன்மையைத் தூண்டி தீமையை தடுப்பவராகவும் எவ்வாறு மாறலாம்?

  1. அல்லாஹ்வினதும், அவனது தூதரினதும் ஏவல்களையும், விலக்கல்களையும் முழுமையாக அறிந்து தம் வாழ்வில் முழுமையாக பின்பற்றி
    இறையருளைப் பூரணமாகப் பெறல்.
  2. இறுதி நாள் வரைக்கும் இஸ்லாமிய விழுமியங்களை முழுமொயாக பின்பற்றி வாழுதல்.
  3. எல்லா வணக்கங்களையும், எந்த நல்ல விடயங்களையும் உளத்தூய்மையுடன், அல்லாஹ்வின் கூலியை மட்டும் எதிர்ப்பார்த்து ஆர்வமாக செயற்படுத்தி பூரண நன்மைகளை அடைந்துக்கொள்ளல்.
  4. எந்த உலக விடயமானாலும், இன்பமனாலும், அது மார்க்கத்து முரணாக இருந்தால் வெறுத்து ஒதுங்க்குதல்.
  5. அல்லாஹ்வுக்குரிய கடமைகளிலும், பிற மனிதருக்கு செய்யும் கடைமைகளிலும், பிறரின் நற்பெயருக்காய் செயற்படுவதனையும், வாரி வழங்குவதையும், சுயநலன்களுக்காக செயற்படுவதை முற்றாக தவிர்த்தல்.
  6. எப்போதும் பிறருக்கு முன்மாதிரியாகவும், நன்மையின் பக்கம் தூண்டுபவராகவும் வாழுதல். அது அற்ப விடயமானாலும் சரியே, உண்ணல், அணிதல், உறையாடுதல், தொலைக்காட்சி, வானொலி, பாவனை மற்றும் போன் பாவனை (stutes) போடுதல், ஆண், பெண் உறவு.
  7. இறைவன் தந்த ஆற்றல்களான எழுத்தாற்றல், பேச்சு, ஓவியம், கற்பனை, கற்பித்தல் அவனுக்கு பொருத்தமாக, இஸ்லாத்துக்கு மாற்றமில்லாமல், சத்திய மார்க்கத்திற்காய், நேர்வழிக்காக மட்டுமே பயன்படுத்தல்.
  8. இறுதி மூச்சு வரை நம் நாவு அல்குர்ஆனுடன் அதிக ஈடுபாடுடையதாகவும், மனனமிடுவதாகவும், அழகிய இராகத்துடன் ஓதக்கூடியதாகவும், அழகிய கிராத்துக்களை செவிமடுப்பதாகவும், அதனை எத்திவைப்பதற்காகவும் பயன்படுவதுடன், இசைக்கேட்டல், பொய், கோள், புறம் என்பவற்றுக்காய் நம்நாவுகள் அசையாமல், திக்குர்களுடனும், ஸலவாத்துடனும், இஸ்திஃபாருடனே அசையக்கூடியதாய் மாற்றுதல்.
  9. எந்த உலக செயற்பாடானாலும் இஸ்லாத்தை முதன்மைப்படுத்தல். அது திருமணமாக, பிள்ளைவளர்ப்பாக, தொழில்விடயமாக, கடன் எடுக்கும் விஷயமாக, எதுவானாலும் ஹராம் கலக்காமல், ஹலாலுடன் மட்டுமே இணைந்து வாழ முயற்சித்தல்.
  10. கடைசி தருணம் வரும்வரை இஸ்லாமிய விளுமியத்துடன் வரையரைப்பேணி, வரம்பு மீறாமல் அதிக தௌபாவுடன், நம்மை நாமே சுய விசாரணை செய்து, எப்போதும் நன்மை செய்பவராகவும், அதனை தூண்டுபராகவும், துணையாளராகவும் வாழ முயற்சிப்போம்.

இவ்வாறான பல்வகை அம்சங்களுடன் எமது வாழ்வை நாம் அமைப்பதினூடாகவும், பிறருக்கு தூண்டுதலாய் நம் வாழ்வை நாம் வாழ்வதினாலும் இறை அருளையும், அன்பையும், பெற்று உயர் பதவி நல்க முயற்சிக்க வேண்டும். ஒரு நன்மைக்கு நாம் தூண்டுதலாக இருக்கும் காலமெல்லாம் நன்மையின் பங்குதாரர்களாய் மாறலாம். இன்றே விரைவோம்! நன்மை அடைவோம்!

Ummu Adheeba
Seusl BA (Hons)
Counsellor ( R)

உண்மையில் நன்மையை செய்வது மிகவும் வெறுப்பும் கஷ்டமும், ஆனால் தீமையை அதிகம் செய்வது அதிக விருப்பும் இன்பமும், ஆகும். ஏனெனில் சுவர்க்கம் வெறுப்பினாலும், நரகம் விரும்பினாலும் ஆக்கப்பட்டுள்ளது. அதாவது “இவ்வுலகம் மறுமையின் விளைநிலமாக படைக்கப்பட்டுள்ளது.”…

உண்மையில் நன்மையை செய்வது மிகவும் வெறுப்பும் கஷ்டமும், ஆனால் தீமையை அதிகம் செய்வது அதிக விருப்பும் இன்பமும், ஆகும். ஏனெனில் சுவர்க்கம் வெறுப்பினாலும், நரகம் விரும்பினாலும் ஆக்கப்பட்டுள்ளது. அதாவது “இவ்வுலகம் மறுமையின் விளைநிலமாக படைக்கப்பட்டுள்ளது.”…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *