Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
தொலைந்து போன தோழமை 

தொலைந்து போன தோழமை

  • 171

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

மௌனமாய் இரசித்தேன் உன்னை சிலகாலம்!
குட்டி குட்டி சண்டைகள்!
கோபத்திலும் சிவந்திடும் மூக்கு!
தட்டு தடுமாறிய தருனம் தட்டி கொடுத்த தோழமை!
கட்டி அனைத்து கை குழுக்கிய கலங்கள்!
கண்ணீர் வடித்து கவலை மறந்து
சினுங்கிய சித்திரங்கள் என வாழ்ந்த நொடிகள்!
எங்கோ ஓடிச்சென்றது நான் நானாக இரசித்த கார்காலம்.

செவிகள் சித்தரித்தன உன் சிந்தனைகளை!
இன்று நா திறந்த பேச துடிக்கின்றேன்
நீ இல்லை அருகாமையில்!
அவள் வரைந்த சித்திரத்தில் கருப்பு புள்ளி நான்
ஆரம்பித்த இடம் பொருள் அறியேன்!

அவள் நாவில் நான் ஊட்டிய அறுசுவை மறுத்து போனதே!
மழலை என அவள் பாதம் சரணடைந்த மனம் சிதறிபோனதே!
நாவோடு நா பரிமாறிய உறவு விட்டு போனதே!
மார்பில் சாய்ந்துறங்கிய துயில் கலைந்து போனதே!
தலையோடு தலை சிய்ந்த தாய்மை தூரம் போனதே!
தோள் மீது தலை சாய்த்த தோழமை தோற்றுப் போனதே!
மனம் உடைந்து மடி சாய்ந்த தந்தை அன்பு தள்ளிப் போனதே!
விரலோடு விரல் கோர்த்து நடந்த பாதை மறந்து போனதே!

அவள் கைபேசியில் என் விரல் ரேகை பதித்தேன் ஏனோ!
ஒற்றை நொடி சிந்தனை மறந்தாய்!
என்னை ஆயுள் வரை சிந்திக்க வைத்து
சென்றாய் தொலைதூரம் !
கனப்பொழுது கண் மூடி திறக்கையில்
கலைந்து சென்றாய் காற்றோடு
என் பள்ளி ஜெர்சியில் மனந்த உன் வாசம் ஏனோ!
என் மூச்சில் கலந்தது உன் சுவாசம்

வகுப்பறை மேசைக்கு அடியில்
என் விரல்கள் உன் விரல்களுடன் நடத்திய போரில் தோற்றேன்
இடைவிடாமல் நீ பேசியதில் என் செவிகள் உறங்க மறுத்தன
இமை இரண்டு விலகாமல் நீ என்னை பார்த்ததில்
இதயமே உனக்கு அடிமையானது
இராப்பேருந்தில் உனக்காக பயணித்தேன்
இப்போது அன்பை இரவல் கேட்கின்றேன் உன்னிடம்
சிறுபொழுது விலகினாலும் பதறிய நீ!
இன்று சில காலமாய் என்னை விட்டு
தூரமாய் பறந்து விட்டாய் ஏனோ!

உன் மீது ஆசை கொண்டேன்
நட்பு தொடரும் என்ற மூடநம்பிக்கையில் தானோ
முடிவுரை இல்லா தொடர் கதையில்
இன்று என் வரிகளுக்கு மட்டும் முற்றுப்புள்ளி

A.Sudharshini




Monetize your website traffic with yX Media
Monetize your website traffic with yX Media
yX Media - Monetize your website traffic with us

மௌனமாய் இரசித்தேன் உன்னை சிலகாலம்! குட்டி குட்டி சண்டைகள்! கோபத்திலும் சிவந்திடும் மூக்கு! தட்டு தடுமாறிய தருனம் தட்டி கொடுத்த தோழமை! கட்டி அனைத்து கை குழுக்கிய கலங்கள்! கண்ணீர் வடித்து கவலை மறந்து…

மௌனமாய் இரசித்தேன் உன்னை சிலகாலம்! குட்டி குட்டி சண்டைகள்! கோபத்திலும் சிவந்திடும் மூக்கு! தட்டு தடுமாறிய தருனம் தட்டி கொடுத்த தோழமை! கட்டி அனைத்து கை குழுக்கிய கலங்கள்! கண்ணீர் வடித்து கவலை மறந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *