Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அரசியல் வாழ்வு ஒரு போர்க்களம்! 

அரசியல் வாழ்வு ஒரு போர்க்களம்!

  • 11

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

அரசியல் சாக்கடையும் அல்ல பூக்கடையும் அல்ல அது ஒரு போர்களம். மக்கத்து மண்ணில் வலி தாங்கிய உள்ளங்கள் மதீனா வாழ்வில் சுகம் கண்டன. பொறுத்தார் அரசாள்வார் என்பது வாழ்வியல் நியதி.

அபூதாலிப் பள்ளத்தாக்கில் காயப்படாத நெஞ்சங்கள் இருந்திருக்குமா! ஆனால் மக்கா வெற்றியின் போது கனவை சுமந்த வாரிசுகளின் இயதங்கள் பூரிப்படைந்தன. சுமையாவின் பிறப்புறுப்பில் அபூஜஹ்லின் ஈட்டி பாய்ந்த போது அன்று அது அவமானம். அதனை பொறுமையுடன் தாங்கிய பரம்பரைக்கு கிடைத்த வெகுமானம் இம்மை மறுமை வெற்றியாகும். ரத்தம் சிந்தா புரட்சி செய்து, இழந்த மண்ணை மீண்டும் வெற்றி கொண்ட நபிகளார் மக்கத்து மக்களை பழி வாங்கவில்லை. கருணை உள்ளம் கொண்டு மன்னித்தார்கள்.

நபிகளாரின் அரசியல் பணி என்பது தீர்த்துக் கட்டுவதற்கல்ல, அது சீர்திருத்தம் செய்வதற்கே. பல்லின சமூகத்தில் சச்சரவு வளர்ப்பதல்ல அவர் பணி மாறாக இணக்கம் கண்டு சமாதான வாழ்வு வாழ்வதே நபிகளாரின் அரசியல் நடைமுறையாக இருந்தது. அதனை புரியாமல் துக்ளக் நாடகத்தை பார்த்த நாம் கிளிப் பிள்ளை போல் அரசியல் ஒரு சாக்கடை என்கின்றோம். அது தான் அவமானம்.

இஸ்லாம் வேறு, அரசியல் வேறு என்ற பாகுபாட்டை துவக்கி வைத்தவன் நயவஞ்சன் கமால் அதாதுர்க் என்பவனே. அதன் படிவுகள் சில இன்னும் ஈரம் கலந்த புழுதியாய் முஸ்லிம்களின் சிந்தனைகளில் அப்பியுள்ளது. எதிரிகளின் சதிகளுக்கு மத்தியில் மீண்டும் அது சுடர் விட்டு எரிவதற்கு எத்தணிக்கிறது. அதனை பாதுகாக்கும் சிம்னியா இருப்பதுவே நமது பொறுப்பாகும்.

அரசியல் இஸ்லாத்தின் ஒரு அங்கம் என்பதை தெளிவாக புரிந்து கொள்வதே முதாலவது அதற்கு செய்யும் தொண்டாகும். நவீன இஸ்லாமிய எழுச்சியில் அது இலக்கு அல்ல, அது ஒரு வழிமுறை என்ற சிந்தனையை உள்வாங்கிப் பயணிக்கும் காலத்தில் நாம் வாழ்கின்றோம்.

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம். அது மக்கள் மனம் வென்ற ஒரு அரசியல் கொள்கையும் தான். அதில் மனிதர்களை வாழவைக்கும் உயர்ந்த அரசியல் ஒழங்கு நிலவும். சிலர் மர்க்கம் வேறு. அரிசியல் வேறு என்று அறியாமை காரணமாக பிதற்றுகின்றனர். இஸ்லாம் சிறந்த அரசியல் கலாசாரத்தை இந்த மண்ணில் அழியா தடயமாக விட்டுச் சென்றுள்ளது. முதல் பரம்பரையான ஸஹாபாக்கள் அதனை கன கச்சிதமாக நடைமுறைப் படுத்திக் காட்டினர்கள் அரசியல் சீர்கேடுகளுக்கு எதிராக போராடிய நபிமார்களின் வரலாறுகளை அல்-குர்ஆன் சிலகித்து கூறுகிறது.

இறை தூதர் முஹம்மத் (ஸல்) மரணித்த போது அவரது உற்ற தோழன் உத்தம ஸஹாபி அபூபக்கர் (ரழி) அவர்கள் ஸகீபா பனீஸஃதாவில் கம்பீராமாக எழுந்து நின்று மக்களுக்கு மத்தியில் குரல் கொடுத்தார்கள்: மக்களே! யார் முஹம்மதை வணங்கி வந்தார்களோ இதோ அந்த முஹம்மத் இறந்து விட்டார். யார் அல்லாஹ் அல்லாஹ்வை வணங்கதினர்களோ அவன் நித்திய ஜீவன், மரணிக்கவே மாட்டார். பின்னர் ஆலஇம்ரான் 144வது வசணத்தை ஒதினார்கள். பிறகு சொன்னார்கள்: முஹம்மத் அவரது வழியில் சென்று விட்டார். இனி அவர் விட்டுச் சென்றுள்ள இந்த பணியை தொடர்ந்து பரிபாலனம் செய்வதற்கு ஒரு தலைவர் தேவை. சிந்தித்துப் பாருங்கள், உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் என்றார். உடனே மக்கள் உண்மை சொன்னீர் என்று விடை பகர்ந்தார்கள். நபிகளார் ஏற்றிவைத்த அரசியல் தீபம் அபூபக்கரின் தீட்சண்ணயத்தால் சுடர்விட்டு எரிந்தது.

ஆயிரம் இருந்தும் அரசியலை சீரணிக்காத முஸ்லிம் புத்திஜீவிகளும் உடனிருக்கவே செய்கிறார்கள். காலத்தின் மாற்றத்தால் வந்த பிழையான படிவுகள் தான் ஆரம்பகால பரம்பரையின் முன்மாதிரிகளை பார்ப்பதை விட்டும் அவர்களுக்கு தடையாக உள்ளன. விந்தை என்ன வென்றால், முஸ்லிம் அல்லாத மேற்கத்தேய அறிஞர்கள் இஸ்லாம் பற்றிய முழுமையான பார்வையை மறைக்காமல் முன்வைத்திருப்பதாகும்.

எடுத்துக்காட்டாக இதோ சில சிந்தனையாளர்களின் கூற்றுக்கள்:

‘இஸ்லாம் ஒரு மார்க்கம் மட்டுமல்ல, அது ஒரு அரசியல் ஒழுங்கும் கூட’ டாக்டர் பிஸ்ட்ஜெரால்ட்

‘ முஹம்மத்; தீனுல் இஸ்லாம் என்ற மார்க்கத்தையும் இஸ்லாமிய அரசையும் ஒரே சமயத்தில் நிறுவினார். அவற்றின் எல்லைகளும் அவரது வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரியாக இருந்தன.’ பேராசிரியர் திலினோ

‘இஸ்லாம் மதம் என்ற பரப்பை விட விரிந்தது. அது சட்டம் மற்றும் அரசியல் கொள்கைகளையும் குறிக்கிறது. சுருங்கச் சொன்னால் அது ஒரு மதமும் அரசும் கொண்ட முழுமையான கலாசார ஒழுங்கு’ கலாநிதி ஜோஸப் ஸ்காட்ச்

‘இஸ்லாம் மதமும் அரசியலும் தான் என்பது தெளிவானது. அதை நிறுவியவர் ஒரு நபி. அவர் அரசியல் விவகாரங்கில் நிபுணத்துவம் உள்ள சிறந்த ஆட்சியாளர்’ பேராசிரியர் ஸ்ட்ரூட்மேன்.

‘நபிகளார் ஒரே சமயத்தில் மதத்தலைவராகவும் ஆட்சித் தலைவராகவும் காணப்பட்டார்’ தோமஸ் ஆர்னல்ட்

உண்மைகள் ஒரு போதும் மறைவதில்லை. சத்தியம் மரணிப்பதுமில்லை. நாம் புரந்து கொள்வதற்கு அவர்கள் உதவியாக இருந்துள்ளனர்.

காலத்தின் தேவைக்கு விடைபகர்வதற்காக அரசியல் களம் இறங்கியவர்கள்; கவனிக்க வேண்டிய உண்மை இதுதான். இது நீண்ட நெடுங்கால உழைப்பின் ஆரம்பம். எனவே தோல்வி, அவமனானம், காயங்கள், வலிகள் என்ற செய்திகள் தான் தொடராக வரும். அது போராட்ட வாழ்வின் சுபவாவம். யூஸுபின் கனவு நனவாவதற்கு காலம் எடுக்கும். நிலத்தை கீறாமல் உழுவதற்கு முடியாது. கீறும் போது காயப்படும் பூச்சி புழுக்கள் மடிந்த விடும். ஆனால் விச ஜந்துக்குள் கொத்தும். அது தவிர்க்க முடியாது. நிச்சியமாக விதைகள் விருட்சமாகலாம். கனி தரும் காலத்தை நம் வாரிசுகளுக்கு விட்டு விடுவோம். வாழும் காலத்தில் ஏரிகின்ற அரசியல் தீபத்திற்கு சிம்னியாக இருப்போம்.

நாட்டின் இன்றைய அரசியல் நாரிப்போயுள்ளது. மூன்றாவது சக்தியின் தேவை வெகுவாக உணரப்பட்டுள்ளது. நாம் நாட்டை பாதுகாக்கும் வேலியாக இருக்க வேண்டும். அது எமது தீன் வேண்டி நிற்கும் ஒரு கடமை என்ற உணர்வு இரத்தத்தில் ஊடுருவ வேண்டும். அந்த விழிப்புணர்வு தான் முதலாவது தேவை.

நாட்டு நடப்பு பார்க்கவே அசிங்கமாகவுள்ளது. பாராளுமன்றம் பண்பாட்டின் இல்லம். ஆனால் இன்று படிக்காத கூட்டம் போடும் கோலம் நாட்டுக்கே அவமானம். நாட்டுக்கு வெளிச்சம் வருவதற்காக சட்ட யாப்பை கீறிக் கிழிக்கும் தலைவர்கள். நீதிக்கு தூக்குத்தான் என்ற நிலை வரும் போது நியயத்தை மறைக்கும் பொறுப்புதாரிகள் வாழும் காலம்.

பாராளுமன்றத்தை திறந்து நியாயத்தை பேச இடம் தரமாட்டேன் என தலைவர் அடபம்பிடிக்கின்றார். அதனை மக்கள் சபை என்று கூறுவதற்கு வாய் கூசுகிறது. அநியாயக் கறைகளை நீக்கி கரைசேரவே மக்கள் வாக்களித்தார்கள். இன்று சர்வாதிகாரிகள் சபையேற அது துணை போய்யுள்ளது. பிடிவாதம் சாகும் மட்டும் தொடர்ந்தால் யாருக்கு லாபம்? அதிகாரப் போதை தெளியும் போது ஆள்வதற்கு மக்கள் இருப்பார்களா? என்ற சந்தேகம் எழுகிறது. ஆளும் மனதில் ஈகோ இருப்பதனாலே உறவொன்றும் வளராது. கெட்ட பின்னாலே வருகின்ற ஞானம் நாட்டுக்கு உதவாது. இது எமது தாய் நாட்டின் பரிதாப நிலை.

நாடு எங்கே செல்கிறது என்பதை என்பதை புரந்து கொண்ட நாம் பக்குவமான விழுமிய அரசியலை நோக்கி படிப்படியாக அடியெடுத்து வைப்பது தான் தார்மீகக் கடமை. கனி பறிக்கும் காலத்தை எதிர்கால பரம்பரைக்கு விட்டுவிடுவோம்.

அரசியல் வாழ்வு ஒரு போர்க்களம். அதில் சிறுபான்மை எப்போதும் பெரும்பான்மையை வெல்வது தான் உலக வரலாறு. உணர்வுகளை இழக்காமல் வீரமாக ஓடுவோம். இது ஒரு தொடர் ஓட்டம் அடுத்த பரம்பரைக்கு புண்ணகையோடு கம்பை கொடுத்து மகிழ்வோம்.

முஹம்மத் பகீஹுத்தீன்

அரசியல் சாக்கடையும் அல்ல பூக்கடையும் அல்ல அது ஒரு போர்களம். மக்கத்து மண்ணில் வலி தாங்கிய உள்ளங்கள் மதீனா வாழ்வில் சுகம் கண்டன. பொறுத்தார் அரசாள்வார் என்பது வாழ்வியல் நியதி. அபூதாலிப் பள்ளத்தாக்கில் காயப்படாத…

அரசியல் சாக்கடையும் அல்ல பூக்கடையும் அல்ல அது ஒரு போர்களம். மக்கத்து மண்ணில் வலி தாங்கிய உள்ளங்கள் மதீனா வாழ்வில் சுகம் கண்டன. பொறுத்தார் அரசாள்வார் என்பது வாழ்வியல் நியதி. அபூதாலிப் பள்ளத்தாக்கில் காயப்படாத…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *