Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நான் இந்த உலகத்தை ஆட்சி செய்துவிட்டேன் - கொரோனா 

நான் இந்த உலகத்தை ஆட்சி செய்துவிட்டேன் – கொரோனா

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

வியூகம் வெளியீட்டு மன்றம் சார்பாக சிறந்த கட்டுரையாக தெரிவு செய்யப்பட்ட மாணவர் கட்டுரைகள்.

இரண்டாயிரத்து பத்தொன்பது டிசம்பர் முப்பத்தொன்று. சீனாவில் வுகான் என்ற நகரத்தில் ஹுவனான் என்ற சந்தையில் வௌவால், பாம்பு போன்றவற்றை உணவாக விற்கும் கடையொன்று இருந்தது.  அந்தக் கடையில் ஒருவர் அந்த உணவை சாப்பிட்டுவிட்டார். அவரினுள் இருந்து தான் நான் உருவாகியிருக்கின்றேன்.

நான் அங்கிருந்த பல மக்களுக்குள் பரவி எல்லோரையும் என் இனத்திற்கு ஆக்கிவிட்டேன். என்னால் பாதிக்கப்பட்ட சில மக்கள் வைத்தியரிடம் போனார்கள். அங்கிருந்து நான் வைத்தியர்களையும் என் இனத்திற்கு ஆக்கிவிட்டேன். அங்கிருந்து தான் இந்த செய்தி விஞ்ஞானிகளுக்கு பரவியது. விஞ்ஞானிகள் என்னை பரிசோதனை செய்து பார்த்தார்கள். அங்கிருந்து தான் எனக்கு வைக்கப்பட்ட பெயர் “கொரோனா வைரஸ்”. அதற்கு இலகுவாக ஒரு பெயர் எனக்கு சூட்டப்பட்டது. அது தான் “covid 19”.

இந்த உலகில் நான் வருவதற்கு முன்பு பல வைரசுகள் பரவின. ஆனால் அதனை மனிதர்கள் இலகுவாக அழித்து விட்டனர். ஆனால் நான் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னை மனிதர்கள் விமானம், கப்பல் போன்ற வாகனங்களில் கூட்டிச் சென்றார்கள்.  அதனால் நான் இப்போது இந்த உலகத்தையே கைப்பற்றிக் கொண்டேன். “ஹா ஹா ஹா” எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது.

என்னால் மனிதர்களுக்கு எத்தனையோ தடைகள் ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றன. உலகப் புகழ் பெற்ற “ஒலிம்பிக்” விளையாட்டு என்னால் தடையாகி விட்டது. மனிதர்களின் கல்வி கற்கும் பாடசாலை தொலைக்காட்சியில் சினிமா, நாடகம் போன்றன என்னால் தடையாகி உள்ளது.

சில மனிதர்கள் அவருக்கு கொரோனா இருக்கு எனத் தெரிந்தும் அவர்கள் வெளியில் செல்கிறார்கள். நான் தொற்றக்கூடாதென்று முகக்கவசம், கைக்கவசம் போன்றவற்றை கண்டுபிடித்துள்ளனர்.

இப்பொழுது ஊரடங்கு சட்டத்தை நாடு முழுவதும் வைத்துள்ளார்கள். இதனால் மக்களுக்கு வியாபாரங்கள் நட்டமாகியுள்ளன. அதுவுமில்லாமல் உணவு பற்றாக்குறை போன்றவற்றையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

என்னால் சில மனிதர்கள் செம்ம அடிவாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால் ஊரடங்குச் சட்டம் போட்டும் வெளியே சுற்றிக் கொண்டிருப்பதால் எனக்கு உங்கள் மீது எந்தக் கோபமுமே இல்லை. என்னை அழிக்க முடியாதென்று நான் கூறமாட்டேன். என்னை அழிப்பது உங்கள் கையில் தான் உள்ளது. என்னை அழிப்பதற்கு விஞ்ஞானிகள், வைத்திரியர்கள் சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். மற்றும் வெளியே செல்லாமல் பாதுகாப்பாக உள்ளேயிருங்கள். இதனை பின்பற்றி வந்தால் என்னை அழிக்க முடியும்.

என்னை அழித்தாலும் பரவாயில்லை. ஏனென்றால் பிறக்கும் சில மனிதர்கள் ஜனாதிபதியாகி அவர்களுடைய நாட்டை ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக, படித்து முதிர்ந்து தான் நாட்டை ஆள்கிறார்கள்.

என்னை பாருங்கள்! எனக்கு ஐந்து மாதமும் ஆகவில்லை. ஆனால் நான் உருவாகி சில நாட்களிலேயே நான் இந்த உலகத்தை ஆட்சி செய்துவிட்டேன். அது எனக்கு பெருமையாக உள்ளது.

அதுபோல இந்த உலகத்தில் யாரும் செய்யாத வேலையை நான் செய்திருக்கிறேன். அது எனக்கு போதும். நான் இந் உலகத்தை விட்டுப் போக வேண்டும் என்றால் நான் முதலில் சொன்னதைப் பின்பற்றுங்கள்.

இப்படிக்கு கொரோனா!

Abdhul Muqsith Feroze
Grade:8
WP/KL/ Al-Fasiyathul Nasriya Muslim Boys School
Maradana, Beruwala

வியூகம் வெளியீட்டு மன்றம் சார்பாக சிறந்த கட்டுரையாக தெரிவு செய்யப்பட்ட மாணவர் கட்டுரைகள். இரண்டாயிரத்து பத்தொன்பது டிசம்பர் முப்பத்தொன்று. சீனாவில் வுகான் என்ற நகரத்தில் ஹுவனான் என்ற சந்தையில் வௌவால், பாம்பு போன்றவற்றை உணவாக…

வியூகம் வெளியீட்டு மன்றம் சார்பாக சிறந்த கட்டுரையாக தெரிவு செய்யப்பட்ட மாணவர் கட்டுரைகள். இரண்டாயிரத்து பத்தொன்பது டிசம்பர் முப்பத்தொன்று. சீனாவில் வுகான் என்ற நகரத்தில் ஹுவனான் என்ற சந்தையில் வௌவால், பாம்பு போன்றவற்றை உணவாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *