நான் கொரோனா வைரஸ் பேசுகிறேன்

  • 3

வியூகம் வெளியீட்டு மன்றம் சார்பாக சிறந்த கட்டுரையாக தெரிவு செய்யப்பட்ட மாணவர் கட்டுரைகள்.

எனது பெயர் கோரோனா. எனது செல்லப் பெயர் ‘கோவிட்-19’. வரலாற்றில் இதற்கு முன்னாலும் பல பேரழிவுகளை ஏற்படுத்தும் வைரஸ்கள் தோன்றியுள்ளன. ஆனால் ஒட்டுமொத்த உலகத்தையும் முடக்கிய  முதல் வைரஸ் நானே.

எனது பிறப்பிடம் சீனாவின் வூஹான் மாகாணம் ஆகும். தொலைக்காட்சியில் சினிமா, நாடகங்களில் மூழ்கியிருந்த இளைஞர் சமுதாயத்தை நாட்டு நடப்புக்களை அறியத் தூண்டியவனும் நானே. உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறேன். நித்தம் பல உயிர் பறிக்கிறேன்.

என்னைப் பார்த்து நடு நடுங்குகிறது ஒரு கூட்டம். என்னை ஆராய்கிறது ஒரு கூட்டம். உலகம் சுற்றும் வாலிபன் நான். வன விலங்கினை வீதி உலா அழைத்து வந்தேன். ஏரி, குளம், ஆறு, கடல் யாவையும் புதிய நீரூற்றிக் குளிப்பாட்டினேன்.

ஓடித்திரிந்த கால்களை ஒடுக்கி வீட்டில் முடக்கி வீட்டிற்குள் நடைப்பயிற்சி கொடுத்தேன். விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. தொழில் நுட்பம் தலை சிறந்து விளங்குகிறது. மருந்துவம் மகத்தான நிலையை அடைந்து விட்டது.

எத்தனையோ கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்கினீர்கள். ஆனாலும் என்னை அழிக்க முடியவில்லை. வறுமையைப் போக்கி வாழ்க்கையை உயர்த்துங்கள். உலகத்தின் மீது எனக்கு கோபம் இல்லை. உலகத்தையே பயமுறுத்த வந்த நான் மறைந்து போகிறேன் இவ்வுலகை விட்டு.

இப்படிக்கு
கொரோனா

Akeel Ahamed Samran
WP/KL/Al-Fasiyathul Nasriya Boys School, Maradana, Beruwala

வியூகம் வெளியீட்டு மன்றம் சார்பாக சிறந்த கட்டுரையாக தெரிவு செய்யப்பட்ட மாணவர் கட்டுரைகள். எனது பெயர் கோரோனா. எனது செல்லப் பெயர் ‘கோவிட்-19’. வரலாற்றில் இதற்கு முன்னாலும் பல பேரழிவுகளை ஏற்படுத்தும் வைரஸ்கள் தோன்றியுள்ளன.…

வியூகம் வெளியீட்டு மன்றம் சார்பாக சிறந்த கட்டுரையாக தெரிவு செய்யப்பட்ட மாணவர் கட்டுரைகள். எனது பெயர் கோரோனா. எனது செல்லப் பெயர் ‘கோவிட்-19’. வரலாற்றில் இதற்கு முன்னாலும் பல பேரழிவுகளை ஏற்படுத்தும் வைரஸ்கள் தோன்றியுள்ளன.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *