Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நித்யா... அத்தியாயம் -1 

நித்யா… அத்தியாயம் -1

  • 7

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

அவன் அவசர அவசரமாக நடந்து கொண்டிருந்தான். ”ஹாய் விக்னேஷ்…” அழகான இளம் பெண்குரல் காற்றோடு கலந்து வந்தது. அந்தக் குரலுக்குரியவளைப் பார்த்தவன்  ”நீங்க யாரு..” புருவங்களை உயர்ந்தியபடியே கேட்டான். அவளும் அவனுடன் நடந்தபடியே  ”என்ன தெரியாதா?ஐ அம் பவித்ரா….” புன்னகைத்தாள் அவள்.  ”ஆ… ஐ நோ… பட் உங்க பேஸ் தெரியாது. அதான் ஸொரி…” பல்லைக் காட்டினான் விக்னேஷ். அவனைக் கூர்ந்து பார்த்தவள் ”ஏன் இவ்ளோ அவசரமா போறீங்க? ” அவன் நடந்தபடியே ”அதுவா? கண்டி பஸ் இப்ப போகுதாம் . அது தான்”

”நானும் அதுல தான் போக போற. வாங்க போகலாம்..” பவித்ராவுடன் அவனும் பஸ் நோக்கி நடந்தான். இருவரும் அருகருகே ஆசனத்தில் அமர்ந்தனர்.  சற்று நேரம் மௌனம் நிலவியது. ”நீங்க கண்டியா?” விக்னேஷ் மௌனத்தைக் கலைத்தான். அவனை பார்த்தவள்  ”ஆமா.. அக்கா வீடு.”

”நீங்க புதிசா தானே எங்க ஒபீஸ்ல சேர்ந்தீங்க?”

”ஆமா… ரெண்டு மாசமாகுது.”

”அப்டியா? அப்போ தப்பிச்சீங்க…” என்று சொன்னவனை கேள்வியோடு நோக்கினாள் பவித்ரா.

”அது வந்து உங்க எடத்துல நித்யானு ஒரு பொண்ணு இருந்திச்சி….. அவோ வெளகிட்டா… அதுகப்றம் நீங்க…” கடைக்கண்ணால் பவித்ராவைப் பார்த்தபடி கூறினான்.

சற்று அதிர்ந்த பார்வையை மறைத்தபடி  ”யாரவ?” என்றாள்.

”அவ ரொம்ப நல்ல பொண்ணு. இப்போ அவ எங்கிருக்கா என்டு தெரியல?”

”ஆ அப்டியா… ஓபீஸ்ல சிலரு சொல்றாங்க அவ இறந்துட்டாவாம்.” கலங்கிய கண்களை யாருக்கும் தெரியாமல் துடைத்தாள். பேயரைந்தது போல முகம் மாறியது விக்னேஷீக்கு. ”அப்டியா? எனக்குத் தெரியாது”

”அப்டியா?” கண்களில் அனல் தெறிக்கும் பார்வையுடன் அவனை நோக்கினாள். அவனுக்கு வியர்வை வடியத் தொடங்கியது.  ”ஓகே…  ஏ பழய கதயெல்லாம் பேசிகிட்டு… பாருங்க ஊரு வந்திருச்சி…” என்றபடி எழுந்தான்.

‘ஏதும் தெரியாத போல நடிக்றியே… இருடா…’ மனதால் எண்ணிய படியே அவளும் பஸ் தரிப்பிடத்தில் இறங்கினாள்.

தொடரும்….
Rifdha Rifhan
SEUSL

அவன் அவசர அவசரமாக நடந்து கொண்டிருந்தான். ”ஹாய் விக்னேஷ்…” அழகான இளம் பெண்குரல் காற்றோடு கலந்து வந்தது. அந்தக் குரலுக்குரியவளைப் பார்த்தவன்  ”நீங்க யாரு..” புருவங்களை உயர்ந்தியபடியே கேட்டான். அவளும் அவனுடன் நடந்தபடியே  ”என்ன…

அவன் அவசர அவசரமாக நடந்து கொண்டிருந்தான். ”ஹாய் விக்னேஷ்…” அழகான இளம் பெண்குரல் காற்றோடு கலந்து வந்தது. அந்தக் குரலுக்குரியவளைப் பார்த்தவன்  ”நீங்க யாரு..” புருவங்களை உயர்ந்தியபடியே கேட்டான். அவளும் அவனுடன் நடந்தபடியே  ”என்ன…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *