நித்யா… அத்தியாயம் -24

  • 17

மறு நாள் காலையில்,

‘அக்கா… ஒபீஸ் போயி வாரன்.” புன்முறுவல் செய்தவளை சற்று பயத்துடன் பார்த்து,

”சரிடா… கவனம்…” மீண்டும் கல்யாணியைப் பார்த்து சிரித்துவிட்டு,

”சரிக்கா… நா போறன்.” வாசலில் கார் ஹோன் சப்தம் கேட்டு அக்கா, தங்கை இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மீண்டும் அதே சப்தம் கேட்கவும்,

”சின்னக்கா… யாரா இருக்கும்?” என்றபடியே வாசலை எட்டிப் பார்த்தாள். வந்தவனைப் பார்த்ததும் ஒருகணம் தடுமாறினாள் பவித்ரா.

”பவித்ரா… ” அவள் கால்கள் தானாகப் பின்வாங்கவும்,

”யாரது விக்னேஷா? வாங்க” கல்யாணியின்  வரவேற்பு அப்பாவித்தனமாக இருந்தது. அவனும் பதிலுக்கு புன்னகைத்துவிட்டு திகைத்தபடி நின்ற பவித்ராவை நெருங்கினான்.

”என்ன?” அவள் சட்டென கேட்டாள்.

அவளது முகபாவனையை அவதானித்தவன், அவளை விட்டு கல்யாணியின் பக்கம் திரும்பி,

”பவித்ரா கூட நா கொஞ்சம் பேச வேண்டியிருக்கு. பிளீஸ் அவள ஏகூட ஜஸ்ட் ஹாபனவர் அனுப்பி வெக்றீங்களா? ”

அவனது கேள்வியால்  பவித்ராவின் இதயம் அதிர்ச்சியால் சற்று நேரம் நின்றது. மீண்டும் அவன்,

”பிளீஸ்…” எனக் கெஞ்சிக் கேட்டதுமே

”சரி.. சரி.. பவி… போயிட்டு வா…” அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை. ஆயிரம் கற்பனைகளுடன் மௌனமாகவே இருந்தாள். அவளருகே வந்த கல்யாணி,

”போயிட்டு வாடா…” தலையை வருடியபடி கூறவும்,  ஏதும் பேசமுடியாதவளக அவனது பின்னாலேயே நடந்தாள். ஏதும் பேசாமல் அமர்ந்திருந்தவளை கடைக் கண்ணால் பார்த்து,

”என்ன பவித்ரா. பேசாம வார நீ?” அவனது குரலைக் கேட்டவள் சற்று நேரம் மௌனமாக இருந்தவள்.

”அப்படி… ஏதும் இல்லயே… ”

”அப்போ பேசு…”

”என்ன பேச? நீங்க தானே வெளிக்கு கூட்டி வந்தீங்க?” காரசாரமான அவளது பதிலைக் கேட்டவனின் உதட்டோரம் அசட்டுப் புன்னகை விரிந்தது.

”சரி… இங்க இருந்து பேசலாம். வாங்க” அந்த இடத்தைப் பார்த்தவள் சற்று அதிர்ந்தாள். அவனைத் திரும்பிப் பார்த்து,

”இங்கயா?” கேள்வியாய் வளைந்த புருவங்களைப் பார்த்தவன்

”ஆமா…..  வா.”

குரலில் சற்று சீற்றம் தெரியவுமே, அவனது முகத்தைக் கூட பார்க்க தயங்கியவள். கதவைத் திறந்து கொண்டு இறங்கினாள். நெஞ்சமோ கனத்தது.

”ஐயோ…. பெரியக்கா…” சட்டென அவள் கத்தி அழுதாள். விக்னேஷ் அவளை பேயரைந்தவன் போல பார்த்துக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் இன்னொரு கார் அங்கே வந்திறங்கியது.

தொடரும்….
Rifdha Rifhan
SEUSL

மறு நாள் காலையில், ‘அக்கா… ஒபீஸ் போயி வாரன்.” புன்முறுவல் செய்தவளை சற்று பயத்துடன் பார்த்து, ”சரிடா… கவனம்…” மீண்டும் கல்யாணியைப் பார்த்து சிரித்துவிட்டு, ”சரிக்கா… நா போறன்.” வாசலில் கார் ஹோன் சப்தம்…

மறு நாள் காலையில், ‘அக்கா… ஒபீஸ் போயி வாரன்.” புன்முறுவல் செய்தவளை சற்று பயத்துடன் பார்த்து, ”சரிடா… கவனம்…” மீண்டும் கல்யாணியைப் பார்த்து சிரித்துவிட்டு, ”சரிக்கா… நா போறன்.” வாசலில் கார் ஹோன் சப்தம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *