Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நித்யா… அத்தியாயம் -26 

நித்யா… அத்தியாயம் -26

  • 12

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

வினோத் காரை விரைவாகச் ஓட்டிக் கொண்டிருந்தான். சற்று நேரத்தில் இன்னோர் வாகனத்துடன் மோதப் போய் பவித்ரா கூச்சலிட்டாள்.

”வினோத்……”

நூலிழையில் தப்பித்து வினோத் காரைத் திருப்பினான். அவளுக்கு சர்வமும் கலங்கியப் போயிற்று. கண்களிலிருந்து அருவி கொட்டியது. மீண்டும் அதிவேகமாக ஓட்டுவதைப் பார்த்தவள் திடுக்கிட்டாள். வேகமாக அவனது கைகளை இறுகப் பற்றினாள்.

”பிளீஸ்…. ஏ இவ்ளோ பாஸ்ட்…. ”

அவன் மேலும் வேகத்தைக் கூட்டவே,

”ஐயோ…… வினோத்….. சாகப்போறோமா?”

கூச்சலிட்டவளை சட்டை செய்யாமல் சற்றுத் தூரத்தில் போய் காரை நிறுத்தி, அவன் அவசர அவசரமாக இறங்கி அவளது கையையும் இழுத்தான்.

”வா….”

பயந்து நடுங்கியவள் அவனது கோபப் பார்வையை எதிர்கொள்ளத் தயங்கியவளாய், அவனது முரட்டுப் பிடியை விடுவிக்காது போனாள். ஒரு மலையுச்சிக்குச் சென்றவன், அவளது கையை உதறி விட்டான். கண்கள் செந்தாமரையையாய் மாறியிருந்தது. பவித்ரா திகைப்புடன் அவனை நோக்கினாள். கைகளை பிசைந்து கொண்டிருந்தவன் சற்று நேரத்தில் அவளருகே வந்து ,

”ஏய்…. நீ அவன் கூட போனது எதுக்கு? முதல்ல பட்டது போதாதா…..?” கண்களை சுருக்கிக் கொண்டவன்,

”உங்கக்காவ போல நீயும் சாகப் போறியாடி?”

அந்தக் குரல், அதிலிருந்த கலக்கம், அவளது மௌனத்தை ஏதோ செய்தது. அவளருகே மீண்டும் வந்தவன். வியப்பின் உச்சிக்கே சென்றவளை பார்த்து,

”ஒனக்கே தெரியும்….. ஒன்னயும் இழக்க நா விரும்பல…. பிளீஸ் புரிஞ்சுக்க….”

அழுத்தமான அவனது பார்வை, குரலுக்குக் கட்டுப்பட்டவள் போல அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். மீண்டும் அவளருகே வந்தவனின் கண்களில் நீர், பவித்ராவுடைய மனதில் ஏதோ அழுத்தம் பிசைந்தது.

”வினோத்…. நீ….நீங்க….” அவளை மேலும் பேசவிடாமல் தடுத்தவன் ,

”உங்கக்கா….. அவ…. தங்கம்டா…” அவள் அவனை வினோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தொடரும்….
Rifdha Rifhan
SEUSL

வினோத் காரை விரைவாகச் ஓட்டிக் கொண்டிருந்தான். சற்று நேரத்தில் இன்னோர் வாகனத்துடன் மோதப் போய் பவித்ரா கூச்சலிட்டாள். ”வினோத்……” நூலிழையில் தப்பித்து வினோத் காரைத் திருப்பினான். அவளுக்கு சர்வமும் கலங்கியப் போயிற்று. கண்களிலிருந்து அருவி…

வினோத் காரை விரைவாகச் ஓட்டிக் கொண்டிருந்தான். சற்று நேரத்தில் இன்னோர் வாகனத்துடன் மோதப் போய் பவித்ரா கூச்சலிட்டாள். ”வினோத்……” நூலிழையில் தப்பித்து வினோத் காரைத் திருப்பினான். அவளுக்கு சர்வமும் கலங்கியப் போயிற்று. கண்களிலிருந்து அருவி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *