Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
குரங்கு மனசு பாகம் 36 

குரங்கு மனசு பாகம் 36

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

அன்று காலை. மகன் நாடு வரும் நாளாகையால் ஏது நடக்கப் போகுதோ என்ற பயமும் பதட்டமும் ஒருசேர, உள்ளூற யோசித்துக் கொண்டே மகனுக்குப் பிடித்த சமையல், இனிப்புப் பண்டங்கள் என எல்லாம் தயார் பண்ணினாள் வாஹிதா. எவ்வாறாயினும் “என் புள்ள வாரான்” என்ற சந்தோஷம் அவளுக்கு இல்லாமல் இருக்கவில்லை. ஆயினும் அதீகின் திடீர் வருகைக்கான திட்டங்களும் அதன் விளைவுகளும் வாஹிதாவை அவ்வளவு தூரம் நொறுங்கிப்போக வைக்குமென அவள் கனவிலும் நம்பியிருக்கவில்லை.

“சர்மி, நான் உனக்காகத் தான் வாரன், நீ என் மனைவியாவப் போறாய், நம்ம காதல் மீள் வாழப்போகுது. நாம சந்தோஷமா வாழலாம் சர்மி. உன் கஷ்டக்காலம் முடியப் போவுது. என் உம்மா எப்புடியும் சம்மதிச்சிடுவா. எனக்கு நம்பிக்க இருக்கு. எல்லாம் நிச்சயமா நல்ல படியா நடக்கும்”

நாட்டுக்கு வரும் வழி நெடுகும் தனக்குத் தானே பேசிக் கொண்டும், தன் எதிர்காலம் குறித்து கனவுக் கடலில் மூழ்கியவனாகவும், தன் காதல் வெல்லப்போகும் ஆனந்தக் களிப்பிலும், உச்சகட்ட சந்தோஷத்தில் உருகிப் போனவனாய் நாடு கண்டான் அதீக். அங்கு தன் தம்பி ஆதில் தனக்காக எயார்போர்ட் வரை வந்து காத்திருக்க, ஆதிலை தழுவி தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தியவனாய் நடப்புக்கள், சுகசெய்திகள், ஊரில் நடந்த விஷேட நிகழ்வுகள் என எல்லாம் அவன் வழியாக வாங்கிக் கொண்டு வீடு நோக்கி இருவரும் பயணமானார்கள்.

“நாநா…”

“என்னடா?”

“நான் உன்கிட்ட ஒன்னு சொல்லனும்…”

“என்னா? சொல்லேன்டா…”

“முதல்ல நீ இப்படி திடீருன்னு எதுக்குடா ரெடி ஆவி கிளம்பிட்ட?”

“அது ஒன்னுமில்லடா…”

“பொய் சொல்லாத, எனக்கு எல்லாம் தெரியும். நீ இன்னமும் உன் காதல மறக்கல்ல தானே?”

“எப்படிடா மறப்பன்? மறக்குற அளவுக்கு அவள் இல்லடா.”

“எனக்குத் தெரியும் நாநா, நான் அவங்கள சந்திச்சன். ஒருநாள் எங்கயோ போக ரெடி ஆவிட்டு வீல்கு வெய்ட் பண்ணிட்டு இருக்குறப்போ நான் அந்த இடத்தால போனன். என்னக் கண்டதும் நீ ன்னு நெனச்சிட்டா போல, கண்ணு கலங்கிப் போச்சு அவங்களுக்கு. ஆனா அந்த நேரம் இவங்க தான் நீ விரும்பின புள்ளன்னு எனக்கு சத்தியமா தெரியாது. அப்புறம் உம்மா கூட அவங்க வீடு போனப்போ தான் எல்லாம் தெரிஞ்சி கொண்டன்.”

“என்னடா சொல்ற நீ? உம்மாக் கூட சர்மி வீடு போனியா?”

“ஆமாம் நாநா. ஆனா நான் உள்ள போவல்ல. உம்மா மட்டும் தான் போனாங்க. அவங்க அந்த புள்ளய கண்டபடி திட்டிட்டு வந்துட்டாங்க நாநா.”

“எதுக்குடா? எதுக்கு திட்டினாங்க? என்ன நடந்திச்சு? ஆதில் சொல்லுடா…”

“நீ சர்மி ய இன்னமும் விரும்புறதா சொன்னதும் வந்த பிரப்லம் டா இது. உம்மா இந்த விஷயத்துல ரொம்ப கடுமையா தான் இருக்காங்க.”

“நீ சொல்லுறது உண்மையா அதீக்?”

“நான் உன்கிட்ட எதுக்கு பொய் சொல்லப் போறன். இனி சர்மி விஷயமா நமக்கு வேணாம்னா. அவங்க செட் ஆவ மாட்டாங்க.”

“ஆதில் வீல (Wheel) திருப்பு”

“ஹே எங்க போக?”

“சர்மி வீடு போடா பிளீஸ். நான் அவள பார்க்கனும்.”

“என்னடா? உனக்கு நான் சொல்லுறது சுத்தமா புரியல்லயா?”

“ஆதில் நான் சொல்லுறத மட்டும் செய் பிளீஸ்…”

“நாநா…”

“பிளீஸ் டா பிளீஸ்”

இதற்கு மேல் மூத்தவனோடு பேசி பலனளிக்காது என்பதனை உணர்ந்து கொண்ட ஆதில், ஏது நடந்து முடியப் போகுதோ என்ற பயத்துடனே சர்மியின் வீடு நோக்கி வாகனத்தை திருப்பினான் .

கதை தொடரும்
Aathifa Ashraf

அன்று காலை. மகன் நாடு வரும் நாளாகையால் ஏது நடக்கப் போகுதோ என்ற பயமும் பதட்டமும் ஒருசேர, உள்ளூற யோசித்துக் கொண்டே மகனுக்குப் பிடித்த சமையல், இனிப்புப் பண்டங்கள் என எல்லாம் தயார் பண்ணினாள்…

அன்று காலை. மகன் நாடு வரும் நாளாகையால் ஏது நடக்கப் போகுதோ என்ற பயமும் பதட்டமும் ஒருசேர, உள்ளூற யோசித்துக் கொண்டே மகனுக்குப் பிடித்த சமையல், இனிப்புப் பண்டங்கள் என எல்லாம் தயார் பண்ணினாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *