நித்யா… அத்தியாயம் -4

  • 19

அந்தக் காகித்தைப் பார்த்தவள்  ‘இதுவா… இதெப்படி இங்க வந்திச்சி….’ குழப்பத்துடன் சுற்றுமுற்றும் ஆராயத் தொடங்கினாள். ” சீ…. இதுக்கும் , இந்த எடத்துகும் என்ன சம்பந்தம்….” கதவு தட்டப்படும் ஓசை கேட்டு அவசரமாக அதை பையில் போட்டு விட்டு கதவின் பக்கமாக நடந்தாள்.

”சின்னக்கா… என்ன… தூக்கம் வரலயா?”  சிரித்தபடியே கூறியவளைப் பார்த்து

”இல்லடி… நாளேக்கி காதுகுத்துகு போகணுமே… காலேலயே போகணும்… இப்பவே தூங்கு… சரியா?” கல்யாணி  அவளது முதுகைத் தடவி விட்டு சென்றாள்.

‘இங்க நா வந்ததே முக்கியமான ஒரு காரியதுகு தா… விட மாட்டேன்.’ மனதால் எண்ணிய படியே தூங்கச் சென்றாள். அவளுக்கோ தூக்கம் வர மறுத்தது.  பழைய ஞாபகங்கள் மனதைக் குடைந்துகொண்டிருந்தன.  ‘ஐயோ… நா கண்டுபுடிச்சே தீருவேன்கா…. ‘

தொண்டைக்குள் ஏதோ அடைத்தது போலிருந்த துன்பம் கண்களின் வழியாக வழிந்தது. கைகளால் கன்னங்களைத் துடைத்த படியே உறங்கத் தொடங்கினாள்.

******************

மறு நாள் கார்த்திக்கின் பெரியப்பா வீட்டுக்கு அவர்களுடன் பயணமானாள் பவித்ரா.  ”சின்னக்கா…. ஓ பெரிய மாமா வீடு எப்படியிருக்கும்…..” என்றபடியே பேசிக் கொண்டு சென்றனர்.  வீதி அழகை ரசிக்க அவளுக்கு ஆர்வம் அதிகமாகவே இருந்தது.  மகிழ்ச்சியாகவே சென்றாள்.

சிவப்பு நிற சல்வார் கமீஸ், அதற்கு ஏற்றார் போல் எளிய அலங்காரம், மின்னும் காதணி என அழகிய தேவதை போலத் தோன்றியவளது சிரிப்பையெல்லாம் கல்யாணி கண்களாலேயே அளந்து கொண்டிருந்தாள்.  ”நீ… என்னழகு தெரியுமா? தங்கச்சே….” கன்னங்களை கிள்ளியவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஓரக்கண்ணால் பார்த்து ”சின்னக்கா…. நீ  வைக்குற ஐஸ்ல எனக்கு தலதோஷமே புடிச்சிரும்…..”

கண்களைப்  ‘பட்’  என அடித்து  ”அங்க பாரு… எடம் வந்திருச்சி போல….”

” போடி… ஓகிட்ட இன்னும் குறும்பு போகல… ”

” ஆஹ… அக்கா,தங்கச்சி சண்ட போதும்…. வீடு வந்திருச்சி….” நகையுடன்  கார்த்திக் காரை நிறுத்தினான்.

இறங்கியவள் கல்யாணியின் பின்னாலேயே அந்தப் பெரிய வீட்டினுள் நுழைந்தாள். சற்று வயதானவர் ஒருவர் வாயெல்லாம் பல்லாக  ”வாங்க… வாங்க… கார்த்தி ஒன்ன பாத்தே.. எத்துன மாசமாச்சு….”

”ஆமா… பெரியப்பா…. நல்லா இருக்கீங்களா?” பேசியக் கொண்டே உள்ளே சென்றனர். வீட்டின் உட்புறத்தைப் பார்த்தவள் அதிர்ந்து போனாள்.  ‘அந்த லெடர்ல சொல்லியிருந்த மாதிரியே டெகரேட்…. என்ன எடமிது..’

கண்களைச் சுருக்கியவள் ”அக்கா…. உங்க பெரிய மாமாக்கு பொண்ணுக இருக்காங்களா?”

” ஆமாடி…  என்னவிட ரெண்டு வரிஷம் மூப்பான ஒத்தர் இருக்காங்க.  லட்சுமி அக்கா… அவ பொண்ணுகு தா காது குத்து..”

” ம்… சரி… அவோவ பாக்கணும். வா போலாம்…” கைகளைப் பிடித்துக் கொண்டே நடக்கத் தொடங்கினாள்.  அவளது மனதில் ஆயிரமாயிரம் எண்ணஜாலங்கள் உதித்துக் கொண்டிருந்தன.

”நித்யா……” மெல்லிய குரலைக் கேட்டவர்கள் சட்டென திரும்பிப் பார்த்தனர்.  சேலை கட்டிய  உயரமான பெண்ணொருத்தி ஓடி வந்து கொண்டிருந்தாள்.

” ஐயோ… பாத்தீங்களா? இந்த சுட்டி நித்யாவ… காது குத்த டைமாகுது. அது இல்ல…”

சளித்துக் கொண்டே ஓடியவளை இம்மியளவும் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

”பவி… அதான்…. இப்ப போனாளே… அவ தா லட்சுமிகா…”

பிரமித்துப் போயிருந்தவள்

”ஆ.. அப்டியா? இப்ப பாக்க முடியாது போல வா போலாம்…”

ஏதோ இழந்த எண்ணம் அவளுள் இருந்து கொண்டேயிருந்தது. ‘இந்த லட்சுமியக்காவ கண்டு பேசவே வேணும்…  சீ…’

கல்யாணியின் பக்கமாகத் திரும்பி ”சின்னக்கா…. நீ மச்சானோட சாப்பிட போ… நா அப்றம் வாரன்…”

அளளது எண்ணத்தை  புரிந்தவள் போல மௌனமாக நகர்ந்தாள். பவித்ரா மாடியில் தனித்திருந்து தீவிரமாக யோசித்தபடியிருந்தாள்.

” ஹலோ….  நீங்க எப்டி இங்க?” கம்பீரமான குரலைக் கேட்டவள் திரும்பியதும் அதிர்ச்சியின் விளிம்புக்கே சென்றாள்.

தொடரும்….
Rifdha Rifhan
SEUSL

அந்தக் காகித்தைப் பார்த்தவள்  ‘இதுவா… இதெப்படி இங்க வந்திச்சி….’ குழப்பத்துடன் சுற்றுமுற்றும் ஆராயத் தொடங்கினாள். ” சீ…. இதுக்கும் , இந்த எடத்துகும் என்ன சம்பந்தம்….” கதவு தட்டப்படும் ஓசை கேட்டு அவசரமாக அதை…

அந்தக் காகித்தைப் பார்த்தவள்  ‘இதுவா… இதெப்படி இங்க வந்திச்சி….’ குழப்பத்துடன் சுற்றுமுற்றும் ஆராயத் தொடங்கினாள். ” சீ…. இதுக்கும் , இந்த எடத்துகும் என்ன சம்பந்தம்….” கதவு தட்டப்படும் ஓசை கேட்டு அவசரமாக அதை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *