Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நித்யா… அத்தியாயம் -7 

நித்யா… அத்தியாயம் -7

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

வந்தவன் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே,

”ஆ… கார்த்திக் அண்ணா ஒங்க கூட முக்கியமான விஷயம் பேசணும்.”

”என்ன தம்பி?  இங்க இருங்க…”  இருக்கையில் அமர்ந்து கொண்டு பேச ஆரம்பித்தவர்களைப் பார்த்து,

”நீங்க பேசிட்டிருங்க. காபி போட்டுட்டு வாரன்..” புன்முறுவலுடன் அகன்றவளை,

”ஆ… எங்க உங்க தங்கச்சி?” வினோத் திடீரென கேட்கவும் சற்றுத் திகைத்துவிட்டு,

”ஆ….அவ ரூம்ல போல…. நில்லுங்க கூப்பிடுறன்”

”பவி… பவி…” அழைத்துக் கொண்டே கதவைத் தட்டவும். கோபத்துடன்,

”அக்கா… எனக்கு தல வலிக்குது… பிளீஸ் தனியா விடு…”  ‘பட்’ என்ற ஓசை கேட்க கதவைச் சாத்திக் கொண்டாள்.

”இவளுக்கென்னாச்சு..”  முணுமுணுத்துக் கொண்டே பின்னறையை நோக்கி நடந்தாள்.

‘இவன் ஏ இங்க வந்திருக்கான்…. சீ… எல்லாருமே ஒன்டு தா போல…’ தலையைப் பிடித்துக் கொண்டே யோசனையில் மூழ்கியவளின் செல்போன் ஒலித்தது.

‘யாரு? புது நம்பர்’

”ஹலோ… யாரு?”

”என்ன மறந்துட்டியா பவித்ரா?” பெண் குரலொன்று கேட்கவே யோசித்துக் முடியுமுன்பே,

”நா லட்சுமி…. மறந்துட்டியா?”

”ஆ… நீங்களா? ஸொரி…” சிரித்துக் கொண்டே கூறியவளை அடுத்து பேசியவள்.

”பவித்ரா.. ஒன்ன மீட் பண்ணனும். நாளேக்கி ஒபீஸ் போவ தானே… அப்டியே நா நிக்குறன்… ஓகே யா?”

”ஆ… சரி… நா வாரன்…”

கதவு தட்டப்படும் ஓசை கேட்டதும் ”அக்கா… அப்றம் பேசுறன்.” கதவருகே கல்யாணி கோபத்துடன் நின்றுகொண்டிருந்தாள்.

”அக்கா. .. என்ன ஓ கன்னமெல்லாம் இப்படி செவந்திருக்கு…” கண்ணடித்தவளின் கைகளைப் பிடித்தவள்.

”இங்க பாரு பவி… நம்ம வீட்டுகு யாரு வந்திருக்றது பாரு… வினோத் தம்பி… அவன் ஒன்ன கேட்டான்.. பிளீஸ்டீ… எனக்காக போய் பேசு….”

கெஞ்சுகையில் அவளின் மனம் இளகியது.

”சரி… பேசுறன்… வா…”

பவித்ரா முன்னே நடக்க கல்யாணி பின்னே நடந்தாள். முன் வாசலுக்கு வந்ததுமே ”ஹாய்…”

வினோத் கைகளைக் காட்டி அவளை வரவேற்ற விதம் பிடிபடவே மெல்லிய புன்னகை உதட்டோரம் விரிய  ”ஹாய்…”  என்றவளை கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருந்தவனின் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன. ”அதே சிரிப்பு… அதே கண்கள்.”

”ஹேய்… என்ன கற்பனைக்கோட்டையா?” அவனுக்கு நேரே கை காட்டிச் சிரித்தான் கார்த்திக்.

”போதும்…போதும்..என்ன நீங்க? ”கல்யாணியின் அதட்டலால் அடங்கி ”தம்பி… இவ…” பவித்ராவின் பக்கம் கை காட்டியதும்,

”தெரியும்…” பெருமூச்சு விட்டபடி விரக்தியாகப் பேசவும் பவித்ரா நிமிர்ந்து அவனை நோட்டமிட்டாள். ‘ஓ… இந்த கண்கள்ல பொய்யில்லே… ஏதோ சோகம் என்னது?’ அவளின் உள்மனதோரத்தில் வலிப்பது போல் உணரவே ‘என்ன எனக்காச்சு’  அவளையே கேட்டபடி அமைதியாக உளப் போராட்டமே நடத்திக் கொண்டிருந்தாள். அவளை நோக்கியவன் ”பவித்ரா…ஒங்க கூட கொஞ்சம் பேசணும்… வெளிய போகலாமா?”

அதிர்ச்சியுடன் அவனை ஏறெடுத்துப் பார்க்கவுமே

”ஆ… போங்க.. போங்க… என்ன பவி…” கார்த்திக் சொல்லவும். தீயில் விழுந்த விட்டில் போல தட்டுத் தடுமாறினாள்.

”அவ பேசாமிருக்கா… அது சம்மதம்தானே…”

அவன் மீண்டும் கார்த்திக்கிடம் கேட்டுக் கொண்டிருக்கவும் பவித்ராவுக்கோ ஏது பேசுவதென்று தெரியா நிலை.

”பவி.. அவசரமா டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா…” அக்காவின் கடினமான வார்த்தைகளில்

”சின்னக்கா ..” எனப் பேசப் போனவளை

”பிளீஸ்… போ…” தள்ளி விட்டாள்.

சிறிது நேரத்தில் பவித்ரா வினோத்தினது காரில் இருந்தாள். அது வீட்டை விட்டு வெகு தூரம் நகர்ந்துவிட்டிருந்தது. ஆனால் மௌனம் நிலையானது.

தொடரும்….
Rifdha Rifhan
SEUSL

வந்தவன் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே, ”ஆ… கார்த்திக் அண்ணா ஒங்க கூட முக்கியமான விஷயம் பேசணும்.” ”என்ன தம்பி?  இங்க இருங்க…”  இருக்கையில் அமர்ந்து கொண்டு பேச ஆரம்பித்தவர்களைப் பார்த்து, ”நீங்க பேசிட்டிருங்க. காபி…

வந்தவன் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே, ”ஆ… கார்த்திக் அண்ணா ஒங்க கூட முக்கியமான விஷயம் பேசணும்.” ”என்ன தம்பி?  இங்க இருங்க…”  இருக்கையில் அமர்ந்து கொண்டு பேச ஆரம்பித்தவர்களைப் பார்த்து, ”நீங்க பேசிட்டிருங்க. காபி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *