நித்யா… அத்தியாயம் -8

  • 7

”என்ன பேச்சயே காணம்? ”

மௌனம் பிடிக்காததாலோ என்னமோ அவனே முதலில் பேச ஆரம்பித்தான். ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தவள்,

”நீங்க தானே பேசணும்னு கூட்டி வந்தீங்க, நா என்ன பேசுறது?”  குரலில்  கோபம் கலந்திருப்பதை அவதானித்தவன் புன்முறுவலுடன்,

”நீங்களெல்லாம் பேசுறதே வேற லெவல் தா…” புருவத்தைச் சுருக்கி அவனைப் பார்த்த பார்வையில் மீண்டும் நகைத்து,

”அம்மா…. ஏ இப்ப அப்டி பாக்குற.. ஜஸ்ட் ஜோக்….”

” ஜோக் எங்றதுகும் லிமிட் இருக்கு மிஸ்டர்….” திரும்பி அவளைப் பார்த்தவன் ஏதோ யோசித்து விட்டு

”அக்கா கொணம் அப்டியே இருக்கு….” குரலில் இறக்கம் தெரியவும்

”மிஸ்டர் நீங்க என்ன பேசுறீங்கனு புரியல?” குழப்பத்துடன் கேட்டவளை  பாராமலே,

”ம்.. ஒன் மினிட். இப்ப எல்லாதெயும் புரிஞ்சுப்ப…”

காரை வேகமாகச் செலுத்தியவன் மலைப் பகுதியில் நிறுத்தினான்.

”பவித்ரா… இறங்கி வா…”

உள்ளுக்குள் நெஞ்சு படபடக்க  அவனருகே அம் மலையுச்சிக்குச் சென்றாள்.  குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தாலும் அவலுடல் வேர்த்தது.

”என்ன… அங்கயே நின்னுட்ட? வா…”

கைகளைப் பிடித்துக் கொண்டவன் மலையுச்சிக்கே சென்று பெரு மூச்சு விட்டான். அவளின் நிலையோ பரிதாபகரமாக இருந்தது. ஏதோ வலையில் மாட்டிப்பட்ட மீனைப் போல துடித்தாள். அவளது நிலையறிந்தவன் போல கைகளை விடுவித்துக் கொண்டவன்.

”பவித்ரா… இது என்ன இடம்னு ஒனக்கு தெரியாதுல்ல….” மீண்டும் பெரு மூச்சு விட்டவன் சற்று நேரத்தில் அம் மலையில் அமர்ந்த படி  ”தெரியுமா பவித்ரா?  இந்த எடத்துல தா ஒங்கக்காவ முதல் தடவயா பாத்ததே…”

கூறியவனின் குரல் கரகரத்தது. சட்டென அவனை நோக்கியவள் அதிர்ந்தாள்.

‘ஓ… இவன் அழுவுறானே?’

அவளின் நெஞ்சில் ஆயிரம் இடி இறங்குவது போல் உணர்ந்தாள். மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தவளை நோக்கி,

”நானும் ஒங்கக்காவும் எவ்ளோ ஆழமா….”  கையுதரியவன் மீண்டும் ”சீ…. எல்லாம் போச்சு…. ஆனா ஒன்னு சொல்லுவேன் பவித்ரா.  அவ போல பொண்ண நா… நா… பாத்ததே….” வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கி வரமறுத்தன.

”ஐயோ…. அண்ணா… அழாதீங்க? ”  அவளது குரலும் உடைந்து போயிற்று. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

”ஆமா… நீங்க சொல்றது கரெக்ட் தா… அவ போல யாருமில்ல இந்துலகத்துல… பாதிலயே எங்கள விட்டு போய்டாவே…” கதறியளுதவளின் கைகளை அழுத்தி விட்டு

”நீ அழாத… நா இப்போ அத பத்தி தா தேடிட்டிருக்கன்….சீக்ரம் கண்டு புடிச்சிடலாம்…” ஆச்சரியம் மிக அவனை நோக்கி  ”ஸொரி…. ஒங்கள பத்தி தப்பா யோசிச்சி கொண்டிருந்ததுகு.”

”ஐயோ…. அத விடு . இப்போ ஆக வேண்டிய காரியங்கள தா பாக்கணும்.  இன்னொரு விசயம்.  நா ஓகிட்ட இப்படி பேசின என்டத விக்னேஷ் கிட்ட சொல்லிடாத…’

எச்சரிக்கும் விதத்தில் சொல்லவும் நிமிர்ந்து அவனைப் பார்த்து  ”அப்போ.. உங்களுக்கும்….”

”ஹாய்…. ” என்ற குரல் தடுத்தது.

தொடரும்….
Rifdha Rifhan
SEUSL

”என்ன பேச்சயே காணம்? ” மௌனம் பிடிக்காததாலோ என்னமோ அவனே முதலில் பேச ஆரம்பித்தான். ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தவள், ”நீங்க தானே பேசணும்னு கூட்டி வந்தீங்க, நா என்ன பேசுறது?”  குரலில்  கோபம் கலந்திருப்பதை…

”என்ன பேச்சயே காணம்? ” மௌனம் பிடிக்காததாலோ என்னமோ அவனே முதலில் பேச ஆரம்பித்தான். ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தவள், ”நீங்க தானே பேசணும்னு கூட்டி வந்தீங்க, நா என்ன பேசுறது?”  குரலில்  கோபம் கலந்திருப்பதை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *