Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
குரங்கு மனசு பாகம் 09 

குரங்கு மனசு பாகம் 09

  • 6

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

அழகுமாலை செம்மஞ்சளாய் உடைமாற்றும் அந்திநேரத்திலே, வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்த சர்மியை அணுகிய தாய்,

“என்ன புள்ள. இப்போ கொஞ்சநாளா நீ சரியே இல்ல, சொட்டு சிரிப்பு கூட இல்ல, என்னடா என்ன பிரப்லம் உனக்கு”

“அப்படி எதுவும் இல்லம்மா,அப்போ?”

“உம்மா..”

“என்னம்மா..?”

“அதுவந்து. அல்ஹம்துலில்லாஹ்னு எக்ஸேம் முடிஞ்சிட்டு தானேமா? இப்போ என்ன ஒரு மதரஸால (மார்க்கக் கல்வி பயிலும் இடம்) சேர்த்து விடுவீங்களா? பிளீஸ்மா..”

“ஹஹ் உங்க வாப்பாட ஆசயே இதுதானே? ஆனா நீ படிக்குற புள்ளயேன்னு தான் பேசாம விட்டன். உனக்கு இது தான் விருப்பம்னா நாங்க எப்பவோ ஓகேமா!”

“ஆஹ் அப்போ சரி, நான் போயிட்றன்மா. எனக்கு அது தான் நல்லதா தோனுது.”

“இந்த வீட்டுல என் புள்ள இஷ்டப்பட்டு கேக்குறது எல்லாம் நாங்க செஞ்சி வைப்போம்” தாயின் மார்பில் சாய்ந்திருந்த மகளை இருக அணைத்துக் கொண்டே வாய்விட்டுச் சொன்னாள் தாய் ராபியா. ஆனால் பிற்காலத்தில் இந்த வார்த்தை தனக்கு எமனாக உதிக்குமென்று அந்தத்தாய் அன்று அறிந்திருக்கவில்லை.

நாட்களின் நகர்வில் தன் விருப்பப்படி ஓர் பிரபல்யமான மார்க்கக் கல்லூரியில் சேர்க்கப்படாள் சர்மி, பிற்பாடு தான் எதிர்பாரா அசம்பாவிதங்கள் அவளின் வாழ்வில் எட்டிப் பார்த்தன. ஆம் தான் யாரை மறக்க வேண்டும் என்பதற்காக சர்மி தன் இருப்பிடத்தை விட்டே பிரியாவிடை பெற்றாளோ, அவன் மீள் தன் வாழ்க்கைக்குள் வருவான் என்று அவள் கனவிலும் நம்பவில்லை.

*********************

இங்கு தனக்கொறே பிள்ளையான சர்மி பிரிந்து போக, வீடே சோர்ந்து போன நிலையில் ஏதோ சோற்றுக்கு இரண்டு கறிகள் என்று சமைத்துக் கொண்டிருந்த ராபியாவுக்கு, முன்வாசலில் யாரோ அழைப்பது போல் இருந்தது.

“ஆஹ் யாரு?”

முந்தானையால் உடலை மூடிக் கொண்டவள், கைகளை துடைத்துக் கொண்டு முன்ஹோலுக்கு விரைந்தாள்..

“யாரு?”

“ஆஹ் நான் தான். உங்க புள்ளயோட ஆட்டோ டிரைவர் கதவ திறக்க முடியுமா?”

“இவன் எதுக்கு இந்த நேரம்?” வாயால் முனுமுனுத்துக் கொண்டே கதவை திறந்து உள்ளே அழைத்தாள் ராபியா.

“ஆஹ் வாங்க..வாங்க”

நிறைந்த புன்னகையோடு உள்ளே வந்த சர்மியின் ஆட்டோ டிரைவர் கண்களால் சர்மியைத் தேட, விடயத்தை ஊகித்துக் கொண்ட ராபியா

“புள்ள இல்ல”

“ஓஹ் எங்கயாலும் பிரன்ட்ஸ் வீட்டுக்கு போயிருக்கா?”

“இல்ல அவவ இப்போ மத்ரஸால சேர்த்திருக்கு.”

“அது எப்ப?” அவன் ஆச்சரியத்தோடு வினவ,

“இப்போ ஒரு மாசம் ஆகுது தம்பி. புள்ள விருப்பப்பட்டு கேட்டாங்க.. அதுதான்.”

“அப்புடியா? ஹ்ம்ம் பரவாயில்ல.. உங்க கூட கொஞ்சம் பேச முடியுமா ஆன்ட்டீ?”

“என்னா சொல்லுங்க தம்பீ..”

“என்னோட பெயர் அதீக்” என்று துவங்கி சர்மியைக் கண்டநாள் தொட்டு, உறவு முறிந்து போனதற்கான காரணம் வரை சொல்லி முடித்தவன், “இப்போ அவ என்ன விட்டு போனதும் ரொம்ப கஷ்டமா பீல் பன்றன். எனக்கு உங்க மகள் வேணும் ஆன்ட்டீ”

அதீக் தன்பாட்டில் சொல்லிக் கொண்டே போக, எல்லாம் வாங்கிக் கொண்ட அத் தாயின் முகம் சிவந்து போனது. அவளால் இவன் கருத்துகள் எதையும் ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கவே

“உனக்கு என்ன தைரியம் இருந்தா வீட்டுக்கு வந்து இப்படி சொல்லுவ?” என்பது போல் கோவ வெறியோடு அதீகை நோக்கினாள்.

கதை தொடரும்…
Aathifa Ashra

அழகுமாலை செம்மஞ்சளாய் உடைமாற்றும் அந்திநேரத்திலே, வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்த சர்மியை அணுகிய தாய், “என்ன புள்ள. இப்போ கொஞ்சநாளா நீ சரியே இல்ல, சொட்டு சிரிப்பு கூட இல்ல, என்னடா…

அழகுமாலை செம்மஞ்சளாய் உடைமாற்றும் அந்திநேரத்திலே, வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்த சர்மியை அணுகிய தாய், “என்ன புள்ள. இப்போ கொஞ்சநாளா நீ சரியே இல்ல, சொட்டு சிரிப்பு கூட இல்ல, என்னடா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *