Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நிலையான அபிவிருத்திக்கான அரசியலை நோக்கி 

நிலையான அபிவிருத்திக்கான அரசியலை நோக்கி

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இலங்கை அரசியலானது சுதந்திரத்திற்கு பின்னர் கட்சி அரசியலை மேற்கொண்டு வந்தாலும் அரசியலில் தேசிய மொழியை தீர்மானிப்பதில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக பெரும்பான்மையினர் கட்சி அரசியலில் ஈடுபட்டாலும் சிறுபான்மை இனமக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் இனம்சார்ந்த கட்சி அரசியலை மேற்கொண்டனர்.

அந்த வளர்ச்சியில் இலங்கையில் இடம்பெற்ற 30 வருட பயங்கரவாத யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதி அபிவிருத்தி அரசியலை பேசவேண்டிய மிக முக்கியமான ஓர் காலப்பகுதியாகும். ஆனால் அந்தக் காலப்பகுதியிலும் சிறுபான்மை இனமொன்றுக்கு எதிராக எழுதப்படாத யுத்தமொன்றை ஊடகம், நேரடி தாக்குதல் மூலம் தொடுத்தது.

இதில் பொறுமையாக இருந்த சமுகத்தின் ஒரு சாரார் இலங்கையின் இனவாத பிரிவில் குளிர்காய்ந்து தமக்கான ஆயுத வியாபாரதளமாக இலங்கையை மாற்ற முற்படுகின்ற வெளிநாட்டு சக்திகளின் கட்டளைக்கேற்ப குண்டுத்தாக்குதல் மேற்கொண்டனர். இங்கு மேலும் ஓர்படி உச்சத்தை அடைந்த இனவாத அரசியல் அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரத அரசியாலால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்று பட வைத்துவிட்டது.

காலத்திற்​கேற்ப இது பொருத்தமான நடவடிக்கை அதாவது இன்று மட்டுமல்ல என்றும் தம் சமூகத்திற்கு பிரச்சினை என்றால் கட்சிவாதத்தை விட்டுவிட்டு ஒன்றினைய வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இந்த ஒன்றினைவுக்கு பின்னர் முஸ்லிம் சமுகத்திற்குள் பரவிய ஓர் கருத்தே அடுத்த பொதுத்தேர்தலில் நாடாளாவிய ரீதியில் முஸ்லிம்கள் ஒரே கட்சியின் போட்டியிட வேண்டுமென்பதாகும். இதனால் முஸ்லிம்களின் உறுப்பினர் எண்ணிக்கையை 32 ஆக அதிகரிக்கலாம் என்ற கருத்தொன்றை சமூகவலைத்தளங்களில் காண முடிந்தது. இது அரசியலை ஒரு பக்கம் சார்ந்த பார்த்ததன் விளைவாகும்.

இந்த நல்லாட்சி அரசியலை இலங்கையின் சிறுபான்மை மக்கள்தான் உருவாக்கினார்கள் என்ற கருத்தும் உள்ளதால் இன்று அல்ல என்றும் இலங்கையின் அரசியலை தீர்மானிக்கும் சக்தி சிறுபான்மையினர் என்ற மாயை உருவாகியுள்ளது.

இவை மறுபுறம் கட்சி அரசியலை மாத்திரம் மேற்கொண்ட பெரும்பான்மையினரிடமும் இனவாத சிந்தனையை தூண்டியுள்ளது. இதனால் பெரும்பான்மையின அரசியல்வாதிகளும் கட்சி சார்ந்து பேசாமல் தன் இனம்சார்ந்து பேசத்துவங்கியுள்ளனர்.

அதிலும் குறிப்பாக உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மொட்டு சின்னத்துடன் களமிறங்கியோரின் செயற்பாடுகள் பெரும்பான்மை மக்களின் நலன் சார்ந்தாக உள்ளதையும் அதற்காக சில ஊடகங்கள் களத்தில் செயற்படுவதையும் அவதானிக்கலாம். அவர்களின் திடீர் வெற்றியில் செல்வாக்கு செலுத்திய காரணியும் இனவாத அரசியல்தான்.

இவ்வாறான நிலமை சமூகத்தில் ஊடுறுவினால் ஏற்படவுள்ள விளைவு என்னவென்பதை அடுத்ததாக அவதானிப்போம்.

இலங்கை சனத்தொகை கட்டமைப்பு பௌத்த சிங்களவர்கள்: 70%, தமிழ் இந்துக்கள்: 15%, சோனக முஸ்லிம்கள்: 10%, ஏனையோர்: 5% என அண்ணளவாக உள்ளனர். இவர்கள் அனைவரும் தத்தமது இனத்திற்காக பேசுவோருக்கு வாக்களிப்போம் என தீர்மானித்தால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பௌத்த பேரினவாதம் பேசும் கட்சி அல்லது கட்சி உறுப்பினர் 65-70%  வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவாகலாம்.

எனவே அடுத்த 5 வருடத்தில் இலங்கை சிறுபான்மை இனத்தின் இருப்பு எவ்வாறு அமையும் என்பதை காலம்தான் பதில் சொல்லும். இந்நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினர் ஆதரவளித்த கட்சிதான் வெற்றி பெற்றனர் என எண்ணுவீர்கள் இதற்கான பிரதான காரணம் 70% ஆகவுள்ள பௌத்த வாக்காளர்கள் பிளவுபட்டு பிரதான மூன்று கட்சிக்கு வாக்களித்தனர் இதனால் பெரும்பாலும் 30-35% வாக்குகளை பெரும் ஓர்கட்சி தன் ஜனாதிபதி இலக்கை அடைய சிறுபான்மை கட்சிகளுடன் பேரம்பேச வேண்டியெற்பட்டது.

எனவே இலங்கையை பொறுத்தவரையில் தற்போதைய நிலையில் சிறுபான்மையினரை மாத்திரம் பிரதி நிதிப் படுத்தும் கட்சிகள் மாத்திரம் ஒன்றினைவது பொறுத்தமாகும் அதுவும் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையான வாழும் மாவட்டங்களில் மாத்திரம். அதற்காக பெரும்பான்மை மக்களின் கட்சி வேட்பாளர்கள் அதிலிருந்து உறுப்புரிமையை நீக்கி முஸ்லிம் கூட்டணி என்ற பெயரில் தனியாக போட்டியிட முனைந்திட வேண்டாம்.

அதாவது இலங்கை அரசியலை பொறுத்தவரையில் தேர்தலென்றால் முஸ்லிம்கள் பிரிந்து போட்டியிட வேண்டும். பிரச்சினையென்றால் ஒன்றினைந்து தீர்மானமெடுக்க வேண்டும் என்ற அரசியல் கோட்பாட்டில் செயற்பட வேண்டும்.

இலங்கையின் இனவாதம் தற்போது எந்தளவு வளர்ந்துள்தென்றால் மரங்களையும் இனரீதியாக பார்க்க முற்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண வெப்ப காலநிலைக்கு ஏற்ப நிலக்கீழ் தண்ணீரை உறிஞ்சி வளர்கின்ற ஓர் மரமே ஈச்சம்பழ மரமாகும். அதனையும் சவுதி அரேபியா நாட்டில் வளர்கின்ற பேரீச்சம்பழ மரமென்று அறிமுகப்படுத்தி அவற்றை பிடுங்கி எறிய வேண்டும் என்கின்றனர். இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் அரசு மரங்களை வளர்க்க வேண்டும் என்கிறது. மறுபுறம் பேரினவாத அரசியல் கிழக்கில் நாட்டியுள்ள மரங்களை பிடுங்க வேண்டுமென்கிறது.

அடுத்ததாக புலிப் பயங்கரவாத தாக்குதலின் போது இரவோடிரவாக வெளியேறிய மக்கள் மீண்டும் தமது பூர்வீக இடத்தில் குடியேற முற்பட்ட போது அதனை காடழிப்பு என்கின்றனர். ஆனால் வெளிநாட்டிலிருந்து வருகின்ற சுற்றுலா பயணிகளுக்கு தங்க சிங்கராஜா காட்டையும் அழித்து விடுதி அமைக்கின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்நிலைக்கான காரணம் அரசியல்வாதிகள் தற்போது இலங்கையின் அபிவிருத்திக்காக எதனையும் செய்யவில்லை. இதனை மறைத்து தங்கள் வாக்கு வங்கியை இழக்காமல் இருப்பதற்காக இனவாதம் பேசி காலங் கடத்துகின்றனர்.

இந்நிலையில் இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கு அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை அவதானிப்போம்.

நாங்கள் பாடசாலையில் கற்ற விடயம்தான் இலங்கை ஓர் இயற்கை வளமுள்ள விவசாய நாடு, மன்னராட்சி காலத்தில் நீர்பாசன துறையில் முன்னேறிய ஓர் நாடு, சிறந்த காலசாரத்தை கொண்ட நாடு என்பனவாகும்.

தற்போதைய இலங்கை நிலவரம் மத்திய வங்கி அறிக்கையின் படி இலங்கையின் விவசாய உற்பத்தி 7-15% குள்தான் காணப்படுகின்றது. இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற உருளைக்கிழங்கின் சந்தை விலையை விட குறைந்த விலையில் இந்தியாவின் உருளைக்கிழங்கை கொள்வனவு செய்கின்றோம். மேலும் இலங்கையின் கல்வித்துறை உயர்தரத்தில் கலை, வர்த்தகம், உயிரியல், பௌதீகவியல், தொழில்நுட்பவியல் என பிரித்தாலும் பெரும்பாலான தொழில்கள் சேவை துறை சார்ந்தே காணப்படுகிறது. இலங்கையை பொறுத்தவரையில் இயற்கை சமநிலையை பேணவேண்டுமெனின் தற்போது விவசாயதுறைக்கே முதலிடம் வழங்க வேண்டும். அது தற்போது மானியமாக வழங்கும் உரம், வங்கிக்கடன் என்பவற்றை தாண்டி விவசாயிக்கான சமூக அந்தஸ்து, உள்நாட்டு உற்பத்திக்கான சந்தைவாய்ப்பு என விரிவடைய வேண்டும்.

எளிமையாக உள்நாட்டு உருளைக்கிழங்கின் விலை அதிகம் எனவே அனைவரும் இந்தியாவின் கிழங்கை கொள்வனவு செய்கின்றனர். இதனை நிவர்த்தி செய்து உள்நாட்டு உற்பத்தியாளனுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தவும், வெளிநாட்டு இறக்குமதியை கட்டுப்படுத்தவும் வெளிநாட்டு உற்பத்திக்கு இறக்குமதி வரியை விதித்து விலையை அதிகரிக்க வேண்டும்.

மன்னராட்சி காலத்தில் உலகின் தலை சிறந்த நீர்பாசானத்துறை நிபுணர்கள் வாழ்ந்த இலங்கையில் இன்று தொடர்ந்து இரண்டு மாதம் மழை பெய்தால் வெள்ளத்தில் மூழ்கி, மறுபுறம் தொடர்ந்து இரண்டு மாதம் வெப்ப காலநிலை தொடர்ந்தால் நீரின்றி தடுமாறுவதை அவதானிக்கலாம்.

இந்நிலமை மாறி உள்நாட்டு நன்னீர் மீன்பிடி தொழில் என்பவற்றை விருத்தி செய்து, வருடத்தின் அனைத்து காலங்களிலும் நீரின் சமநிலையை பேணும் விதமாக குளங்களை புணரமைப்பதுடன் புதிய குளங்களை உருவாக்கவும் வேண்டும்.

உலகிற்கு இஸ்லாமிய ஆடை கலாசார்த்திற்கு ஒப்பான சிறந்த ஆடைக்கலாசாரம் உள்ளதென்றால் அது பௌத்த ஆடைக்கலாசாரம், ஆனால் இன்று அதனை விட்டுவிட்டு மேற்கத்திய கலாசாரத்தை நோக்கி அவர்கள் நகர்ந்த வண்ணமுள்ளனர். இது ஆடையில் மாத்திரமல்ல மதுபானம், உல்லாச வாழ்க்கை, விபச்சாரம் என பரிணமித்துள்ளது. இலங்கையின் தற்போதுள்ள ஒரு பௌத்த குடும்பத்தில் பிள்ளை பெறும் வீதம் குறைந்தமைக்கான பிரதான காரணம் மேற்கத்திய கலாசார மோகமாகும். (இது பற்றிய தெளிவை தனியாக அடுத்தடுத்த சந்திப்பில் வழங்குவோம்)

உலக நாட்டிற்கு கலாசாரத்தை ஏற்றுமதி செய்ய வேண்டிய இலங்கையர்கள் வெளிநாட்டில் இருந்து கலாசாரத்தை இறக்குமதி செய்து படுபாதளத்தை நோக்கி செல்கின்றனர்.

இவ்வாறு இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கு விவசாயம், நீர்பாசனம், கலாசாரம் என பல துறையில் பல சேவைகள் செய்து நிலையான அபிவிருத்தியை இலங்கையில் ஏற்படுத்த வேண்டியுள்ளோம்.

எனவே இனமதம் பேசுவோரை விட்டுவிட்டு இலங்கையின் மேற்படி நிலையான அபிவிருத்தி பேசும் ஒருவரை தலைவராக தேர்ந்தேடுப்போம். ஊடகங்களே அதற்கான அளுத்தம் கொடுக்கவும், பொது மக்களே! இனியும் கட்சி இனமென பாராமல் நிலையான அபிவிருத்திக்கு செயலாற்றும் ஆளுமையொன்றை ஜனாதிபதியாக தெரிவு செய்வோம்

Ibnuasad

இலங்கை அரசியலானது சுதந்திரத்திற்கு பின்னர் கட்சி அரசியலை மேற்கொண்டு வந்தாலும் அரசியலில் தேசிய மொழியை தீர்மானிப்பதில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக பெரும்பான்மையினர் கட்சி அரசியலில் ஈடுபட்டாலும் சிறுபான்மை இனமக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில்…

இலங்கை அரசியலானது சுதந்திரத்திற்கு பின்னர் கட்சி அரசியலை மேற்கொண்டு வந்தாலும் அரசியலில் தேசிய மொழியை தீர்மானிப்பதில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக பெரும்பான்மையினர் கட்சி அரசியலில் ஈடுபட்டாலும் சிறுபான்மை இனமக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *