Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஜமாத்துகள் வேண்டாம் முஸ்லிமாக மாத்திரம் வாழ்வோம். 

ஜமாத்துகள் வேண்டாம் முஸ்லிமாக மாத்திரம் வாழ்வோம்.

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

முஸ்லிம்களுக்கு எதிராக பொதுமக்களை திசை திருப்ப மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. மைத்திரி, மஹிந்த, ரணில் உட்பட அனைத்து அரசியல்வாதிகளாலும் தேர்தலை இலக்காக கொண்டு ஆரம்பகட்ட பரிசோதனையாக மேற்கொள்ளப்பட்ட, 07.07.2019 அன்று பொதுபல சேனாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமும் தோல்வியில் முடிவடைந்தது. இது மிகப்பெரும் திருப்பமாகும் இல்லாவிடின் தேர்தல் வரை முஸ்லிம்களின் மீதான வெறுப்பு பிரச்சாரம் அதிகரித்தவண்ணமிருக்கும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை பொது மக்களும் மாறிவிட்டார்கள். BBS இன் ஆதரவாளர்கள், பௌத்த மதகுருமார், தொழிலாளிகள், சந்தைப்படுத்துவோர், சாரதிகள் போன்றோர் அக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இனம் மற்றும் மதம் அடிப்படையில் இலங்கையை பிளவுபடுத்துவதை நிறுத்து

என்ற செய்தியை சிங்களவர்கள் தெளிவாக முன்வைத்துள்ளனர். அவ்வாறே முஸ்லிம்களாகிய நாம் ஒன்று பட்டு முன்னேற தயாராக வேண்டும். மேலும் எம்மை ஜமாத் அடிப்படையிலும் பள்ளிவாசல்கள் அடிப்படையிலும் பிரிப்பதற்கு எவருக்கும் அனுமதிக்க கூடாது. ஏனெனில் பிளவுபட்ட சமூகத்தை அடக்கி ஒடுக்குவது  இலகுவாகும். எனவே நாம் முஸ்லிம்களாக மாற வேண்டும். ஜமாஅத், பள்ளிவாசல்கள் என பிரியாமல், பள்ளிவாசல்கள் அனைத்து முஸ்லிம்களுக்குமென இருக்க வேண்டும். எமது பொது செயற்பாடுகளை முஸ்லிம்கள் என்ற பெயரில் செய்ய வேண்டும்.

07.07.2019 அன்று இடம்பெற்ற கூட்டத்தில் ஞானசார தேரர் அவர்கள் குறிப்பிடும் போது, 7000   பன்சலைகளிலுமுள்ள பிரிவினைகளை மறந்து 1000 வாக்குகள் வீதம் கொண்டுவந்தால் 7 000, 000 வாக்குகள் கிடைக்கும். இதனூடாக உண்மையான சிங்கள தலைவரை கொண்டுவரமுடியும் என ஓர் உண்மையை முன்வைக்கிறார். அதுதான் அவர்களுக்குள்ளும் 7000 பன்சலை அல்லது  பிரிவுகள் உள்ளது. ஒட்டு மொத்த இலங்கையும் பிளவுபட்ட சமூகமாகும். எனவே அவர்கள் தங்களுக்குள் ஒற்றுமையைக் கொண்டுவர முஸ்லிம்களைப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் அது தவறான வழியாகும்.

எனவே மேலும் தாமதிக்காமல் நமது சமூகம் மற்றும் நாட்டை ஒற்றுமைப்படுத்த முன்வர வேண்டும். அதற்காக சிந்தித்து, திட்டமிட்டு செயற்பட வேண்டும்.  இதன் தொடக்கமாக நாம் எமது முஸ்லிம்களைப் பற்றி பொதுவெளியில் விமர்ச்சிப்பதை நிறுத்த வேண்டும்.

ஜமாத்துகள் வேண்டாம் முஸ்லிமாக மாத்திரம் வாழ்வோம்.

நன்றி

Translated by Ibnuasad
English:Firoz

 

முஸ்லிம்களுக்கு எதிராக பொதுமக்களை திசை திருப்ப மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. மைத்திரி, மஹிந்த, ரணில் உட்பட அனைத்து அரசியல்வாதிகளாலும் தேர்தலை இலக்காக கொண்டு ஆரம்பகட்ட பரிசோதனையாக மேற்கொள்ளப்பட்ட, 07.07.2019 அன்று பொதுபல…

முஸ்லிம்களுக்கு எதிராக பொதுமக்களை திசை திருப்ப மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. மைத்திரி, மஹிந்த, ரணில் உட்பட அனைத்து அரசியல்வாதிகளாலும் தேர்தலை இலக்காக கொண்டு ஆரம்பகட்ட பரிசோதனையாக மேற்கொள்ளப்பட்ட, 07.07.2019 அன்று பொதுபல…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *