Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நீ திரும்பிப் பார்ப்பதை தவிர், அது தோல்வியின் அடையாளமாகும் 

நீ திரும்பிப் பார்ப்பதை தவிர், அது தோல்வியின் அடையாளமாகும்

  • 82

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

உலகில் சாதனை படைத்த வல்லவர்கள் பலர் உள்ளனர். அவர்களின் வாழ்க்கை வரலாறுகள் நமக்கு உரமூட்டும் வரங்களகும். ஆனால் அவர்களின் வெற்றியின் சுவாரஸ்யங்களில் ஒவ்வொரு இரகசியங்கள் மறைந்துள்ளன. உன் கனவுகளை மாத்திரம் வைத்துக் கொண்டு உலகில் சாதனை படைக்க முடியாது. அதற்கு தன்னம்பிக்கைகயும், துணிவும், முற்சியும், பயிற்சியும் உன் உயிர்மூச்சாக வேண்டும்.

உலகில் சரித்திரம் படைத்த வல்லவர்களினுடைய வாழ்வில் பல அவமானங்களும், கஷ்டங்களும், ஏளனங்களும், புறக்கணிப்புக்களும் இருந்துள்ளன. அதனை துடைத்தெரிந்து தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றியதனாலயே! அவர்களுடைய பெயர்கள் இன்றும் உலகில் நிலையாய் மொழியப்படுகிறது. அவர்கள் தங்கள் முகங்களை திருப்பி இருந்தால் தோல்வியே அவர்களுக்கு மீதமாயிருக்கும். முகத்தை திருப்புதலானது உன் மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் ஒரு விடயமாகும்.

முகத்தை திருப்பிக் கொள்வது என்பதை நாம் தவறாக விளங்கிக் கொள்ளக்கூடாது. இஸ்லாமிய பார்வையில் ஒரு மனிதனை மதிக்காமல் தன் முகத்தை திருப்பிக் கொள்வதானது கர்வங் கொண்ட மனிதனுக்கு ஒப்பாக கருதப்படுகின்றது. கர்வங்கொண்டு முகத்தை திருப்புதலானது ஆகாத விடயமாகும். இது எம்மை குற்றவாளியாக இறைவன் முன்னிலையில் மாற்றிவிடும்.

நாம் கூற முனைவது என்னவென்றால் இதற்கு ஒரு உதாரணத்தைக் கூறி விளக்கலாம். உமது பாடசாலையில் ஒரு மாணவர் மன்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெறுகிறது. அல்லது உங்கள் ஊரில் உள்ள இளைஞர் சங்கத்தால் ஒரு நிகழ்ச்சி அரங்கமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வேளை அனைவருக்குமான திறந்த போட்டி நிழ்ச்சியில் ஒருவரை மேடையின் மீது வந்து ஒரு நிகழ்ச்சயை செய்யும்படி மேடையின் அறிவிப்பாளர் உங்களை அழைக்கிறார்.

அவ்வேளை நீ நிகழ்ச்சியை செய்ய முன்வருவாய் ஆனால் உன் பக்கத்தில் உள்ளவன் கேலி செய்வான் என்று உன் மனம் தடுக்கும், உன் மனம் சொல்லும் “நீ அமர்ந்து நிகழ்ச்சியை மாத்திரம் பார், பிறர் அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்கும்வேளையில் உனக்கென்ள வந்தது, உன் பக்கம் அமர்ந்திருப்பவன் ஒய்யாரமாய் இருக்க நீயும் அப்படியே பார்த்துவிட்டு செல் என்று உன் மனம் உன் ஆளுமையை ஏளனமாக்கும். இதற்கு காரணம் அறிவிப்பாளர் நிகழ்ச்சி  செய்ய கூப்பிடும் வே​ளையில் நீ பிறர் இருக்கின்றாரா? என்று தன்னை மறந்துதிரும்பிப்பார்த்ததன் விளைவேயாகும்.

நீயே உன் ஆற்றலை முன்வந்தசெய்திருந்தால் மேடையின் கைதட்டு முழக்கம் ​வெற்றியின் உத்​வேகத்தை உனக்கு உணர்த்தியிருக்கும். உன்னைத்தான் அறிவிப்பாளர் மேடைக்கு அழைக்கிறார் என்றும் மேடையின் கீழுள்ள பார்வையாளர்கள் உன் ரசிகர்கள் என்றும் உன்னை பாராட்டவே இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள் எல்லாம் என்றும் நீ நினைத்திருந்தால் அவர்களின்கேலிக்கைகள் உனக்கு இருக்காது.

“எதிலும் துணிந்து செல்பவனுக்கே முதல்வாய்ப்பும், முன்னுரிமையும், வெற்றியும் உரித்தாகும்”. அவ்வேளை பின்புறமாய் நீ திரும்ப்பிப் பார்த்ததால் பிறர் ரசிகனாய் நீ இருப்பாய், அல்லது நீ முன்வந்தால் உன் ரசிகர்காளாய் அவர்கள் இருப்பார்கள்.

உலகை தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்த வல்லவர்கள் யாவரும் பிறரை துளிகூட திரும்பி பார்க்கவில்லை. அவ்வாறு இருந்திருப்பின் அவர்களின் பெயர்கள் மனிமுத்தாய் மின்னாமல் கோடியோடு ஒன்றாக கலந்திருக்கும். ஒரு செயலை செய்ய தான் உள்ளேன் என மறந்து பிறர் இருக்கின்றார் என்று அவரை திரும்பிப்பார்ததால் உன் மனம் கோழைத்தனத்தை பரிசாக தரும்.

இதனைத்தான் உலகமே திரும்பிப்பார்த்த ஆட்சியாளன் அதைால்ப்ட் ஹிட்லர்(ADOLPT HITLOR) “உலகம் உன்னை திரும்பிப் பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பிப்பார்க்காதே!”. என்று கூறினார். இவரின் இந்த உணர்வு பூர்வமான மொழி அவரின் வாழ்க்கையே! மாற்றியமைத்து உலகத்தின் கவனம் அவர் பக்கம் ஈர்க்கப்பட்டது.

இவரின் இந்த வாசகத்தை அவரின் கொடூரச் செயலிற்கும், அவரின் கொடுங்கோல் ஆட்சிக்கும், கொ​லைகளுக்கும் ஒப்பிட்டு தவறான அர்த்தம் காணக்கூடாது. இதில் இருந்து நாம் விளங்க வேண்டியது. “நாம் ஒரு செயலை செய்ய ஆரம்பித்தால் அச்செயலை செய்து முடிக்கும் வரைக்கும் அதனோடு போராட வேண்டும், பிறர் அது பற்றி என்ன கூறுவார், அவரிற்கு அது திருப்தியளிக்குமா ? என்றெல்லாம் சிந்தித்து உன் செயலின் தோல்விக்கு நீயே காரணமாகக் கூடாது என்பதனை வலியுறுத்துகின்றது.

நம் செயல் ஒவ்வொன்றும் இறைவன் பால் உள்ளதாகும். அது நல்லதோ இல்லை கெட்டதோ அவனின் நாட்டமின்றி எதுவும் நடக்காது. அதற்கு நீயும் அவனுமே சாட்சியாகும். செய்வதை செம்மையாக செய்யவேண்டும். உன் செயலில் இறைவனின் திருப்தி இருந்தால் போதும். ஒருவேளை உன் செயல் தீயதாக அமைந்தால் அதற்காக அவனிடம் தான் நீ பாவமன்னிப்புத் கேட்க வேண்டும். அவன் தான் உன்னை மன்னிப்பவன், விமோசனம் தருபவன்  பிறர் அல்ல.

பிறர் திருப்திக்காக உன் செயலை செய்யாமல் விட்டுவிட்டு உன் திறமையை நீயே மலுங்கடித்து விடக்கூடாது. பிறர் திருப்தியை நாடுவதானது உலகில் எட்டமுடியாத இலக்காகும். காலம் முழுதும் நீ அவர்களுக்காய் வாழ்ந்து நன்மை புரிந்து விடு! ஒருவேளையில் நீ சிறிய தப்பு செய்தாலும் உன்னை நல்லவன் என்று போற்றிய வாய்கள் உன்னை சீர்கெட்டவன் என்று தூற்றும் நன்றியை மறந்து, இதுதான் மனிதனின் இயல்பு. நீ நல்லவனோ இல்லை கேட்டவனோ உன்னை பொருந்திக் கொள்ளக்கூடிய ஒரு சக்தி இறைவன் மட்டுமே! உன் செயலில் பிறர் கருத்தை பாராது துணிவுடன் செய்து முடிக்க வேண்டியது உன் கடமையாகும் .

உன்னால் எதுவும் செய்ய முடியாது, அது உனக்கு பொருத்தமானதல்ல, உனக்குள்ள தகுதியில் மாத்திரம் நீ இருக்கப்பார் என்று அசௌகரிய வார்த்தைகளைக் கூறும் உயிரற்ற பொம்​மைகளின் வார்த்தைகளை துளிகூட காதில் வாங்கக்கூடாது. அவர்கள் நண்பர்களாயினும் சரியே! ஏனெனில் துன்பத்தில் பங்கு கொள்பவனும், தோல்வியின் போது தன்னை தட்டித் தூக்கிவிடுபவனும், உன் இலக்கை அடைய நீ முயலும் போது உனக்கு ஏனியாய் இருப்பவனுமே உண்மையான நண்பனாவான் உன்னை தாழ்த்தி மதிப்பிடும் நண்பன் உனக்குத் தேவையே இல்லை.

உனக்குள்ள தகுதியை நீயே பிறருக்கு உணர்த்த வேண்டும். அது உன்னிடம் இல்லாவிடினும் அதனை நீ வரவ​ழைத்துக் கொள்! உலகில் யாரும் ஏழாம் அறிவு கொண்டு பிறக்கவில்லை. எல்லோரும் சமமேயாகும். அவர்களின் முயற்சியும், துணிவுமே! அவர்களை தகுதியடையவர்களாக மாற்றுகின்றது. ஆகவே! பிறர் சொல்லானது உன் வாழ்வை, உன் திறமையை தாழ்த்தும் திரும்பிபார்த்தலை தூக்கி எரிந்து உன் செயலில் முழு ஈடுபாடு கொண்டால் அதில் கரைகண்ட புலியாகி விடலாம்.

இவ்வாக்கியத்தை உன் உணர்ச்சிகளின் உற்சாகத்திற்கு உருவமாய்மாற அன்பளிக்கிறேன்.

“நீ திரும்பிப் பார்ப்பகாதே மானிடா, அது உனக்கு ஏழ்மை எண்ணத்தை உண்டாக்கும். அது தோல்வியின் அடையாளமுமாகும்”.
ALEESAN
SEUSL
வியூகம் வெளியீட்டு மையம்

உலகில் சாதனை படைத்த வல்லவர்கள் பலர் உள்ளனர். அவர்களின் வாழ்க்கை வரலாறுகள் நமக்கு உரமூட்டும் வரங்களகும். ஆனால் அவர்களின் வெற்றியின் சுவாரஸ்யங்களில் ஒவ்வொரு இரகசியங்கள் மறைந்துள்ளன. உன் கனவுகளை மாத்திரம் வைத்துக் கொண்டு உலகில்…

உலகில் சாதனை படைத்த வல்லவர்கள் பலர் உள்ளனர். அவர்களின் வாழ்க்கை வரலாறுகள் நமக்கு உரமூட்டும் வரங்களகும். ஆனால் அவர்களின் வெற்றியின் சுவாரஸ்யங்களில் ஒவ்வொரு இரகசியங்கள் மறைந்துள்ளன. உன் கனவுகளை மாத்திரம் வைத்துக் கொண்டு உலகில்…

14 thoughts on “நீ திரும்பிப் பார்ப்பதை தவிர், அது தோல்வியின் அடையாளமாகும்

  1. Thank you for sharing superb informations. Your website is so cool. I’m impressed by the details that you have on this blog. It reveals how nicely you perceive this subject. Bookmarked this web page, will come back for more articles. You, my friend, ROCK! I found just the information I already searched all over the place and simply couldn’t come across. What a great website.

  2. Hi, i read your blog occasionally and i own a similar one and i was just curious if you get a lot of spam feedback? If so how do you prevent it, any plugin or anything you can suggest? I get so much lately it’s driving me insane so any help is very much appreciated.

  3. fantastic put up, very informative. I ponder why the opposite experts of this sector don’t realize this. You should proceed your writing. I’m confident, you have a great readers’ base already!

  4. Pretty part of content. I just stumbled upon your website and in accession capital to claim that I acquire actually enjoyed account your weblog posts. Anyway I’ll be subscribing for your augment and even I success you get admission to consistently fast.

  5. I like this post, enjoyed this one regards for posting. “Good communication is as stimulating as black coffee and just as hard to sleep after.” by Anne Morrow Lindbergh.

  6. I am not sure where you’re getting your info, but great topic. I needs to spend some time learning much more or understanding more. Thanks for excellent information I was looking for this information for my mission.

  7. Very interesting details you have noted, thankyou for posting. “It’s the soul’s duty to be loyal to its own desires. It must abandon itself to its master passion.” by Rebecca West.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *