நேசி!

  • 17

ஒரு மலரை நாம் பார்த்தால் அதை பிடிக்கும் என்று ஒற்றை வரியில் சொல்வதற்கும் கொஞ்சம் தான் பிடிக்கும் என்று சொல்வதற்கும் வித்தியாசம் உண்டல்லவா?

பிடிக்கும் என்றால் அது முழுமையாக பிடித்திருக்க வேண்டும். கொஞ்சம் தான் பிடிக்கிறது என்றால் அதில் சிறு பக்கமாவது பிடிக்காமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்த சிறு பக்கம் பிடிக்காமல் போக ஏதாவது காரணங்கள் இருக்கலாம். அதன் முட்கள் கூட காரணமாகலாம். என்றாலும் அதற்காக அந்த மலர் என்றாவது வருத்தப்பட்டு கண்ணீர் சிந்தியதை கண்டதுண்டா?

எல்லோருக்கும் உன்னை பிடிக்க வேண்டும் என்பதில்லை. சிலருக்கு பிடிக்காமலும் போகலாம். ஆனால் உனக்கு எல்லோரையும் பிடித்திருந்தால் போதும். எல்லோருக்கும் உன்னை பிடிக்க வேண்டும் என்று நீ நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும். ஒரு சிலருக்கு பிடித்தது இன்னும் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். எனவே வேற்றுமைகளை நேசிக்க கற்றுக் கொள். நீ நேசி! நேசிக்கப்படுவாய்!

Noor Shahidha
SEUSL
Badulla

ஒரு மலரை நாம் பார்த்தால் அதை பிடிக்கும் என்று ஒற்றை வரியில் சொல்வதற்கும் கொஞ்சம் தான் பிடிக்கும் என்று சொல்வதற்கும் வித்தியாசம் உண்டல்லவா? பிடிக்கும் என்றால் அது முழுமையாக பிடித்திருக்க வேண்டும். கொஞ்சம் தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *